வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

Assembly news

சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு

சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு

Assembly news, HOME SLIDER, செய்திகள்
      சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதையடுத்து இன்று 2-வது நாள் சட்டப்பேரவை கூட்டம்  தொடங்கியது. முன்னாள் கவர்னர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 14 பேருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படது. மனித உரிமை செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை கேள்வி நேரம் தொடங்கியது . முதல் கேள்வியாக பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் கேள்விக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். மீன...
சட்டப்பேரவையை அவமதிக்கும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறோம்” – விடுதலைச் சிறுத்தைகள்

சட்டப்பேரவையை அவமதிக்கும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறோம்” – விடுதலைச் சிறுத்தைகள்

Assembly news, HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சட்டப்பேரவையை அவமதிக்கும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறோம்” விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு “ அனைத்துக்கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய The Undergraduate Medical Degree Courses Bill, 2021 ஐ, குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் சட்டப் பேரவையை மேதகு ஆளுநர் சிறுமைப்படுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசையும் அதைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்களையும், அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதிக்கிற ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புறக்கணித்து வெளிநடப்புச் செய்கிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்...
மூத்த ஆய்வாளர்களுக்கு பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகள்

மூத்த ஆய்வாளர்களுக்கு பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகள்

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மூத்த ஆய்வாளர்களுக்கு பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகள் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 10.9.2021 அன்று “மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்த மூத்த ஆய்வாளர்களான மறைந்த பெரியசாமித்தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி. ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த ஆய்வாளர்களான சீனி விசுவநாதன், பேராசிரியர் முனைவர் மணிகண்டனுக்கும் தலா 3 லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டு சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மகாகவி பாரதியார் மூத்த ஆய்வாளர்களான ...
தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழகத்தினை தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்ய இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைகளை ஊக்குவிக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இவ்வரசு பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிட்கோ தொழில்மனைகளின் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தொழில்முடக்க நிலையிலிருந்து தொழில்முனைவோர் மீளவும் வழிவகை செய்யும் பொருட்டு தற்போது, தொழில்மனைகளின் விலையை குறைத்த...
உத்தரபிரதேசத்தில் 3 மெகா திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

உத்தரபிரதேசத்தில் 3 மெகா திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
உத்தரபிரதேசத்தில் 3 மெகா திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்! உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அந்த மாநிலத்துக்கு வாரம் ஒருமுறை செல்லும் வகையில் பயண திட்டங்களை அமைத்துள்ளார். புதிய திட்டங்களை அறிவிப்பதோடு நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து மக்களை கவர்ந்து வருகிறார். அந்த வரிசையில் பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக உத்தரபிரதேச மாநிலம் சென்றுள்ளார். கோரக்பூரில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் 3 மெகா திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அந்த 3 திட்டங்களும் 9 ஆயிரத்து 500 கோடி மதிப்புடையது. கோரக்பூர் மேம்பாட்டு திட்டங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த 3 திட்டங்களில் உரத் தொழிற்சாலை திட்டம் ரூ.8 ஆயிரத்து 603 கோடி செலவில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த உரத் தொழிற்சாலை மூலம் கோரக்பூர் மாவட...
டெல்லியில் இன்று இந்திய-ரஷிய உச்சி மாநாடு: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது!

டெல்லியில் இன்று இந்திய-ரஷிய உச்சி மாநாடு: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் இன்று இந்திய-ரஷிய உச்சி மாநாடு: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது! இந்திய-ரஷிய உச்சி மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிற்பகலில் டெல்லி வருகிறார். விமான நிலையத்தில் இருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்துக்கு செல்கிறார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் இரு தலைவர்களும், தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகளும் இடம்பெறுகின்றனர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி-புதின் இடையேயான நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டுக்கு இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. மேலும் இந்த பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையி...
ராகுல் தலைமை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கும் சரத்பவார்-மம்தா!

ராகுல் தலைமை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கும் சரத்பவார்-மம்தா!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராகுல் தலைமை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கும் சரத்பவார்-மம்தா! மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கையில் மேற்கு வங்காள முதலமைச்சரும், திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக மும்பையில் இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவர் சந்தித்தார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இவரும் விவாதித்தனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய சரத்பவார்,  வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஆலோசித்ததாகவும் வலிமையான ஒரு மாற்றுத் தலைமை தேவை குறித்து விவாதித்ததாகவும் கூறினார். மம்தா பானர்ஜியுடனான விவாதம் தங்களுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆளும் கூட்டணிக்கு மாற்றாக தேசிய அளவில் ஒருமித்த கருத்து கொண்ட கூட்டுத்தலைமை அமைய வேண்டும் எ...
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நாளை ஆளுநர்கள் மாநாடு!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நாளை ஆளுநர்கள் மாநாடு!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நாளை ஆளுநர்கள் மாநாடு! மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்கான மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு 50-வது மாநாடு நடந்தது. அதன்பின், கொரோனா பரவலால் கடந்த ஆண்டு இந்த மாநாடு நடக்கவில்லை. இந்தியாவில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று குறைந்து வருவதால் இந்த மாநாடு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுக்கான 51-வது மாநாடு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நாளை நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். அவரது தலைமையில் நடைபெறும் 4-வது மாநாடு இது....
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு- மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுடன் ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு- மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுடன் ஆலோசனை!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு- மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுடன் ஆலோசனை! தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் 47 சதவீதம் வரை மழை கிடைக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதே நிலையில் இந்த ஆண்டும் தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒக்கி, வர்தா, கஜா, நிவர் உள்ளிட்ட புயல்களால் தமிழகத்தில் அதிக அளவில் சேதங்கள் ஏற்பட்டது. இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர் நிலைகள், நீர்வழித்தடங்கள், ஆறுகள் தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழை நீர் வடிகால்கள் தூர்வாரும் பணியும் நடைபெற்...
மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற சிறந்த முதல்-மந்திரிகளில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்!

மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற சிறந்த முதல்-மந்திரிகளில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற சிறந்த முதல்-மந்திரிகளில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்! இந்தியாவில் முதல்- அமைச்சர்களின் செல்வாக்கு குறித்து ‘சி.என். ஒ.எஸ். ஒபினியோம்” என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் நாட்டில் சிறந்த முதல்- அமைச்சர்களாக 5 முதல்-அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பெற்றுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்திய அமைப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்   நாட்டிலேயே மிகவும் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல்- அமைச்சராக திகழ்கிறார். இந்த கணக்கெடுப்பில் அவர் பெற்றுள்ள நிகரப் புள்ளிகள் 67 ஆகும். அவருடைய மாநிலத்தில் (தமிழ்நாட்டில்) கணக்கெடுப்பு நடத்தப்பட்டவர்களில் 79 சதவீதம் பேர் அவருடைய தலைமையில் திருப்தி அடைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர். 1...