Saturday, June 6
Shadow

HOME SLIDER

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை சிறப்பாக தொடருவேன்-டிடிவி தினகரன்

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை சிறப்பாக தொடருவேன்-டிடிவி தினகரன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இது ஆரம்பம்தான்... நாளை முதல் நடப்பதை பாருங்கள்- டிடிவி தினகரன் மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்கு அச்சாரமாக இந்த ஆர்.கே.நகர் தொகுதியின் வெற்றி அமைந்துள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். ராணி மேரிக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் வெற்றி பெற்ற சான்றிதழை பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், நாளை முதல் எனது செயல்பாட்டை பாருங்கள் என்று கூறினார். இனிமேல் நிகழப்போகும் மாற்றங்களை பொறுத்திருந்து பாருங்கள். காவல்துறையினரின் செயல்பாடு கண்டனத்திற்குரிய வகையில் உள்ளது. நான் ஆரம்பம் முதலே கூறி வருகிறேன் காவல்துறையினர் ஏவல்துறையாக செயல்படக் கூடாது எனவும் கூறியுள்ளார். மதுசூதனனுக்கு பாஜக, தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது. ஆளுங்கட்சி என்பதால் டெபாசிட் பெற்று தப்பித்துக்கொண்டனர். பணப்பட்டுவாடா செய்ததாலேயே 2வது இடத்தை ஆளுங்கட்சி பெற்றுள்ளது. 58 வேட்பாளர்களும் டெபாசிட் இழப்ப
பிள்ளையார் சுழி போட்ட வேலூர் எம்.பி மீண்டும் அதிமுகவில் அணி தாவல் ஆரம்பம்

பிள்ளையார் சுழி போட்ட வேலூர் எம்.பி மீண்டும் அதிமுகவில் அணி தாவல் ஆரம்பம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அதிமுகவில் இனி அணி தாவல் ஆரம்பம்.. பிள்ளையார் சுழி போட்ட வேலூர் எம்.பி செங்குட்டுவன் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றிருப்பதை அடுத்து மீண்டும் அதிமுக அணியில் இருந்து தினகரன் அணிக்கு தாவ பலர் முயற்சி செய்து வருகின்றனர். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் 21ம் தேதி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. தொடங்கியது முதலே பரபரப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கையில் தினகரனே முன்னிலை வகித்து வந்தார். முதல் சுற்று முடிவடைந்த போதே, அதிக வாக்குகள் வித்தியாசம் இருந்ததால், அப்போதே தினகரனின் வெற்றி உறுதியாகி விட்டது. தற்போது இறுதியாக அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றுள்ள நிலையில், டி.டி.வி தினகரன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற
“ சென்னை பக்கத்துல “உருவாகிறது  கிராமத்து காதல் கதை..!

“ சென்னை பக்கத்துல “உருவாகிறது கிராமத்து காதல் கதை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
T.C.B பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் தெய்வானை தயாரிக்கும் படம் “ சென்னை பக்கத்துல “ இந்த படத்தில் எஸ்.சீனு  என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக கமலி அறிமுகமாகிறார். மற்றும்  மாணிக்கவிநாயகம், அஞ்சலிதேவி, ஓ.ஏ.கே.சுந்தர், வின்சென்ட் ராஜ், வாசுவிக்ரம், கோவை செந்தில், ரஞ்சன், நெல்லை சிவா, விஜய்கணேஷ், கிங்காங் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் கானா பாலா, காதல் சுகுமார் இருவரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் ஒரு காதல் காவியம். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால்  வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூகவலை தலங்களில் காதல் மிகவும் கேவலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி காதல் அழிந்து கொண்டிருக்கு இந்த நேரத்தில் இன்னும் கிராமபுறங்களில் புனிதமான காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு காதல் கதை தான
திமுகவின் தோல்வி என்பதைவிட, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்துள்ள இமாலயத் தோல்வி -ஸ்டாலின்

திமுகவின் தோல்வி என்பதைவிட, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்துள்ள இமாலயத் தோல்வி -ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திமுக வேட்பாளருக்குத் தோல்வி என்பதைவிட, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்துள்ள இமாலயத் தோல்வி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''1967 பொதுத்தேர்தலில் அறிஞர் அண்ணா தலைமையில் திமுக மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு முன், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து முடிந்த உடன் தர்மபுரியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றியைப் பறிகொடுக்க நேர்ந்தது. பாளைச் சிறையில் இருந்து வெளிவந்த தலைவர் கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் 'தர்மபுரி இடைத்தேர்தல் வெற்றி குறித்து என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டபோது, தர்மபுரியில் வாக்காளர்களுக்கு கொடுத்த 'தர்மம் வென்றது' எனக் குறிப்பிட்டார். அதேபோல இன்று ஆர்.கே.நகர் தொகுதியிலும் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட 'தாராளமான
ஆர்.கே.நகரில் பாஜகவை விட நோட்டாவுக்கே அதிக வாக்குகள்

ஆர்.கே.நகரில் பாஜகவை விட நோட்டாவுக்கே அதிக வாக்குகள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜகவை விட நோட்டாவுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 1,368 வாக்குகள் பெற்றுள்ளார். இதில் நோட்டாவுக்கு 2,348 வாக்குகள் கிடைத்துள்ளன. தமிழக அரசியலில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிவில், தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 3,802 வ
3 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும் டிடிவி தினகரன் பேட்டி

3 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும் டிடிவி தினகரன் பேட்டி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதில் எனக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். இதனால் எனது வெற்றி உறுதியாகி உள்ளது தமிழக மக்களின் எண்ணத்தைதான் ஆர்.கே.நகர் வாக்காளர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். இந்த வெற்றிக்காக பாடு பட்ட கட்சியின் 1.5 கோடி தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவினாசி, கோவை, அருமனை சென்றபோதும் அங்குள்ள மக்கள் குக்கர் சின்னம் வெற்றி பெற வேண்டும் என்று என்னைவாழ்த்தினர். மக்கள் விரும்பியபடி வெற்றி பெற்றுள்ளேன். இன்னும் 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும். நல்லாட்சிதர தியாகத் தலைவி சின்னம்மாவால் தான் முடியும் என மக்கள் நம்புகின்றனர். அதனால் தான் ஆர்.கே.நகரில் வெற்றியை தந்துள்ளனர்.   சின்னமாக இருந்தாலும் சரி, கட்சியாக இருந்தாலும் சரி வேட்பாளரை வைத்தே அது நிர்ணயிக்கப்படுகிறது. சி
செக்ஸ் என்பதும் ஓர் உணர்வு, பேசத் தயங்க வேண்டிய விஷயமல்ல – வித்யாபாலன் அதிரடி

செக்ஸ் என்பதும் ஓர் உணர்வு, பேசத் தயங்க வேண்டிய விஷயமல்ல – வித்யாபாலன் அதிரடி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
செக்ஸ் என்பது மனித உணர்வு. அது பேசத் தயங்கக்கூடிய விஷயம் அல்ல’ என்கிறார் அதிரடியாக. ‘‘திருமணம் என்ற அமைப்புக்குள்தான் செக்ஸ் இடம்பெற வேண்டும், அது இனப்பெருக்கத்துக்கானது என்பதே இந்திய கலாசாரமாக உள்ளது. அதுவே அந்தரங்க இன்பத்தைக் கெடுத்துவிடுகிறது’’ என்பது வித்யாவின் வாதம். அவரே தொடர்ந்து, ‘‘உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக நாம் இருந்தாலும், இன்னும் செக்ஸ் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்குத் தயங்குவது வேடிக்கையானது. செக்ஸ் என்பதற்கு நாம் போதுமான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது திருமண உறவில்தான் நடக்க வேண்டும், வாரிசுகளை உருவாக்க மட்டுமே தேவைப்படும் விஷயம் என்று எண்ணுகிறோம். ஆனால் பாலியல் உணர்வு தரும் இன்பம், அந்தரங்க நெருக்கத்தின் மகிழ்ச்சி, அதன் சுவாரசியம் எல்லாவற்றையும் தவறவிட்டுவிடுகிறோம்’’ என்று படபடவென்று விளாசுகிறார். செக்ஸ் பற்றிய நமது மனோபாவத்தை மாற்றிக்கொ
சோம்நாத் கோவிலில் ராகுல்காந்தி சாமி தரிசனம்

சோம்நாத் கோவிலில் ராகுல்காந்தி சாமி தரிசனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை நெருங்கி வந்து ஆட்சியை கைப்பற்ற இயலாமல் தோல்வி கண்டது. மொத்தம் காங்கிரஸ் கூட்டணி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியை பிடித்த பா.ஜனதாவுக்கு 99 இடங்கள் கிடைத்தன. இந்த நிலையில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து மண்டல வாரியாக ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று குஜராத் மாநிலம் வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள கேசோத் விமான நிலையத்தை வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பிரசித்த பெற்ற சோம்நாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தேர்தல் நடப்பதற்கு முன்பாகவும் ராகுல்காந்தி இந்த சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தது நினைவு கூறத்தக்கது
சாதி உணர்வை காயப்படுத்தியதாக சல்மான்கான், ஷில்பா ஷெட்டி மீது போலீசில் புகார்

சாதி உணர்வை காயப்படுத்தியதாக சல்மான்கான், ஷில்பா ஷெட்டி மீது போலீசில் புகார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த ‘டைகர் ஜிந்தா ஹை’ படம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. முன்னதாக இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை காயப்படுத்தும் விதத்தில் அவர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த சமுதாய மக்கள் மும்பை பாந்திராவில் உள்ள சல்மான்கானின் வீட்டின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் சல்மான்கான் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதேபோல், நடிகை ஷில்பா ஷெட்டியும் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய போது, சாதி உணர்வை காயப்படுத்தும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது. ஆகையால், சல்மான்கான் மற்றும் ஷில்பா ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை அந
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக தவிர திமுக,பாஜக உட்பட 57 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்..!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக தவிர திமுக,பாஜக உட்பட 57 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும். தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். அடுத்த இடத்தை பிடித்த அதிமுகவால் அடுத்தடுத்த சுற்றுகளில் மீண்டும் முன்னேறி வரமுடியவில்லை. டிடிவி தினகரன் இரண்டாம் இடத்தில் நீடித்த மதுசூதனன் எட்டாத அளவு வித்தியாசத்தில் வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்தார். டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.  14 சுற்றுகள் முடிவில் 32,091 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையி