வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

விளையாட்டு செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்- இந்திய வீரர் ரோனக் சத்வானி வெற்றி!

செஸ் ஒலிம்பியாட்- இந்திய வீரர் ரோனக் சத்வானி வெற்றி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள "போர் பாயிண்ட்ஸ்" ரிசார்ட் பிரமாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட்டின் முதல் போட்டி இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. இதில், மூன்று வெவ்வேறு அணிக்கு பங்கேற்றன. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்தியா பி அணிக்கு விளையாடிய ரோனக் சத்வானி வெற்றி பெற்றார். இந்தியாவின் ரோனக் சத்வானி 36 நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை வீழ்த்தினார். இதன் மூலம், ரோனக் இந்தியாவின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். மேலும், தனது வெற்றியை பகிர்ந்துக் கொண்ட ரோனக் பயிற்ச்சியாளருக்கு நன்றி தெரிவித்தார்....
செஸ் ஒலிம்பியாட் களை கட்டியது- பிரதமர் மோடி நாளை போட்டியை தொடங்கி வைக்கிறார்!

செஸ் ஒலிம்பியாட் களை கட்டியது- பிரதமர் மோடி நாளை போட்டியை தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. உக்ரைன் மீது அந்த நாடு போர் தொடுத்ததால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வேறு நாட்டுக்கு மாற்ற முடிவு செய்தனர். எந்த நாட்டில் நடத்தலாம் என்று ஆய்வுகள் நடந்த போது செஸ் ஆட்டத்தின் தாயகமாக கருதப்படும் தமிழகத்தில் இந்த போட்டியை நடத்தலாம் என்று தீர்மானித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இதுபற்றி தெரிவித்ததும் அவர் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையை அடுத்து உள்ள மாமல்லபுரத்தில் நடத்தலாம் என்று உறுதி அளித்தார். இந்த போட்டிக்காக உடனடியாக அவர் 100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உற்சாக மூட்டினார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கும் வண்ணம் நடத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது. தமிழக அரசின் 15 துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து...
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் இவர் இந்த ஆண்டு டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார். 2019-ம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல பென் ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் இன்று அறிவித்துள்ளார். நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அவர் கூறியுள்ளார். தனது ஓய்வு முடிவு குறித்து அவர் கூறுகையில்:- நாளை டர்ஹாமில் நடக்கும் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்காக எனது கடைசி ஆட்டத்தை விளையாடுகிறேன். இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு நம்பமுடியாத கடினமான முடிவாகும். இங்கிலாந்துக்காக எனது நண்பர்களுடன்...
டாஸ் வென்ற இங்கிலாந்து – இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி!

டாஸ் வென்ற இங்கிலாந்து – இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி!

HOME SLIDER, NEWS, sports, சினி நிகழ்வுகள், விளையாட்டு செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சவுத்தம்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டி20 போட்டியில் 49 ரன் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நாட்டிங்காமில் நடக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான். இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன் ), டேவிட் மாலன், பிலிப் சால்ட், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ...
விம்பிள்டன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!

விம்பிள்டன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் கேமரூன் நூரியுடன் மோதினார். இதில் முதல் செட்டை கேமரூன் நுரி 6-2 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் 8-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் உலகின் 2-ம் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோத இருந்தார். ஆனால், வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடால் அரையிறுதியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், நிக் கிர்கியோஸ் ஆகியோர் மோதுகின்றனர்....
நார்வே செஸ் தொடர்: 3-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி!

நார்வே செஸ் தொடர்: 3-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
நார்வேயில் நடைபெற்று வரும் பிலிட்ஸ் சென்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். இத்தொடரில் 10 வீரர்கள் மோதும் கிளாசிக்கல் சுற்றில் விளையாடி வரும் விஸ்வநாதன் ஆனந்த், முதல் இரண்டு சுற்றுக்களில் பிரான்ஸ் வீரர் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் மற்றும் வெசெலின் டோபலோவ் (பல்கேரியா) ஆகியோரை தோற்கடித்தார். இந்நிலையில்   இன்று நடைபெற்ற கிளாசிக்கல் பிரிவில் மூன்றாவது சுற்றில் சீனாவின் வாங் ஹாவை ஆனந்த் வீழ்த்தினார். இதன்மூலம் 3வது வெற்றியை பதிவு செய்த ஆனந்த், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்....
காதலியை கரம் பிடித்த தீபக் சஹார்!

காதலியை கரம் பிடித்த தீபக் சஹார்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்திய அணி மற்றும் ஐபிஎல்லில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக  திகழ்ந்து வருபவர் தீபக் சாஹர். இவர் வேகப்பந்துவீச்சாளராக இருந்தாலும், அணிக்கு தேவையான நேரத்தில் சிறப்பாக பேட் செய்து  ஆல்ரவுண்டரை போல செயல்பட்டு வருகிறார். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணிக்கு தேர்வான இவர், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணியின் பிளே ஆப் போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஜெயாவும் காதலுக்கு மைதானத்திலே சம்மதம் தெரிவித்த நிலையில், இவர்கள் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தனர். இந்நிலையில் தீபக் சஹார், தனது காதலி ஜெயாவை ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டனர். இதில் ராகுல் ச...
ஹர்த்திக் பாண்டியாவை புகழ்ந்த வீரேந்திர சேவாக்!

ஹர்த்திக் பாண்டியாவை புகழ்ந்த வீரேந்திர சேவாக்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
15-வது ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் சுற்று இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த ஆண்டு தொடரில் பலம் வாய்ந்த அணிகளாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும்  கடைசி 2 இடங்களை பெற்று வெளியேறின. இளம் கேப்டன்களை கொண்ட குஜராத், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ, பெங்களூர் அணி  குவாலிஃபயருக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் ஹர்த்திக் பாண்டியாதான் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் என்னை மிகவும் கவர்ந்தது ஹர்த்திக் பாண்டியா தான். அவருக்கு சிறப்பான தலைமை பண்பு இருக்கும்  என நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் பேட்டிங...
பிளேஆப் சுற்றில் நுழையும் 4வது அணி டெல்லியா, பெங்களூரா?

பிளேஆப் சுற்றில் நுழையும் 4வது அணி டெல்லியா, பெங்களூரா?

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட போட்டியில் நேற்றுடன் 68 போட்டிகள் முடிந்துவிட்டன. இன்னும் 2 லீக் ஆட்டமே எஞ்சி உள்ளன. குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. குஜராத் 20 புள்ளியுடன் முதல் இடத்தை பிடித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் 18 புள்ளியுடன் 2ம் இடத்திலும், லக்னோ 18 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் , 4 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 5 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. இந்நிலையில், பிளே ஆப் சுற்றில் நுழையும் 4வது அணிக்கான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் உள்ளன. பெங்களூரு அணி 16 புள்ளிகளுடனும், டெல்லி அணி 14 புள்ளிகளுடனும் உள்ளன. ட...
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர்-அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர்-அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், ஜப்பானைச் சேர்ந்த நம்பர் 1 வீராங்கனை அகானே யமகுச்சியும் மோதினர். தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து முதல் செட்டை 21 -15 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அகானே யமகுச்சி 22 - 20 என வெற்றி பெற்றார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் 21 -13 என கைப்பற்றி அரை இறுதிச்சுற்றுக்க்கு முன்னேறினார். இன்று நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் பிவி சிந்து, சீன வீராங்கனை யு பெய் சென்னுடன் மோதுகிறார். ...