வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

நடிகைகள்

ரெட் கார்டா?…. கொரோனாவா? – பிக்பாஸில் இருந்து நமீதா வெளியேறியதன் பின்னணி இதுதான்!

ரெட் கார்டா?…. கொரோனாவா? – பிக்பாஸில் இருந்து நமீதா வெளியேறியதன் பின்னணி இதுதான்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
ரெட் கார்டா?.... கொரோனாவா? - பிக்பாஸில் இருந்து நமீதா வெளியேறியதன் பின்னணி இதுதான்! பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கையும் ஒருவர். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்துகொண்டது இதுவே முதன்முறை. கடந்த வாரம் நடந்த டாஸ்கில் நமீதா மாரிமுத்து, தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து பேசியது காண்போரை கண்கலங்க வைத்தது. இவ்வாறு முதல் வாரமே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நமீதா, இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார். அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறியதாக கமல்ஹாசன் தெரிவித்தார். அவர் பிக்பாஸ் வீட்டில்...
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அசத்தல் அப்டேட்டை வெளியிட்ட திரிஷா!

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அசத்தல் அப்டேட்டை வெளியிட்ட திரிஷா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அசத்தல் அப்டேட்டை வெளியிட்ட திரிஷா! கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகை திரிஷா வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாகவும், தற்போது அவர் டப்பிங் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் டப்பிங் ஸ்டூடியோவில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சமூக வ...
பிறந்தநாளன்று காதலனை அறிமுகம் செய்து வைத்த ரகுல் பிரீத் சிங்!

பிறந்தநாளன்று காதலனை அறிமுகம் செய்து வைத்த ரகுல் பிரீத் சிங்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிறந்தநாளன்று காதலனை அறிமுகம் செய்து வைத்த ரகுல் பிரீத் சிங்! தமிழில் அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். அதன்பின், கார்த்தி ஜோடியாக ‘தேவ்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, சூர்யாவின் ‘என்ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த அவர், தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அயலான்’ படத்தில் நடித்துள்ளார். இதுதவிர பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரகுல் பிரீத் சிங், சமூக வலைதளம் வாயிலாக தனது காதலனை அறிமுகம் செய்து வைத்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானி என்பவரை காதலிப்பதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “இந்த வருடம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு நீ. என் ...
பிரபல நடன இயக்குனர் இயக்கும் படத்தில் ஆண்ட்ரியா!

பிரபல நடன இயக்குனர் இயக்கும் படத்தில் ஆண்ட்ரியா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பிரபல நடன இயக்குனர் இயக்கும் படத்தில் ஆண்ட்ரியா! மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை ஆண்ட்ரியா, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை பாபி ஆண்டனி இயக்க உள்ளார். நடன இயக்குனரான இவர், இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது....
மீண்டும் இணைந்த ‘கலகலப்பு 2’ கூட்டணி!

மீண்டும் இணைந்த ‘கலகலப்பு 2’ கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் இணைந்த ‘கலகலப்பு 2’ கூட்டணி! சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு 2’. ஜீவா, மிர்ச்சி சிவா ஆகியோர் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர்கள் ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ள படத்துக்கு ‘கோல்மால்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் பொன் குமார் இயக்க உள்ளார். அவர் இயக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தில் பாயல் ராஜ்புட் மற்றும் தாராள பிரபு பட நடிகை தான்யா ஹோப் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தை ஜாகுவார் ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் ஜெயின் மற்றும் நரேஷ் ஜெயின் தயாரிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக மொரீசியஸில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்....
நயன்தாராவுடன் டூயட் பாடும் ரஜினி!

நயன்தாராவுடன் டூயட் பாடும் ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நயன்தாராவுடன் டூயட் பாடும் ‘அண்ணாத்த’  ரஜினி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று 2வது பாடல் வெளியிடப்பட்டது.  ‘சாரக்காற்றே’ எனும் இந்த பாடல் காட்சியில் ரஜினி காந்த் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். ...
வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த ராஷி கன்னா!

வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த ராஷி கன்னா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த ராஷி கன்னா! தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து அறிமுகமானவர் ராஷிகன்னா, அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். ராஷிகன்னா இணையதளத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறும்போது, ‘‘எனக்கு ஆண் நண்பர் இல்லை. இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. எனது வாழ்க்கை துணைவரை கண்டுபிடிக்கும்போது எல்லோருக்கும் சொல்வேன். எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு எல்லா கதாநாயகர்களையும் பிடிக்கும். தமிழில் விஜய் எனக்கு பிடித்த நடிகர், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு ஆக...
காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா!

காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா! தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் தற்போது வேறு நடிகைகளை தேடி வருகின்றனர். ஏற்கனவே தெலுங்கில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க இருந்த கோஸ்ட் படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை அவர் இழந்துள்ளார். தமிழில் ராஜா சரவணன் இயக்கத்தில் உருவாகும் ‘ரவுடி பேபி’ படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் காஜல் அகர்வாலை தான் ஒப்பந்தம் செய்திருந்தனர். தற்போது அந்த வாய்ப்பு ஹன்சிகா வசம் சென்றுள்ளது. இப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லன் ஜான் கோகைனும் முக்கிய ...
பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரொம்ப பாதிக்கப்பட்டேன் –  ரம்யா பாண்டியன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரொம்ப பாதிக்கப்பட்டேன் – ரம்யா பாண்டியன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரொம்ப பாதிக்கப்பட்டேன் - ரம்யா பாண்டியன்! தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் பிரபலமானார். பின்னர் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது. தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக்பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி எது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள ரம்யா பாண்டியன், “பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆனால், அந்த நிகழ்ச்சியால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன். அதைவிட குக...
போன் நம்பர் கேட்ட ரசிகர்… உடனே ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

போன் நம்பர் கேட்ட ரசிகர்… உடனே ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
போன் நம்பர் கேட்ட ரசிகர்... உடனே ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்! தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளையும் கமெண்ட்களையும் குவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது ரசிகர்களுடன் சமூக வலைத் தள பக்கத்தில் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் போன் நம்பர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதிஹாசன் 100 என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் இந்த பதிலை பலரும் லைக் செய்து வருகின்றனர்....