புதன்கிழமை, ஜனவரி 19
Shadow

Tag: கொரோனா

நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி!

நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி! இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் மாதவனுக்கும் கடந்த வாரம் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மாதவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தனது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் மாதவன் நடிப்பில் தற்போது ராக்கெட்ரி எனும் படம் உருவாகி உள்ளது. இப்படத்தை அவரே இயக்கியும் உ...
நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா!

நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா! இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28).  இவர் மும்பையில், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஆலியா, தனது இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் வெளியிட்ட செய்தியில், அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.  வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவேன். என்னுடைய மருத்துவர்கள் அறிவுரையின்படி அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், அவர் தன்னுடைய பதிவில், உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்....
இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கனகராஜ்க்கு கொரோனா! மாநகரம், கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்தை கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் வலிமையுடன் திரும்பி வருவேன் என்று அவர் கூறியுள்ளார்....
முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று!

முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று!

HOME SLIDER, NEWS, டிரைலர்கள்
முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று! இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் மாதவன், நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் மாதவன், நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு கொரோனா ...
நடிகர் பக்ருவுக்கு கொரோனா!

நடிகர் பக்ருவுக்கு கொரோனா!

CINI NEWS, helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
நடிகர் பக்ருவுக்கு கொரோனா! கொரோனா மீண்டும் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தி நடிகர் நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி வருகிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு இந்தி நடிகர்கள் அமீர்கான், கார்த்திக் ஆர்யன், மாதவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் பக்ருவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழில் அற்புத தீவு, தலை எழுத்து, 7-ம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பக்ரு. மலையாளத்தில் அதிக படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி தற்போது வ...
இந்தியாவில் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா தொற்று!

helth tips, HOME SLIDER, NEWS, Photos, உலக செய்திகள், செய்திகள்
இந்தியாவில் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா தொற்று! இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,87,534 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 251 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,60,692 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,31,650  ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 26,490 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,95,192  பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 5,31,45,709 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது....
பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா!

பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, செய்திகள், நடிகர்கள்
பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா! பிரபல இந்தி நடிகரான அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை நடைமுறைகளை பின்பற்றி வருகிறார். அவர் தற்போது நலமுடன் உள்ளார். சமீபத்தில் அமீர்கானை சந்தித்தவர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அமீர்கான், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ...
12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு!

helth tips, HOME SLIDER, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா தொற்று பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு! கொரோனா தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவியதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக வீடுகளில் இருந்து படித்து வந்தார்கள். 10 மாதங்களுக்கு பிறகு ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் சட்டசபை தேர்தல், கொரோனா தொற்று பரவல் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்தது. 9, 10, 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவித்தார். மேலும் 12-ம் வகுப்பு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. மே மாதம் 3-ந்தேதி தொடங்கி 23-ந் தேதி வரை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தம...
2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு-மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு-மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

helth tips, HOME SLIDER, NEWS, Photos, உலக செய்திகள், உலகம், செய்திகள்
கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்! இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் இரண்டு தவணைகள் செலுத்தப்படவேண்டும். இதுவரை 4.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழுவினர், இரண்டு தவணை தடுப்பூசிக்கு இடையிலான கால அவகாசத்தை  நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். அதன் அடிப்படையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 6-8 வாரம் என நீட்டிக்க வேண்டும் என்றும், இரண்டாம் தவணைக்கான அவகாசத்தை நீட்டிக்கும்போது அதிக பலனளிப்பதாகவும் மத்திய அரசு க...
OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்

OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் -தயாரிப்பு நிறுவனம்   விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் நெட்பிளிக்ஸ்OTT தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகில் படத்துக்குப் பிறகு விஜய் மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 14 மாலை 6 மணிக்கு மாஸ்டர் பட டீசர் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மாஸ்டர் பட டீசர் பெற்றது. சமீ...