வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

நடிகைகள்

பிக்பாஸ் பிரபலம் மதுமிதாவுக்கு குழந்தை பிறந்தது!

பிக்பாஸ் பிரபலம் மதுமிதாவுக்கு குழந்தை பிறந்தது!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
2012-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ஒருகல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மதுமிதா. இதைத் தொடர்ந்து இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ராஜா ராணி, காஞ்சனா 2, ஸ்கெட்ச், விஸ்வாசம், டிக்கிலோனா என பல தமிழ் படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மதுமிதா, சில காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.     2019-ம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை மதுமிதா திருமணம் செய்துக் கொண்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுமிதாவின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தின. இந்நிலையில், மோசஸ் - மதுமிதா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....
குழந்தைகளை பாலியல் தொல்லை கொடுப்பவர்களை சுட்டுக் கொல்லனும் என்கிறார் சோனியா அகர்வால்

குழந்தைகளை பாலியல் தொல்லை கொடுப்பவர்களை சுட்டுக் கொல்லனும் என்கிறார் சோனியா அகர்வால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பேயை விடப் பெண்கள் பயங்கரமானவர்கள்: சோனியா அகர்வால் பேச்சு! பரபரப்பான ஒரு திகில் படைப்பாக உருவாகியுள்ள படம் 'கிராண்மா' . இப்படத்தை ஷிஜின்லால் எஸ். எஸ். இயக்கியுள்ளார் . யஷ்வந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசை அமைத்துள்ளார். ஜி எம் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ். ஆர், விநாயகா சுனில்குமார் தயாரித்துள்ளனர். 'கிராண்மா' படத்தின் ஊடகங்களுக்கான சந்திப்பு இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ஷிஜின்லால் எஸ்.எஸ்., தயாரிப்பாளர் ஜெயராஜ் ஆர், படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள நடிகை சோனியா அகர்வால், முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சார்மிளா மற்றும் குழந்தை நட்சத்திரம் பௌர்ணமி, சண்டை இயக்குநர் முகேஷ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஜெயராஜ் ஆர் பேசும்போது, "நான் படம் தயாரிப்பது என்று முடிவு ...
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கிரே மேன்’. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர். இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகிறது. ‘தி கிரே மேன்’ படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தனுஷ் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டிரைலரில் அதிகமான காட்சிகளில் தனுஷ் இடம்பெறவில்லை என்றாலும் அவருட...
பிரபலங்களின் பாராட்டுக்களால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாலை நேர மல்லிப்பூ

பிரபலங்களின் பாராட்டுக்களால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாலை நேர மல்லிப்பூ

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  21 வயதே ஆன அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் முழுக்க புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் “மாலைநேர மல்லிப்பூ”. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயதே ஆன மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் இடையே உள்ள உறவையும் மிக ஆழமாக பேசுகிறது. பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வினித்ரா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக...
விபத்தில் சிக்கிய சமந்தா – விஜய் தேவரகொண்டா!

விபத்தில் சிக்கிய சமந்தா – விஜய் தேவரகொண்டா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவரை விவாகரத்து செய்த பிறகு மேலும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைக்கு வந்தது. அடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ள யசோதா, சாகுந்தலம் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். நடிகையர் திலகம் படத்தை அடுத்து சமந்தா, விஜய் தேவரகொண்டா மீண்டும் சேர்ந்து நடிக்கும் படம் குஷி. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தபோது சண்டை காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அப்பொழுது விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் விழுந்துவிட்டது. இதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம் அடைந்தார்கள். இது குறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது, காயம் அடைந்ததும் இருவருக்கும் முதலு...
பூஜையுடன் தொடங்கிய ஆர்.கே சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’!

பூஜையுடன் தொடங்கிய ஆர்.கே சுரேஷின் ‘ஒயிட் ரோஸ்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒயிட் ரோஸ்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. இதில் ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தயாரிப்பாளர் ரூஸோ, மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை 'கயல்' ஆனந்தி ஆர். கே. சுரேசிற்கு ஜோடியாக நடிக்கிறார். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை டி. என். கபிலன் கவனிக்க, சண்டைப் பயிற்சியை பிரபு அமைக்கிறார். சைக்கோ திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த 'ஒயிட் ரோஸ்' திரைப்படத்தை ஸ்டூடிய...
நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி!

நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அதே தினத்தில் நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி திருமணத்தன்று ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். சஞ்சனா இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆசிஷ் பாஷா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். சஞ்சனா தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2020ம் வருடம் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்து பின்னர் பெயில் பெற்று வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தனியார் ஹோட்டலில் நடந்தது!

நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தனியார் ஹோட்டலில் நடந்தது!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  இருவீட்டாரின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்த அழகான இளம் ஜோடி நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தனியார் ஹோட்டலில் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், மணமக்கள் இருவரும் உடையை மாற்றிகொண்டு முகூர்தத்திற்கு ரெடியானார்கள். இரவு 1.30 மணியளவில் மணமகன் ஆதி, மணமகள் நிக்கி கல்ராணிக்கு தாலி கட்டினார். முகூர்தத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர் .     ...
ரசிகரின் கேள்விக்கு கோபம் அடைந்த மாறன் பட  நடிகை!

ரசிகரின் கேள்விக்கு கோபம் அடைந்த மாறன் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் புதிய நாயகியாக வலம் வருகிறார். மலையாளம், கன்னடம், ஹிந்தி, மலையாளம், தமிழ் என இதற்குள்ளே எல்லா மொழிகளிலும் ஒவ்வொரு படங்கள் நடித்துவிட்டார். அடுத்து அவரது நடிப்பில் ஹிந்தியில் யுத்ரா என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. கடைசியாக தனுஷுடன் அவர் நடித்த மாறன் திரைப்படம் வெளியானது, ஆனால் படம் சரியாக ஓடவில்லை என்பது உண்மை. எப்போதும் புகைப்படங்கள் பதிவிட்டு பிஸியாக இருக்கும் மாளவிகா சமீபத்தில் ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார். அதில் ஒரு ரசிகர், மாறன் படத்தில் படுக்கை அறையின் ஒரு ரொமான்ஸ் காட்சி இருக்கும். அதை எத்தனை முறை எடுத்தீர்கள்? என்று கேள்வி கேட்டிருந்தார். இந்த ட்வீட்டை பார்த்த மாளவிகா கேட்டிருந்தார். கூறியிருப்பது, அதை விட உங்கள் மண்டைக்குள் இருப்பது மோசமான இடம் என்று பதிலளித்திருக்கிறார்....
அழகான பெண்கள் தமிழ் பேசினால்.. தமிழ் மொழி அழியாது:  இயக்குநர் பேரரசு ‘கலகல’ பேச்சு

அழகான பெண்கள் தமிழ் பேசினால்.. தமிழ் மொழி அழியாது: இயக்குநர் பேரரசு ‘கலகல’ பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  “புதிய முயற்சிகளுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் ஆதரவு உண்டு” என்று படவிழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ டேக் டைவர்ஷன்’. இதில் கே ஜி எஃப் படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார். 'கார்கில்' படத்தை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில் இயக்கியுள்ளார்.விரைவில் வெளியாகவிருக்கும் 'டேக் டைவர்ஷன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குநர் பேரரசு, இயக்குநர் 'எத்தன்' சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். படக்குழுவினரை வாழ்த்தி இயக்குநர் பேரரசு பேசுகையில், '' இப்படத்தின் கதாநாயகன் சிவ...