வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

politics

இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் பாஜக சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள் – கமல்ஹாசன்

இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் பாஜக சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள் – கமல்ஹாசன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து பிரச்சாரம் செய்ய இன்று உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை வந்திருந்தார். பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் படி ஆயிரக்கணக்கான வாகனங்களில் காவி கொடிகளை ஏந்தியபடி பாஜகவினர் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் டவுன்ஹால்பெரிய கடைவீதி பகுதியை கடக்கும் போது அங்கே கடைகள் வைத்திருந்த இஸ்லாமியர்களைக் கடைகளை அடைக்க சொல்லி பாஜக கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. கல்வீச்சிலும் ஈடுபட்டனர். பாஜகவினர் செய்த அடாவடிகள் ஊடகங்களிலும் ஆதாரத்துடன் வெளியாகின. இந்த சம்பவத்தினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் கோவை தெற்குத் தொகுதி வேட்பாளருமான கமல் ஹாசன் கண்டித்திருந்தார். "கலவர ஸ்பெலிஷ்டுகளை நாம் ஒற்றுமையால் முறியடிப்போம்" என இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் ட்வீட் செய்திருந்தார் ...
பிக்பாஸ் ஆரியின் தேர்தல் பிரச்சாரம்!

பிக்பாஸ் ஆரியின் தேர்தல் பிரச்சாரம்!

HOME SLIDER, politics, செய்திகள், நடிகர்கள்
பிக்பாஸ் ஆரியின் தேர்தல் பிரச்சாரம்! தமிழக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி அர்ஜுனன் தேர்தல் பிரச்சாரம் விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். இதில் ஓட்டு கேட்டு வரும் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று கட்சி வேட்பாளர் முதல் தொண்டர்கள் அனைவருக்கும் அறிவுரை கூறுவது போல் இந்த விழிப்புணர்வு வீடியோ அமைந்துள்ளது. நாட்டுக்காக ஓட்டு போடுங்க. உங்களுக்காக மாஸ்க் போடுங்க எனும் வாசகத்தோடு வரும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஓட்டு போடுவது எப்படி நமது கடமையோ, அதேபோல் சமூக இடைவெளி யோடு மாஸ்க் அணிந்து ஓட்டு போடுவது நமது கடமையாகும் என்கிறார் நடிகரும், சமூக ஆர்வலரும் ஆன ஆரி அர்ஜுனன். ...
சென்னையில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

சென்னையில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னையில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்! சட்டசபை தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. நாளை (1-ந் தேதி) முதல் 5-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்க கூடிய 2,225 பஸ்களுடன் சிறப்பு பேருந்துகளாக 3,090 என மொத்தம் 14,215 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நாளை முதல் 3-ந் தேதி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. 4, 5-ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் பஸ் நிலையங்கள், தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிறுத்தம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி...
கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து!

கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து! நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் காலை 11 மணிக்கு தூத்துக்குடியிலும், பிற்பகலில் நெல்லை, பாளை பகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்துவிட்டு மாலை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசனின் இன்றைய தென்மாவட்ட நிகழ்ச்சிகள் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியதாவது:- கமல்ஹாசன் நேற்று மதுரை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவனியாபுரம், பெத்தானியாபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை, கோ.புதூர் பஸ் நிலையம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார...
அ.தி.மு.க. வேட்பாளரின் டிரைவர் வீட்டில் ரூ.1 கோடி!

அ.தி.மு.க. வேட்பாளரின் டிரைவர் வீட்டில் ரூ.1 கோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேட்பாளர்களும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணத்தை இடமாற்றம் செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறையும் களமிறங்கியுள்ளது. வரி ஏய்ப்பு செய்யும் அரசியல் கட்சியினரின் நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்...
ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு!

ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு! ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகியோர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகள், அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதிக்கு வந்து போராடியதால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய 2 மந்திரிகளையும் அமைச்சரவையில் இருந்து நீக்கி பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார். உள்துறை மந்திரி பீட்டர் தட்டனுக்கு பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்து. அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளையும் பிரதமர் அறிவித்தார். ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களுக்கு அதிக பிரத...
ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா!  

ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா!  

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா! பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அரசியலில் இருந்து ஒதுக்குவதாக அறிவித்தார். அதன்பின் அவர் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதன்படி நேற்று ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சசிகலா தஞ்சாவூரில் இருந்து கார் மூலம் வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையில் அ.ம.மு.க. வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை 6 மணிக்கு சசிகலா திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு வந்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கார் மூலம் ராமேசுவரத்திற்கு சென்றார். இரவு அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சசிகலா வந்தார். அவருக்கு நுழைவு வாயிலில் கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற் பளிக்...
சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல் மிதக்கத் தொடங்கியது!

சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல் மிதக்கத் தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics
சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட சரக்கு கப்பல் மிதக்கத் தொடங்கியது சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவன் என்ற சரக்கு கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது. மணல் மற்றும் சகதியில் சிக்கியதால் கப்பலை நகர்த்த முடியவில்லை. இதனால் அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 450-க்கும் அதிகமான கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கின்றன. இந்த சம்பவத்தால், சர்வதேச வர்த்தகம், பெரிதும் பாதிக்கப்பட்டது. கப்பலின் இடது பக்கத்தில் இருக்கும் மணல் மற்றும் சகதியை நீக்கி, கப்பலை மீண்டும் நீரில் மிதக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பல்வேறு இழுவைப் படகுகளும், இரண்டு அகழ்வு ...
பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக- ராகுல்காந்தி பேச்சு!

பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக- ராகுல்காந்தி பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக- ராகுல்காந்தி பேச்சு! தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சேலம்-உளூந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மதன்லால் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது, பழைய அதிமுக முடிந்து விட்டது, இப்போது இருப்பது ஆர்எஸ்எஸ் பாஜகவால் இயக்கப்படும் அதிமுக. இது பழைய அதிமுக என்று யாரும் நினைக்க வேண்டாம் தற்போது இருப்பது மாஸ்க் அணிந்த அதிமுக. அதிமுகவின் முகக் கவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ் பாஜகதான் தெரியும். பழைய அதிமுக போய்விட்டது. தற்போது ஆர்எஸ்எஸ் பாஜகவினால் இயக்கப்படும் அதிமுக உள்ளது. அமித்ஷா மோகன் பகவத் காலில் விழ ஒரு தமிழர் கூட விரும்ப மாட்டார்கள், ஆனார் அதிமுகவினர் செய்கின்றனர். புலனாய்வுத் துறை மத்த...
தமிழகத்தில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது- திருமாவளவன்!

தமிழகத்தில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது- திருமாவளவன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது- திருமாவளவன்! சேலம் சீலநாயக்கன்பட்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது, 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று புதிய வரலாற்றை படைக்க வேண்டும். எதிரணியில் இருப்பவர்கள் கொள்கை அடிப்படையில் இணைந்தவர்கள் அல்ல, அதிமுக தலைமையிலான கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். அதிமுக மீது சவாரி செய்து தமிழகத்தில் வலிமை பெறலாம் என பாஜக பார்க்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லை என்ற நிலையை பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை. தமிழகத்தை பாஜகவிடம் அடகு வைத்திருக்கிற அதிமுகவிடம் இருந்து மீட்க வேண்டும். சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார்கள். அதிமுக, பாமக என யார் வெற்றி பெற்றாலும் அவ...