வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

HOME SLIDER

இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்!

இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்! பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 2005-ம் ஆண்டு வெளியான கனா கண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான கே.வி.ஆனந்த், தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். இதுதவிர, காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார்....
வீடுகளின் முன்பு கருப்பு கொடி… ‘ஸ்டெர்லைட்டை தடை செய்’ என கோலம்… ஸ்டெர்லைட் திறக்க தூத்துக்குடியில் எதிர்ப்பு!

வீடுகளின் முன்பு கருப்பு கொடி… ‘ஸ்டெர்லைட்டை தடை செய்’ என கோலம்… ஸ்டெர்லைட் திறக்க தூத்துக்குடியில் எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics
    வீடுகளின் முன்பு கருப்பு கொடி... ‘ஸ்டெர்லைட்டை தடை செய்’ என கோலம்... ஸ்டெர்லைட் திறக்க தூத்துக்குடியில் எதிர்ப்பு! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஜூலை வரை அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் ஆலையை சுற்றி உள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. தூத்துக்குடி, பண்டாரம்பட்டி புதுத்தெரு கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு ஊரடங்கு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என போலீசார் கேட்டு கொண்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர். நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் மீ...
உண்மையை மறைத்து சடலங்கள் மீது பாஜக அரசியல் செய்கிறது – Ex CM கமல்நாத் கடும் விமர்சனம்

உண்மையை மறைத்து சடலங்கள் மீது பாஜக அரசியல் செய்கிறது – Ex CM கமல்நாத் கடும் விமர்சனம்

HOME SLIDER, NEWS, politics
சடலங்கள் மீது பாஜக அரசியல் செய்கிறது - Ex CM கமல்நாத் கடும் விமர்சனம் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தவறிவிட்டதாக பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியபிரதேச முன்னாள் முதல்மந்திரியுமான கமல்நாத் இன்று கூறுகையில், மத்தியபிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் மருந்து, தடுப்பூசி, ஆக்சிஜன், ஆபுலன்ஸ், படுக்கை வசதி என எதுவும் இல்லை. ஆனால், மாநில முதல்மந்திரி (சிவராஜ்சிங் சௌகான் - பாஜக) அனைத்தும் போதுமான அளவில் உள்ளது என்று கூறுகிறார். கொரோனாவின் இரண்டாவது அலை குறித்து தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் க...
ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள் போலீசார் முன் மண்டியிட்டு மன்றாடிய நபர் – உ.பி., அவலம்

ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள் போலீசார் முன் மண்டியிட்டு மன்றாடிய நபர் – உ.பி., அவலம்

HOME SLIDER, NEWS, politics
    ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள் போலீசார் முன் மண்டியிட்டு மன்றாடிய நபர் - உ.பி அவலம் உத்தரபிரதேசத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உ.பி.,யில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக பரவலான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், மாநிலத்தில் எந்த கொரோனா மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் புரளியை பரப்பும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது அம்மா உயிர...
மராட்டியத்தில் நேற்று ஒரேநாளில் 985 பேர் கொரோனாவால் பலி

மராட்டியத்தில் நேற்று ஒரேநாளில் 985 பேர் கொரோனாவால் பலி

HOME SLIDER, NEWS, politics
  மராட்டியத்தில் நேற்று ஒரேநாளில் 985 பேர் கொரோனாவால் பலியானார்கள். இதனால் மயானங்கள் பிணக்குவியல்களால் நிரம்பி வழிகின்றன மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படுமோசமாக அதிகரித்து வருகிறது. இந்த வகையில் நேற்றும் மராட்டியத்தில் புதிதாக 63 ஆயிரத்து 309 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் இதுவரை நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 44 லட்சத்து 73 ஆயிரத்து 394 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல நேற்று ஒருநாளில் மட்டும் புதிய உச்சமாக கொரோனாவுக்கு உயிரிழப்பு 1,000-ஐ நெருங்கியது. அதன்படி 985 பேர் பலியானார்கள். இதன்மூலம் நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 214 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு பெருமளவு அதிகரித்து இருப்பதன் காரணமாக ஆஸ்பத்திரி பிணவறைகளில் உடல்களை வைக்க இடமில்லாத சூழல் நிலவுகிறது. மேலும் மயானங்கள் பிணக்குவியல்களால் நிரம்பி வருகின்றன....
மன்சூர்அலிகானுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன்

மன்சூர்அலிகானுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  மன்சூர்அலிகானுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்க்கச் சென்ற நடிகர் மன்சூர் அலிகான், ஊடகங்களுக்கு ஆவேசமாக பேட்டி அளித்தார். தடுப்பூசியால் நன்றாக இருந்த நடிகர் விவேக் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தார். இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் மீது, சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி புகார் கொடுத்தார். இதுகுறித்து வடபழனி போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று விசாரணை...
விஜய் சேதுபதிக்காக ‘விடுதலை’ படத்தில் அதிரடி மாற்றம் செய்த தயாரிப்பாளர்!

விஜய் சேதுபதிக்காக ‘விடுதலை’ படத்தில் அதிரடி மாற்றம் செய்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதிக்காக ‘விடுதலை’ படத்தில் அதிரடி மாற்றம் செய்த தயாரிப்பாளர்! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இணைந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் ‘விடுதலை’ படத்தை தமிழில் மட்டுமே வெளியிட திட்டமிட்டிருந்த தயாரிப்பாளர், விஜய் சேதுபதியின் வருகையாலும், அவருக்கு தெலுங்கு, இந்தி போன்ற திரையுலகில் இருக்கும் மார்க்கெட் காரணமாக பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார். அதன்படி ...
கொரோனா 2ம் அலை… நெருக்கமான பலரின் உயிர்களை காவு வாங்கிடுச்சு – இயக்குனர் நவீன் உருக்கம்!

கொரோனா 2ம் அலை… நெருக்கமான பலரின் உயிர்களை காவு வாங்கிடுச்சு – இயக்குனர் நவீன் உருக்கம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
கொரோனா 2ம் அலை... நெருக்கமான பலரின் உயிர்களை காவு வாங்கிடுச்சு - இயக்குனர் நவீன் உருக்கம்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் திரைப் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியம், இயக்குனர் தாமிரா ஆகியோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன், கொரோனா இரண்டாம் அலை, தனக்கு நெருக்காமானோர் பலரின் உயிர்களை காவு வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “இரண்டாம் அலை சற்று பயங்கரமாகவே இருக...
‘ஹார்லி டேவிட்சன்’ பைக்கில் கெத்தாக வலம்வந்த விஷால் பட நடிகை – வைரலாகும் வீடியோ

‘ஹார்லி டேவிட்சன்’ பைக்கில் கெத்தாக வலம்வந்த விஷால் பட நடிகை – வைரலாகும் வீடியோ

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
‘ஹார்லி டேவிட்சன்’ பைக்கில் கெத்தாக வலம்வந்த விஷால் பட நடிகை - வைரலாகும் வீடியோ! நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘சிவப்பதிகாரம்’. கரு பழனியப்பன் இயக்கிய இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை மம்தா மோகன்தாஸ். இதையடுத்து மலையாளத்தில் பிசியான அவர், தற்போது 15 ஆண்டுகளுக்கு பின் விஷாலுடன் மீண்டும் இணைந்து எனிமி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பஹ்ரைன் சென்றுள்ள நடிகை மம்தா, அங்குள்ள வீதிகளில் ‘ஹார்லி டேவிட்சன்’ பைக் ஓட்டிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: “நமக்கே பைக் ஓட்ட தெரியும்போது ஏன் மற்றவருக்காக நாம் காத்திருக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு பின் பைக் ஓட்டி இருக்கிறேன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், எனக்கு இன்னும் அந்த டச் விட்டுப்போகவில்லை” என...
மதம் சம்பந்தப்பட்ட பதிவால் சலசலப்பு – சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த யுவன் சங்கர் ராஜா!

மதம் சம்பந்தப்பட்ட பதிவால் சலசலப்பு – சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த யுவன் சங்கர் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
மதம் சம்பந்தப்பட்ட பதிவால் சலசலப்பு - சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த யுவன் சங்கர் ராஜா! பேஸ்புக்கில் 20 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அவர் நேற்று, குரான் வசனம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், யுவன் சங்கர் ராஜா, இந்தப் பதிவின் வாயிலாக மதப் பிரச்சாரம் செய்வதாக கமெண்ட் செய்திருந்தார். அந்த ரசிகர் போட்ட கமெண்டில், “நான் உங்களை விரும்பியதும், பின்தொடர்வதும் நீங்கள் யுவன் சங்கர் ராஜாவாக பிறந்ததால் தான். மதத்தை பரப்பும் தளம் இது இல்லை. இப்படியே தொடர்ந்தால் உங்கள் பக்கத்திலிருந்து வெளியேறிவிடுவேன்” என்று சொல்லி இருந்தார். இதற்கு யுவன்சங்கர் ராஜா, வெளியேறிவிடுங்கள் என்று பதிலடி கொடுத்தார். மேலும், சிலர் ஒருபடி மேலே சென்று நீங்கள் பதிவிட்டிருக்கும் கருத்தை பகவத் கீதையில், நீங்கள் காணவில்லையா எனவும் க...