சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

தமிழக அரசியல்

சாதி வெறியர்களுக்கு தூக்கு!  உத்தமராசாவின் சவுக்கடி தீர்ப்பு

சாதி வெறியர்களுக்கு தூக்கு! உத்தமராசாவின் சவுக்கடி தீர்ப்பு

HOME SLIDER, kodanki voice, தமிழக அரசியல், வீடியோ
  சாதி வெறியர்களுக்கு தூக்கு! உத்தமராசாவின் சவுக்கடி தீர்ப்பு   https://youtu.be/7D2wij560JQ
சென்னையில் 1 லட்சத்து 57 ஆயிரம் போஸ்டர்கள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை!

சென்னையில் 1 லட்சத்து 57 ஆயிரம் போஸ்டர்கள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் 1 லட்சத்து 57 ஆயிரம் போஸ்டர்கள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை! ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சென்னையில் அரசு சுவர்கள் மற்றும் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதை மீறி போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றி விட்டு அங்கு வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு பகுதியிலும் எங்கெங்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன? என்பதை கண்காணித்து அவற்றை அகற்றி வருகின்றனர். சென்னையில் மொத்தம் 57 ஆயிரத்து 374 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரத்து 527 போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்று மட்டும் 210 இடங்களில் ஒட்டப்பட்டிருந்த 1,159 போஸ்டர்கள் அகற்றப...
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம்!

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம்! காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி தலைமையில் 19 கட்சிகள் பங்கேற்ற கூட்டணி கட்சிகள் கூட்டம் கடந்த ஆகஸ்டு 20-ந்தேதி காணொலி காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிதாக கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் உள்ளிட்ட மத்திய பா.ஜனதா அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து செப்டம்பர் 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் செப்டம்பர் 20-ந்தேதி (இன்று) மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவரும், முதல்-அமை...
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ஊரக தொழில்துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு, ஊராட்சி ஒன்றிய குழு, வார்டுகளில் வார்டு உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் வருமாறு: வார்டு எண். 3-ப.ராமமூர்த்தி, குன்னம் வார்டு எண்.4-எஸ்.பாலா (எ) பால்ராஜ், மொளச்சூர் வார்டு எண்.5-வி.அரி, நந்தம்பாக்கம் வார்டு எண்.6-படப்பை ஆ.மனோகரன் வார்டு எண்.7-கூட்டணி கட்சி ம.தி.மு.க.விற்கு ஒதுக்கீடு. செங்கல்பட்டு மாவட்டம் வார்டு எண்.1-ச.மனோகர், கவுல்பஜார் வார்டு எண்.4-கூட்டணி கட்சி காங்கிரசுக்கு ஒதுக்கீடு. வார்டு எண்.5-பூங்கோதை ராஜன், சிங்கப்பெருமாள் கோவில் வார்டு எண்.6-காயத்திரி அன...
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: அண்ணாமலை நம்பிக்கை!

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: அண்ணாமலை நம்பிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: அண்ணாமலை நம்பிக்கை! பிரதமர் நரேந்திர மோடியின் 71- வது பிறந்தநாளையொட்டி தமிழக பா.ஜ.க. தொழில் பிரிவு சார்பில் சென்னை கமலாலயத்தில் ‘75 அங்குல அளவிலான தொடுதிரை டிஜிட்டல் டி.வி.’ நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் எம்.என்.ராஜா, அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகம், பொதுசெயலாளர் கரு.நாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவில் தொடுதிரை டிஜிட்டல் டி.வி.யின் செயல்பாட்டை கே.அண்ணாமலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த டிஜிட்டல் டி.வி. மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் (பன்கி பாத்) கலந்துரையாடலை கேட்டு அவரிடம் பேசவும் முடியும். சமூக நீதியை பிரதமர் நரேந்திர மோடி நிலை...
தமிழகம் முழுவதும் இன்று சமூக நீதிநாள் கடைபிடிப்பு- மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!

தமிழகம் முழுவதும் இன்று சமூக நீதிநாள் கடைபிடிப்பு- மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழகம் முழுவதும் இன்று சமூக நீதிநாள் கடைபிடிப்பு- மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு! பெரியார் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 17-ந் தேதி) சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தலைமை செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கூறி இருந்தார். அரசு அலுவலகங்களில் இதை செயல்படுத்தும் விதமாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி இன்று சென்னை தலைமை செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சமூக நீதி நாள் உறுதிமொழியை மு.க.ஸ்டாலின் வாசிக்க அதை அங்கிருந்த அனை...
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து  உரிய உத்தரவுகளை  பிறப்பித்து வருகிறது. அவ்வகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ...
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை! கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாலை 3 மணியில் இருந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 8 அதிகாரிகள் தலைமையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஏலகிரி மலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது....
மேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

மேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு! பாராளுமன்ற மேல்சபையில் இரண்டு எம்.பி. இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களுக்கு வருகிற 4-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 22-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இருக்கும் பட்சத்தில் அக்டோபர் 4-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் அந்த 2 மேல்சபை எம்.பி. இடங்களையும் தி.மு.க. எளிதாக பெறும் என்பது ஏற்கனவே உறுதியானது. இந்த நிலையில் அந்த 2 இடங்களுக்கும் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவ...