
கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இன்றைக்கு போல 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமாவும் நானும் நெருக்கமாக இருந்திருந்தால், அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன்.
கலைஞர் பலமுறை திருமாவிடம் திருமணம் செய்ய கூறினார்; கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான் - முதலமைச்சர் பேச்சு.
ஆனால், திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியையே திருமணம் செய்துகொண்டார்; கட்சி தொண்டர்கள்தான் அவருக்கு பிள்ளைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான்.
இந்த ஆட்சி இருப்பதே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் திராவிட கருத்தியல்களை நிறைவேற்றத்தான்; நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக இதை கூறுகிறேன்.
பாஜக உடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்துகொள்ளாது;
டெல்லிக்கு நான் செல்வது காவடி தூக்கவோ, கைகட்டி வாய் பொத்தி நிற்கவோ அல்ல; கலைஞர் பிள்ளை நான்.
...