வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

MOVIES

போதை மருந்து கடத்தும் நயன்தாரா

போதை மருந்து கடத்தும் நயன்தாரா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தில் நயன்தாரா போதை மருந்து கடத்தும் பெண்ணாக நடிக்கிறார். அனிருத் அளித்திருக்கும் பேட்டியில் இதை சொல்லி இருக்கிறார். மேலும் அனிருத் கூறுகையில், ’ஒரு பெண் தன் வறுமையைப் போக்க போதை மருந்துக் கடத்தல் செய்து வாழலாம் என்று முடிவு செய்கிறார். என்ன ஆகிறது என்பதுதான் கதை. இதை நெல்சன், பிளாக் ஹியூமர் பாணியில் காமெடியாப் பண்ணியிருக்கார். நயன் எனக்கு நெருக்கமான தோழி. சமயத்தில் விருந்து மாதிரி சாப்பாடு சமைத்து அனுப்புவார். அவருக்கு என் இசை பிடிக்கும். ‘நான் உங்க பெரிய விசிறி என்று சொல்வார். அவங்க வாழ்க்கையில் அவ்வளவு ஏற்ற இறக்கங்கள். ஆனால் இன்னும் முன்னணி கதாநாயகியாகவே இருக்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய வி‌ஷயம்’ என்று சொல்லியிருக்கும் அனிருத் விரைவில் மீண்டும் தனுஷுடன் இணைந்து ஒரு படம் பண்ணப்போகிறார். ஜனவரி மாதம் படம் து...
இணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரம்

இணையத்தில் பட்டைய கிளப்பிய விக்ரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஹரி இயக்கிய இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் கடைசி கட்ட படப்படிப்பு காரைக்கடியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். மேலும் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வருகிற 17-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்காகி இருக்கிறது. தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன...
முதலில் அவர்கள் சம்பளத்தை சொல்லட்டும் – ரகுல்ப்ரீத் சிங்

முதலில் அவர்கள் சம்பளத்தை சொல்லட்டும் – ரகுல்ப்ரீத் சிங்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் 40 நாட்களுக்கு மேல் நடந்த வேலை நிறுத்தத்துக்கு பிறகு நடிக, நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நடிகை ரகுல்ப்ரீத் சிங், ‘முதல்ல நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குறாங்கனு வெளிப்படையா சொல்லட்டும். அதுக்கப்பறம் நடிகைகளோட சம்பளத்தைக் கேளுங்க. கண்டிப்பா நடிகர்களைவிட நாங்க பல மடங்கு குறைவாதான் சம்பளம் வாங்குறோம். ஆனா, சினிமாத் துறையினர் எல்லாருமே வருமானவரியைச் சரியா கட்டுறோம். அதனால, சம்பளத்தை வெளியே சொல்றதுல எந்தவிதத் தவறும் இல்லை. எல்லா நடிகர்களும் முன்வந்து சொல்லட்டும், நானும் சொல்றேன்!’ என்று அதிரடியாக சொல்லி இருக்கிறார். சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் ரகுல்ப்ரீத் சிங்கே நடிகர்களின் சம்பளம் பற்றி சர்ச்சையான கருத்தை வெளியிட்டு இருக்கிறார்....
சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா

சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் இடம் பெற்று உள்ள ‘ஹை ஆன் லவ்..’ பாடல் மூலம் தன்னுடைய பெருகி வரும் ரசிகர் பட்டாளத்தை மேலும் பெருக்கிக் கொண்ட யுவன் ஷங்கர் ராஜா, தன்னுடைய சகோதரர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் (இளையராஜாவின் அண்ணன் ஆர் டி பாஸ்கரின் மகன்) நடிக்கும் பேய் பசி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார். படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் கவினயம். சூது கவ்வும், தீயாய் வேலை செய்யணும் குமாரு, ஆகிய படங்களுக்கு இவர் இணை கதை ஆசிரியர் என்பது குறிப்பிடதக்கது. யுவனின் நடனத்தை பற்றி அவர் கூறியதாவது, ‘இந்த படம் ஒரு திரில்லர் படம். திரைக்கதையில் பாடல்கள் பொருந்தாது என்று கருதி பாடல்களை தவிர்த்து விட்டோம். இந்த கதைக்கு பின்னணி இசை கோர்ப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்ததால் யுவன் ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்து ...
இளம்பெண் இசை அமைத்துள்ள  ” ஆண்டனி “

இளம்பெண் இசை அமைத்துள்ள ” ஆண்டனி “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
  இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் " ஆண்டனி " .இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) இசை அமைத்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு S .A சந்திரசேகர் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் . இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் "லால் " ,நிஷாந்த் ,வைசாலி ,நடிகை ரேகா ,சம்பத் ராம் ,'வெப்பம் ' ராஜா.சேரன் ராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த விழாவில்  பேசிய S .A சந்திரசேகர் பேசியவை " இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயது உடையவர்கள்.படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது. எடிட்டிங் மிக அருமையாக உள்ளது.படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் .அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பேசினார். இந்த விழாவில்  ஜெயசித்ரா அவர்கள் பேசியவை " பட...
கேன்ஸ் பட விழாவில் கூண்டுக்குள் நூதன போராட்டம் நடத்திய மல்லிகா ஷெராவத்

கேன்ஸ் பட விழாவில் கூண்டுக்குள் நூதன போராட்டம் நடத்திய மல்லிகா ஷெராவத்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பாலியல் குற்றங்கள் உலகளாவில் அதிகரித்துள்ளன. ஹாலிவுட் படங்களிலும் இந்திய திரையுலகிலும் நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து துன்புறுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது. குழந்தைகளும் இந்த கொடுமைகளில் சிக்குகிறார்கள். பாலியல் வன்மங்களுக்கு உள்ளாக்கி அவர்களை கொலை செய்யும் பாதகங்களும் நடக்கின்றன. இதற்கு எதிரான குரல் தற்போது ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது. ஹாலிவுட் நடிகைகள் சமூக வலைத்தளத்தில் ‘மீடூ’ இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டியின் போராட்டத்துக்கு பிறகு திரையுலக பெண்களை பாதுகாக்க புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் வில்லியாக வந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த பிரான்சில் நடந்த கேன்ஸ் பட விழாவில் பூட்டப்பட்ட கூண்டுக...
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா… – விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி

எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா… – விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்திற்கு கனா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நடிகர் விஜய், அருண்ராஜா காமராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விஜய் வாழத்துக்கு நன்றி தெரிவித்து அருண்ராஜா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 'என்னை உற்சாகப்படுத்தவும் பாராட்டவும் தவறாத எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா. காலை எழுந்தவுடன் உங்களது வாழ்த்தை பார்த்தேன். உங்களது இந்த ஊக்கமான வார்த்தைகள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளா...
ஐஸ்வர்யாராய் படத்தில் என்னை தவறாக சித்தரித்துவிட்டனர் – ரிச்சா சத்தா வேதனை

ஐஸ்வர்யாராய் படத்தில் என்னை தவறாக சித்தரித்துவிட்டனர் – ரிச்சா சத்தா வேதனை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் படத்தில் ஷகிலா வேடத்தில் நடிப்பவர் ரிச்சா சத்தா. இந்தி திரையுலகில் போராடி முன்னுக்கு வந்துள்ள இவர் ஐஸ்வர்யாராயுடன் இணைந்து சரப்ஜித் இந்தி படத்திலும் நடித்து இருந்தார். சினிமா வாழ்க்கை குறித்து ரிச்சா சத்தா அளித்த பேட்டி வருமாறு:- “நான் பணம் சம்பாதிக்கும் ஆசையில் நடிக்க வரவில்லை. என்னுடையை ஒவ்வொரு படத்திலும் திறமையை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதைதான் விரும்புகிறேன். கதாபாத்திரங்கள் மூலம் தனி முத்திரை பதிக்க போராடுகிறேன். கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்றுதான் பார்ப்பேனே தவிர எவ்வளவு பணம் வருகிறது என்று கணக்கு பார்க்க மாட்டேன். அப்படிப்பட்ட என்னை ஐஸ்வர்யாராய் நடித்துள்ள சரப்ஜித் படத்தில் தவறாக சித்தரித்து விட்டனர். அது வேதனையை ஏற்படுத்தியது. அந்த படத்தில் எதற்காகத்தான் நடித்தோமோ? என்று நினைக்க...
சூர்யா ஜோடியாகும் சாயிஷா சய்கல்

சூர்யா ஜோடியாகும் சாயிஷா சய்கல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே.', படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார். இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சூர்யா ஜோடியாக நடிக்க, சாயிஷா சய்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், கேவ்மிக் ...
ராஜமவுலி படத்தில் கீர்த்தி சுரேஷ்

ராஜமவுலி படத்தில் கீர்த்தி சுரேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகையர் திலகம் படத்திற்காக பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அண்மையில் வேறு எந்த தென்னிந்திய நடிகையும் இந்த அளவுக்கு பாராட்டுகளை பெற்றது கிடையாது. கீர்த்தி சுரேசின் நடிப்பை முதலில் பாராட்டியவர் எஸ் எஸ் ராஜமவுலி. இப்போது தான் இயக்கவிருக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜமவுலி அடுத்து ஜூனியர் என்.டிஆரையும், ராம்சரணையும் இணைத்து வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். கடந்த ஞாயிறு இரவு நடிகர் அல்லு அரவிந்த் கொடுத்த இரவு விருந்து ஒன்றில் ராஜமவுலியும், கீர்த்தி சுரேஷும் சந்தித்துள்ளனர். அப்போது இதுகுறித்து பேசியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் இப்போது தமிழில் விஜய்யுடன் ஒரு படமும், விஷாலுடன் சண்டக்கோழி 2 படத்திலும், விக்ரமுடன் சாமி 2 படத்திலும் நடித்து வருகிறார். எனவே விரைவில் ராஜமவுலி படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்...