புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

உலக செய்திகள்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்  நிலநடுக்கம்!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பீஜிங், தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் தெரித்தது. பெய்ஜிங் நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகி உள்ளது. 17 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் 30.37 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த 3 நிமிடங்களுக்குப் பிறகு, யானிலும் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவின் அடுத்தடுத்த ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் அரசு ஊடகங்கள் தகவல் தெரிவ...
துப்பாக்கி  கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும்-முன்னாள் அதிபர் டிரம்ப் கோரிக்கை!

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும்-முன்னாள் அதிபர் டிரம்ப் கோரிக்கை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த மே 25-ஆம் தேதி துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாகி கலாச்சாரத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்தக்கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வெடித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்நிலையில் இது போன்ற துப்பாக்கிசூடு சம்பவங்கள் இன...
பிரான்ஸ்- ஜெர்மனி நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை!

பிரான்ஸ்- ஜெர்மனி நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 3 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த போருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷிய படைகளின் தாக்குதல்களை சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவி வருகின்றன. இதனால் ரஷிய படைகளுக்கு உக்ரைன் வீரர்கள் கடும் சவால் அளித்தனர். உக்ரைன் தலைநகர் கிவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷியாவால் கைப்பற்ற முடியவில்லை. தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனிக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலர் ஷோல்ஸ் ஆகியோரிடம் ரஷிய அதிபர் புதின் தொலைப்பேசியில் பேசினார...
சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர்!

சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
ஆங்கிலத்தில் எழுத்தப்பட்டு அல்லது மொழிபெயர்க்கப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் புகழ்வாய்ந்த இலக்கிய பரிசான, சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ, தனது ‘ரெட் சமாதி’ என்ற நாவலுக்காக புக்கர் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கீதாஞ்சலி ஸ்ரீயின் ரெட் சமாதி நாவல் ஆங்கிலத்தில் 'டோம்ப் ஆஃப் சாண்ட்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. பிரபல மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல்லால் என்பவர் ரெட் சமாதியை மொழிபெயர்த்தார். புக்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் இருந்து தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்தி மொழி புத்தகமும் இதுவேயாகும். இந்த புத்தகத்திற்கு 50,000 பவுண...
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
வடகொரியா, இந்த ஆண்டு தொடக்கம் முதல் அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. இன்று அதிகாலை ஜப்பான் கடல்பகுதியை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் மூன்று ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடந்த குவாட் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தனது நாட்டுக்கு புறப்பட்ட சில மணி நேரத்தில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. ஜப்பான் பிரதமர் புயிடோ கிஷிடா கூறும் போது, வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது தொடர்பாக உறுதி செய்ய முயற்சித்து வருகிறோம் என்றார். வடகொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் வட்சக்கணக்கானோர் தொற்றுக்கு உள்ளாகி...
இலங்கைக்கு நிதி உதவி வழங்க உலக வங்கி நிபந்தனை!

இலங்கைக்கு நிதி உதவி வழங்க உலக வங்கி நிபந்தனை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
இலங்கை, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் இலங்கை அரசு திணறுகிறது. இந்தியா, உலக வங்கி ஆகியவை கடனுதவி அளித்த நிலையில் அந்த நிதிகள் தீர்ந்து உள்ளதால் இலங்கையில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா, உலக வங்கியிடம் இலங்கை அரசு மீண்டும் நிதியுதவி கேட்டுள்ளது. இந்த நிலையில் நிதியுதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை விதித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இலங்கைக்கு ஒரு கடன் திட்டம் அல்லது புதிய கடன் உறுதிப்பாடுகளை முன்னெடுக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளதாக பல தவறான தகவல் வெளியாகியுள்ளன. “இலங்கை மக்கள் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். பொருளாதார ஸ்திரத்தன்மை மற்...
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு!

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா தொற்றுக்கு பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டு இருந்த அன்னிய செலாவணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையின் பணம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரி பொருள் பற்றாக்குறை நிலவுகிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதோடு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40 ஆயிரம் டன் டீசல் வழங்கியது. தொடர்ந்து 1,20,000 டன் டீசல் மற்றும் 40 ஆயிரம் டன் பெட்ரோல் வினியோகம் செய்தது. பழைய பாக்கியை கொடுக்க இலங்கையிடம் பணம் இல்லாதால் துறைமுகத்தில் கப்பல் காத்திருக்கிறது. இந்த நிலையில் இலங்கையில் இன்று பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை 24.3 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420க்கு விற்பனையா...
மேற்கத்திய நாடுகளை குறிவைக்கும் குரங்கு காய்ச்சல்!

மேற்கத்திய நாடுகளை குறிவைக்கும் குரங்கு காய்ச்சல்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக 'மங்கி பாக்ஸ்' என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்துகிறது. இதையொட்டி உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் டாரிக் ஜசரேவிக் கூறுகையில், "37 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. 71 பேருக்கு இந்த நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது" என தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் குளூஜ் கூறும்போது, "இதுவரையில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகளில் சமீப காலத்தில் குரங்கு காய்ச்சல் பரவி உள்ளது. இந்த நாடுகளைத் தவிர்த்து ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் உள்ளூர் தொற்றாக குரங்கு காய்ச்சல் பாதிப்பு...
அமெரிக்காவுக்கு நன்றி கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

அமெரிக்காவுக்கு நன்றி கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ் உருக்காலையில் இருந்த படைவீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய ராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மரியுபோல் நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசம் வந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷியாவின் பயங்கர தாக்குதலுக்கு கடும் சேதங்களைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு நிதியுதவியாக 40 பில்லியன் டாலர்களை (ரூ.3.08 லட்சம் கோடி) அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் 40 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்த நிலையில் மீண்டும் நிதியுதவி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வரும் அமெரிக்காவுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். ...
இலங்கை வன்முறை தொடர்பாக 3 எம்.பிக்கள் கைது!

இலங்கை வன்முறை தொடர்பாக 3 எம்.பிக்கள் கைது!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசுக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் மீது கடந்த மே 9-ஆம் தேதி முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இதில் ஆளும்கட்சி எம்.பி. ஒருவா் உள்பட 10 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்த வன்முறை தொடா்பாக 1,059 பேரை ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்திருந்த நிலையில், தற்போது வன்முறையை ஊக்குவித்ததாக ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சோ்ந்த 3 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் வன்முறை தொடர்பாக காவல் துறையின் குற்றப் புலனாய்வுத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர். ...