வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

HOME SLIDER

முதலமைச்சரை தொடர்ந்து பிரதமராக நடிக்கும் கங்கனா

முதலமைச்சரை தொடர்ந்து பிரதமராக நடிக்கும் கங்கனா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, திரைப்படங்கள், நடிகைகள்
முதலமைச்சரை தொடர்ந்து பிரதமராக நடிக்கும் கங்கனா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, ஏ.எல். விஜய் இயக்கும் 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் வேடத்தில், தான் நடிக்கவுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது 'நான் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கும் அரசியல் படத்தின் கதை, திரைக்கதை உருவாக்கம் தற்போது நடைபெற்று வருகிறது. இது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல. ஆனால் அரசியல் வரலாற்றுப் படம். பல முக்கியமான நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இந்திய அரசியலின் முக்கியமான தலைவரின் வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஒரு புத்தகத்தின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டுள்ளத...
மருத்துவமனையில் இருந்து சசிகலா நாளை டிஸ்சார்ஜ் 

மருத்துவமனையில் இருந்து சசிகலா நாளை டிஸ்சார்ஜ் 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மருத்துவமனையில் இருந்து சசிகலா நாளை டிஸ்சார்ஜ் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, தண்டனைக்காலம் நிறைவடைந்ததையடுத்து கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்படுவதற்கு முன்பே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா தொற்றும் ஏற்பட்டது. எனவே, விடுதலை தொடர்பான கோப்புகள் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சசிகலாவிடம் கையெழுத்து பெறப்பட்டது. சசிகலா விடுதலை செய்யப்பட்டாலும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. சசிகலாவின் உடல்நிலை கடந்த 3 நாட்களாக சீரான நிலையில் இருந்தது. எனவே, விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியானது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக...
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்- திமுகவின் அடுத்தகட்ட பிரசாரம் தொடங்கியது

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்- திமுகவின் அடுத்தகட்ட பிரசாரம் தொடங்கியது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உங்கள் தொகுதியில் ஸ்டாலின்- திமுகவின் அடுத்தகட்ட பிரசாரம் தொடங்கியது தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. தேர்தலை சந்திக்க தி.மு.க. பல்வேறு பிரசார வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஒன்றிணைவோம் வா,  விடியலை நோக்கி ஸ்டாலின் குரல், மக்கள் கிராமசபை கூட்டம் ஆகிய தலைப்புகளில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அடுத்தகட்டமாக புதிய கோணத்தில்  “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முதல் பிரசாரம் மேற்கொள்கிறார். பிரச்சனைகளுக்கு 100 நாட்களில் தீர்வு என்ற வாக்குறுதியுடன் இந்த பிரசாரத்தை அவர் தொடங்க உள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசார திட்டத்தை திருவண்ணாமலை தொகுதியில் தொடங்கினார். காலையில் திருவண்ணாமலை தொகுதி மக்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெ...
பட்ஜெட் கூட்டத்தொடர்… ஜனாதிபதி உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!

பட்ஜெட் கூட்டத்தொடர்… ஜனாதிபதி உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ஜனாதிபதி உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை போன்ற பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. வழக்கம் போல, காலை 11 மணிக்கு, மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகளுக்கு தங்களது ஒன்றுபட்ட ஆதரவை தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணித்தன. ...
முதல்வர் நிகழ்ச்சிக்கு நடந்து வந்த அமைச்சர்… பதறிய அதிகாரிகள்!

முதல்வர் நிகழ்ச்சிக்கு நடந்து வந்த அமைச்சர்… பதறிய அதிகாரிகள்!

HOME SLIDER, NEWS, politics
அமைச்சர் செயலால் முதல்வர் நிகழ்ச்சியில் பரபரப்பு..! பதறிப்போன அதிகாரிகள்... சென்னை மெரினாவில் சென்னையின் பெருமையை கொண்டாடும் வகையில் நம்ம சென்னை என்ற செல்பி மையம் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறந்துவைக்க முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் வருவதால் களைகட்டி இருந்தது மெரினா கடற்கரை சாலை. முதல்வர் வருகை என்பதால் காவல்துறை உயரதிகாரிகள் அரசு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்தனர்.கடற்கரை சாலையில் முதல்வர் வருவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த நேரத்தில் தூரத்தில் ஒரே ஒரு வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நபர் வேகமாக சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார்.... முதல்வர் வரும்போது யாரும் குறுக்கே வந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் அந்த மனிதரை அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது.ஆனால் அருகில் சென...
மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரபல தயாரிப்பாளர்!

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரபல தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  *’முற்றாத இரவொன்றில்’ நாவலை தழுவி படம் இயக்கும் சுரேஷ் காமாட்சி* வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. இதில் 'மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்ததுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் வெற்றி பெற்றார்.. இந்தநிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR நடிக்கும் ‘மாநாடு’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி. அரசியல் கதைக்கள பின்னணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.. இதைத் தொடர்ந்து தனது தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தை தானே இயக்கவுள்ளார் சுரேஷ் காமாட்சி. ஒரு இளம் பெண் காவலர் தனது பணியில் அன்றாடம் சந்திக்கும் அவலங்களை நெற்றிப்பொட்டில் அறைந்தது போல ‘மிக மிக அவசரம்’ படத்தை இயக்கிய, சுரேஷ் காமாட்சி, தனது அட...
இயக்குநர் மிஷ்கினின் “பிசாசு 2” படப்பிடிப்பு துவங்கியது!

இயக்குநர் மிஷ்கினின் “பிசாசு 2” படப்பிடிப்பு துவங்கியது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    இயக்குநர் மிஷ்கினின் “பிசாசு 2” படப்பிடிப்பு இன்று துவங்கியது! பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மிஷ்கின் தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ‘பிசாசு 2’ படத்தை இயக்குகிறார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பூர்ணா, காய்த்திரி ரெட்டி (பிகில்) உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்காக திண்டுகல்லில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடந்து முடிந்த நிலையில் தைப்பூசம் திரு நாளான இன்று “பிசாசு 2” படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார்....
சீரியல்கள் அனைத்திலிருந்தும் விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட நடிகை ராதிகா முடிவு

சீரியல்கள் அனைத்திலிருந்தும் விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட நடிகை ராதிகா முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
சீரியல்கள் அனைத்திலிருந்தும் விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட நடிகை ராதிகா முடிவு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வேலூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். சரத்குமாரை தொடர்ந்து கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளரும், நடிகையுமான ராதிகா பேசியதாவது:- தமிழகத்தில் கொரானா தொற்றால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்தனர், அப்போது கட்சியின் தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் மக்களுக்காக சேவையாற்றினர். அதேவேளையில் கட்சியின் தலைவரும் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்காக சாதி, மதம் பாராமல் அனைவரும் சிறப்பு பிரார்த்தனைகளை செய்தமைக்காக முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2021-ம் ஆண்டி...
16 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு

16 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
16 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1-ந்தேதி தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2ம் அமர்வு மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும். இந்நிலையில், பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. எதிர்க்கட்சிகள் இல்லாமல் பாராளுமன்றத்தில் பலவந்தமாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்....
சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி இல்லை – விக்டோரியா மருத்துவமனை

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி இல்லை – விக்டோரியா மருத்துவமனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி இல்லை சசிகலாவுக்கு தொடர்ந்து 3வது நாளாக கொரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது சசிகலாவுக்கு திடீரென கடந்த 20-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சினையால் அவதிப்பட்ட அவர், பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு மறுநாள் அவர் கலாசிபாளையா பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது நுரையீரலில் தீவிர தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.) அனு...