வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

CINI NEWS

அமிதாப், ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் உட்பட 7 பிரபலங்களின் 7 படங்கள் டிஜிட்டலில் மே மாதம் ரிலீஸ்

அமிதாப், ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் உட்பட 7 பிரபலங்களின் 7 படங்கள் டிஜிட்டலில் மே மாதம் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில்  நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள  "பொன்மகள் வந்தாள்" படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர். சுப்பு பஞ்சுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐந்து இயக்குநர்கள் நடித்திருப்பதாலும் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் ஜோதிகா கூட்டணி மீண்டும்  இணைந்திருப்பதாலும் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது பொன்மகள் வந்தாள். இணையவாசிகள்,  இல்லப் பெண்மணிகள் உள்பட அனைத்து தரப்பினராலும் ரசிக்கக் கூடிய வகையில் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஜே...
சூர்யா தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் மே 29 ரிலீஸ்!

சூர்யா தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் மே 29 ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜெ தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் மே 29 ரிலீஸ்! சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரானா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். சுமார் 4.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை நல்ல லாபத்துக்கு பிரபல ஓடிடி நிறுவனத்திடம் விற்றுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே29-ந் தேதி ...
தந்தையின் நினைவு நாளில் நலிந்த கலைஞர்களுக்கு ரூ.25 லட்சம் பண உதவி – ஐசரி கணேஷ் வழங்கினார்

தந்தையின் நினைவு நாளில் நலிந்த கலைஞர்களுக்கு ரூ.25 லட்சம் பண உதவி – ஐசரி கணேஷ் வழங்கினார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தமிழக முன்னாள் துணை அமைச்சர்  மறைந்த ஐசரிவேலன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. தன் தந்தையின் நினைவு தினத்தையொட்டி ஆண்டுதோறும் மே 14ஆம் தேதி அன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இன் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி K. கணேஷ் அவர்கள், ஆயிரக்கணக்கான நலிந்த நாடகநடிகர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு அறுசுவை உணவும் புத்தாடைகளும் வழங்குவது வழக்கம். இவ்வாண்டு COVID 19 பெரும் தொற்றின் காரணமாக பல நாடக நடிகர்கள் வாழ்வாதாரத்திற்கு போராடுவதால் இவ்வாண்டு, ரூபாய் 25 இலட்சத்தினை அவரவர் வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் வீதம் 2500 கலைஞர்களுக்கு நேரடியாக செலுத்தியுள்ளார் டாக்டர் ஐசரி கே. கணேஷ். சென்ற மாதம் நடிகர் சங்கத்தின் நலிந்த நாடக நடிகர்களுக்காக ரூபாய் 10 லட்சத்தை நன்கொடையாக அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  ...
அம்மாவின் பெயரில் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் விஷால் நிவாரண உதவி!

அம்மாவின் பெயரில் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் விஷால் நிவாரண உதவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    சத்தமில்லாமல் தன் அம்மாவின் பெயரில் தான் நடத்தும் தேவி அறக்கட்டளை மூலம் இதுவரை 5000 பேருக்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய விஷால். இந்த கொரானா  பிரச்சனையால் பல்வேறு தன்னார்வலர்கள். சங்கங்கள், அமைப்புகள் சில மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அதேபோல் . நடிகர் விஷால் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள்,தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கிவருகிறார் இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணன்  செய்துவருகிறார், விஷால் மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். விஷால் தத்து எடுத்த தஞ்சாவூர் மாவட்...
சென்னையில் வைரஸ் பரவலுக்கு அஞ்சி ஊட்டிக்கு போன ராதாரவி குடும்பத்தோடு தனிமைபடுத்தப்பட்டார்?

சென்னையில் வைரஸ் பரவலுக்கு அஞ்சி ஊட்டிக்கு போன ராதாரவி குடும்பத்தோடு தனிமைபடுத்தப்பட்டார்?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கோத்தகிரியில் குடும்பத்துடன் தனிமைபடுத்தப்பட்ட ராதாரவி! ஊரடங்கை மீறினாரா? தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த படியே இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் தினம் தினம் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. இந்த சூழலில் தமிழக்த்திலேயே சென்னை தான் கருஞ்சிவப்பு எச்சரிக்கை வளையத்திற்குள் உள்ளது. ஊரடங்கில் சிக்கி சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு இ.பாஸ் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்லது நெருங்கிய உறவினர் மரணம் இதற்கு மட்டுமே பெரும்பாலான இ.பாஸ் வழஙகப்படுகிறது. அப்படியே அவர்கள் இந்த பாஸ் மூலமாக அவர்கள் செல்லும் ஊர்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள். சென்னையில் இருந்து செல்பவர்கள் கடுமையான பரிசோதனைக்கு பி...
ஊரடங்கில் மாஸ்க் அணியாமல் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய ஹீரோயின்!

ஊரடங்கில் மாஸ்க் அணியாமல் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய ஹீரோயின்!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    ஊரடங்கில் மாஸ்க் அணியாமல் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய ஹீரோயின்! ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு பழமொழி உண்டு... இத மெய்ப்பிக்கிற மாதிரி உலகமே கொரானா வைரஸ் தாக்கத்துல ஊரடங்கு போட்டு மக்கள் வீடடங்கி இருக்காங்க... இந்த நேரத்துல முகத்துல மாஸ்க் கூட போடாம நடு ரோட்டுல சிரிச்சிகிட்டே டான்ஸ் ஆடுனா... அதுவும் தான் ஆடுனது பத்தாதுன்னு காதல் புருசனையும் ஆட வைச்சா... இந்த டான்ஸ் போட்டது ஹீரோயின் ஸ்ரேயா தான். பிசியாக இருக்கும் போதே வெளிநாட்டு பிரபல தொழிலதிபர் ஆன்ட்ரே கோஷ்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகு ஸ்ரேயா கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார். ஊரடங்கு நாட்களில் எல்லா நடிகைகளையும் போல கவர்ச்சியான உடையில் பால்கனி வணக்கம் சொல்லி படம் வெளியிட்டார்... சமையல் செய்வது போல படம் வெளியிட்டார். இப்போது உலகின் பல நாடு...
பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடியில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கும் என்பதை பார்க்க காத்திருக்கிறேன் – கமல்

பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடியில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கும் என்பதை பார்க்க காத்திருக்கிறேன் – கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடியில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கும் என்பதை பார்க்க காத்திருக்கிறேன் - கமல் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மே 17-ம் தேதி நிறைவுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நேற்று பேசினார்.   அப்போது அவர் கூறுகையில், வலிமையான இந்தியாவை உருவாக்க இதுவே சிறந்த தருணம். நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 20 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள். இந்த பொருளாதார வளர்ச்சி திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும் என தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பதை எதிர்பார்ப்பேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதி...
ஊரடங்கு தளர்வில் வேகமெடுக்கும் கபடதாரி பணிகள்!

ஊரடங்கு தளர்வில் வேகமெடுக்கும் கபடதாரி பணிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    ’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது! நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு தரமான படங்களை தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். திரை விமர்சகராக தேசிய விருது பெற்றதோடு, சினிமாவின் விளம்பர நுணுக்கங்களையும் நன்கு அறிந்த தயாரிப்பாளராக திகழும் தனஞ்செயன், ‘கொலைகாரன்’ வெற்றியை தொடர்ந்து ‘கபடதாரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். சிபிராஜ், நந்திதா ஸ்வேதா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, பிரபல கன்னட நடிகை சுமன் ரங்கநாதன் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சினையால் ...
போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை செய்ய அனுமதி பெற பெப்சிக்கு வர வேண்டும் என்ற செல்வமணிக்கு கடும் எதிர்ப்பு!

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை செய்ய அனுமதி பெற பெப்சிக்கு வர வேண்டும் என்ற செல்வமணிக்கு கடும் எதிர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    தமிழ் சினிமாவின் சுப்பீரியர் ஆபீசர் ஆகலாம் என ஆந்திராவில் போய் அமர்ந்து கொண்ட பெப்சி தலைவர் செல்வமணியின் ஒரு அறிவிப்பு தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் புகைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. கொரானா ஊரடங்கால் முடக்கி வைக்கப்பட்ட தமிழ் திரையுலகில் மீண்டும் இயல்பு நிலை எப்போது திரும்பும் என்பது தெரியாமல் இருக்கிறது. இந்த சூழலில் அரசு பல்வேறு வகையான தளர்வுகளை அறிவித்து உள்ளது. இதன் காரணமாக திரையுலகில் போஸ்ட் புரொடக்சன் எனப்படும் ஷூட்டிங் பிந்தைய பணிகள் செய்ய அனுமதி தர தயாரிப்பாளர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று சில கட்டுப்பாடுகளுடன் போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அரசு அனுமதி அளித்தது. இந்த சூழலில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் செய்வதற்கு தயாராகும் நிறுவனங்கள் அதன் விவரங்களை பெப்சிக்கு அனுப்பி உரிய அனுமதி பெற்று பணிகளை தொடங்க வேண்...
எத்தனை பேரிடர் வந்தாலும் தலித் மக்கள் மீதான சாதி கொடுமைகள் ஒழியாது – ரஞ்சித் வேதனை

எத்தனை பேரிடர் வந்தாலும் தலித் மக்கள் மீதான சாதி கொடுமைகள் ஒழியாது – ரஞ்சித் வேதனை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    எல்லா பேரிடரிலும் ஒன்றாய் நிற்கிறோம்.. சாதிப் பேரிடரில் மட்டும் தனித்தனியாய் நிற்கிறோம். - பா.இரஞ்சித் அறிக்கை! உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும், தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம். அந்த பீதி இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. பல்வேறு இடர்பாடுகளை தாங்கி நாம் அனைவருமே கொரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நோய்தொற்றினால் நாம் இறந்துவிடுவோமோ என்கிற அச்சத்தை போக்குவதற்காக நமக்கு, "நோயுடனே வாழ பழகிக்கொள்வோம்" என்று அரசு தரப்பு இப்போது ந...