Saturday, June 6
Shadow

HOME SLIDER

உலகம் முழுவதும் போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது: போப் ஆண்டவர் பிரான்சிஸ்

உலகம் முழுவதும் போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது: போப் ஆண்டவர் பிரான்சிஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வாடிகன் நகரில் உள்ள செயின்பீட்டர் சதுக்கத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:- உலகம் முழுவதும் இன்று போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மத்திய கிழக்கிலும், ஆப்ரிக்காவிலும் பதற்றம் நிலவி வருகிறது. அதில் பாதிக்கப்படும் சிறு குழந்தைகளின் முகத்தில் தெரியும் வேதனை மிகவும் பாதிக்கிறது. எனவே, போர் பதற்றத்தை தணிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதியை ஏற்படுத்த வேண்டும். அது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே சாத்தியமாகும். கொரிய தீபகற்பத்தில் நிலவும் முரண்பாடுகளை களைய வேண்டும். அப்போது தான் பரஸ்பரம் நம்பிக்கை மேம்படும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், சிரியா, ஏமனில் ந
2016 தேர்தலில் 2,928 இம்முறை வெறும், 1,417 ஓட்டுகளை மட்டுமே பா.ஜ.,1,511 ஓட்டுகள் போனது எங்கே? தீவிரமாய் தேடுது

2016 தேர்தலில் 2,928 இம்முறை வெறும், 1,417 ஓட்டுகளை மட்டுமே பா.ஜ.,1,511 ஓட்டுகள் போனது எங்கே? தீவிரமாய் தேடுது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
1,511 ஓட்டுகள் போனது எங்கே? தீவிரமாய் தேடுது தமிழக பா.ஜ., கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசலும், களத்தில் முன்கூட்டியே இறங்கி வேலை செய்யாததாலும், ஆர்.கே.நகரில், பா.ஜ., தலைகுனியும் அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த முறை கிடைத்ததில், 1,511 ஓட்டுகள், இந்த முறை எங்கே போயின என்பது தெரியாமல், அக்கட்சியினர், தற்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில், அரசியல் மேடைகளில், 'கோட்டையில் தாமரை மலரும்' என, பா.ஜ., தலைவர்கள் முழங்கி வருகின்றனர். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வெறும், 1,417 ஓட்டுகளை மட்டுமே பெற்றிருப்பது, கட்சியினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 2016 தேர்தலில், அங்கு பா.ஜ., 2,928 ஓட்டுகளை பெற்றிருந்தது. ஆனால், இம்முறை, 'நோட்டா'வை விட குறைவாக பெற்றுள்ளது. இது, தொண்டர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி உள்ளது. இது குறித்து, தமிழக பா.ஜ.,வினர் கூறியதாவது: சென்னை, ஆர்
தி.மு.க. மகளிர் அணியில் பணியாற்றுவதையே விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி.

தி.மு.க. மகளிர் அணியில் பணியாற்றுவதையே விரும்புகிறேன்: கனிமொழி எம்.பி.

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2-ஜி வழக்கில் விடுதலையான தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சென்னை பெரியார் திடலில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருக்கு கி.வீரமணி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ‘தந்தை பெரியார்’ புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார். இந்த சந்திப்புக்கு பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘என்னுடைய கொள்கைகளுக்கும், எனக்கும் உறுதுணையாக, உறுதியாக நான் என்னுடைய பாசறையாக நினைக்கக் கூடிய பெரி யார் திடலுக்கு வந்து, கி.வீர மணியை சந்தித்து வாழ்த்து பெற்றது எனக்கு பெருமையான ஒன்று ஆகும்.’ என்றார். இதையடுத்து அவரிடம், தி.மு.க.வில் உங்களுக்கு வேறு பதவிகள் கொடுப்பார்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கனிமொழி எம்.பி. ‘எனக்கு கொடுத்து இருக்கிற பத வியே மகிழ்ச்சியான பதவி. தொடர்ந்து மகளிர்
அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ம் தேதி அறிவிப்பேன் – ரஜினிகாந்த்

அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ம் தேதி அறிவிப்பேன் – ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. கடந்த முறை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது களத்தில் இறங்குவேன்” என்று அறிவித்தார். எனவே, ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி புதிய அரசியல் கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றும் அறிவிப்பு வரவில்லை. இந்த நிலையில், இன்று (26-ந்தேதி) முதல் ரஜினி மீண்டும் ரசிகர்களை 31-ந் தேதி வரை சந்திக்கிறார். இதில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ஆம் தேதி அறிவிப்பேன் என்றார். ரஜினி பேசுகையில்,  ரசிகர்களை சந்திப்
12 வருடங்களுக்கு முன் வளையல் போட்ட ஜெ… இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவின் மலரும் நினைவுகள்…!

12 வருடங்களுக்கு முன் வளையல் போட்ட ஜெ… இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவின் மலரும் நினைவுகள்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வளைக்காப்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா அவருக்கு வளையல் போடும் போட்டோக்களை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் ஜெயலலிதாவுக்கு சொந்தமான திராட்சை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்திற்கு ஆதரவு கொடுத்த ஜெயலலிதா சசிகலாவோடு சேர்த்து ஜெயராமனின் மனைவி இளவரசி, அவரது மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்டோரை போயஸ்கார்டனில் தங்க வைத்துக்கொண்டார். இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு கிருஷ்ணப்பிரியாவுக்கு ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் வளைக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த போட்டோக்களை கிருஷ்ணப்பிரியா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஆடம்பரமில்லாமல் எளிதான சேலையில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் ஜெயலலிதா. அவரை பார்த்து கிருஷ்ணப்பிரியா பேசுவது போன்றுள்ளது போட
திமுக, தினகரன் கூட்டு எனும் வாதம் தோற்றவர்களின் புலம்பல்: விஜயகாந்த் விமர்சனம்

திமுக, தினகரன் கூட்டு எனும் வாதம் தோற்றவர்களின் புலம்பல்: விஜயகாந்த் விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சென்னை சின்னமலை தேவாலயத்தில் கிருத்துமஸ் தினவிழா கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை விஜயகாந்த் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக தோல்விக்கு திமுகவும், டிடிவி தினகரனும் கூட்டுச்சேர்ந்து சதி செய்து வென்றதாக குற்றம் சாட்டப்படுவது பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த விஜய்காந்த் அது தோற்றவர்களின் புலம்பல் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள், தோற்றவர்கள் எதாவது ஒன்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். தினகரன் வென்றுவிட்டார் அல்லவா அப்படித்தான் சொல்வார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்த வெற்றிடம் டிடிவியால் நிரப்பப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அதை பொதுத்தேர்தல் தான் தீர்மானிக்கும். உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டு என்பதை அப்போது தான் முடிவு செய்வோம் என்று விஜயகாந்த் தெரிவித்தார்
சொகுசு கார் வரி ஏய்ப்பு வேலைக்காரன் பட வில்லன் கைது…!

சொகுசு கார் வரி ஏய்ப்பு வேலைக்காரன் பட வில்லன் கைது…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் நடிகைகள்  சொகுசு கார்களை  போலியாக முகவரி கொடுத்து புதுவை போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சொகுசு கார்கள் வாங்கி வேறு மாநிலத்தில் பதிவு செய்து இருந்தாலும் காரை கேரளாவிலும் பதிவு செய்யவேண்டும் என்று அங்கு வாகன சட்டம் உள்ளது. இந்த விவகாரத்தில் நடிகை அமலாபால், பகத் பாசில், சுரேஷ் கோபி ஆகியோர் மீது  வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கேரள அதிகாரிகள் புதுவை போக்குவரத்து அதிகாரிகளுடன் விசாரித்தனர். இந்தநிலையில் மலையாள நடிகர் பகத் பாஷிலும் புதுச்சேரி லாஸ்பேட்டை, புதுப்பேட்டை முகவரியை கொடுத்து காரை பதிவு செய்து இருப்பது அம்பலமாகி உள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இது போன்ற மோசடியில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி யார், யார் ஈடுபட்டுள்ளனர்? என்பது குறித்து அவர்கள் விசாரிக்க தொடங்கி உள்ளனர். இதனால் நடிகர்,
ஆர்.கே.நகரில் நோட்டாவைவிட குறைவான வாக்கு பெற்ற பா.ஜனதா, ஜிக்னேஷ் மேவானி டுவிட்டரில் கேலி

ஆர்.கே.நகரில் நோட்டாவைவிட குறைவான வாக்கு பெற்ற பா.ஜனதா, ஜிக்னேஷ் மேவானி டுவிட்டரில் கேலி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 3,860 வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயத்துக்கு 4-வது இடமும், 1,417 வாக்குகள் பெற்ற பாரதீய ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு 5-வது இடமும் கிடைத்தது. பாரதீய ஜனதா வேட்பாளரை விட நோட்டாவுக்கு (யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்) அதிக வாக்குகள் கிடைத்து இருந்தது. அதாவது நோட்டாவுக்கு 2,373 ஓட்டுகள் கிடைத்து இருந்தன. டி.டி.வி.தினகரனை எதிர்த்து போட்டியிட்டவர்களில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர மருது கணேஷ் (தி.மு.க.), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்), கரு.நாகராஜன் (பாரதீய ஜனதா) உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் ‘டெபாசிட்’ இழந்தனர். ஆர்.கே.நகரில் பாரதீய ஜனதா வாங்கிய வாக்கை கேலி செய்து உள்ள குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜிக்னேஷ் மேவானி, “உலகின் மிகப்பெரிய மிஸ்டுகால் கட்சியான பாரதீய ஜனதா, தமிழகத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான மிஸ்டுகால்களை பெற
நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கியது

நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கியது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ஏ.சி. மின்சார ரெயில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. மும்பைவாசிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசாக ஏ.சி. மின்சார ரெயில் கிறிஸ்துமஸ் தினமான இன்று முதல் (திங்கட்கிழமை) பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது. பயணிகளின் வசதிக்காக நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் ஏ.சி. புறநகர் மின்சார ரெயில்களை இயக்க கடந்த 2002–ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. முன்னதாக ரெயில் சேவையை தொடங்கி வைத்து மந்திரி வினோத் தாவ்டே கூறியதாவது:– மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் ஏ.சி. மின்சார ரெயில் கட்டாயம் தேவை. இந்த நகரங்களில் வெப்பம் மற்றும் தூசிக்கிடையே அலுவலகம் செல்லும் மக்கள் போராடி வருகின்றனர். ஏ.சி. ரெயிலில் அவர்கள் சவுகரியமாக பயணம் செய்ய முடியும். மெட்ரோ, ஏ.சி. ரெயில் சேவைகளால் மேலும் பலர் பொது போக்குவரத்து வசதியினை பயன்படுத்த முன்வருவார்கள் எ
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? 5 அமைச்சர்கள் விளக்கம்

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? 5 அமைச்சர்கள் விளக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சென்னையில்  நடந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, பாஸ்கரன் ஆகிய 5 பேர் பங்கேற்கவில்லை. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்காதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்தன. இந்தநிலையில் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து கட்சி தலைமைக்கு அமைச்சர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். அந்த விளக்கத்தில், ‘சொந்த ஊர்களில் இருந்தபோது, திடீரென ஆலோசனை கூட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ‘திடீர்’ அழைப்பால் உடனடியாக புறப்பட்டு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை’, என்று குறிப்பிட்டிருந்ததாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன