சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

politics

அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்தார்!

அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்தார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
மோகன் ஜி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருந்த இப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன் ஜி. ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்க, சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராயபுரத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது ராயபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், இயக்குனர் மோகனை சந்தித்து வாக்கு சேகரித்து மோகனையும் வாழ்த்தி சென்றார்....
நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்!

நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை ஷகிலா கட்சியில் இணைந்தார்! மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகி வெளியானது. இந்திரஜித் லங்கேஷ் இயக்கிய இப்படத்தில் ரிச்சா சத்தா ஷகிலாவாக நடித்திருந்தார். தற்போது ஷகிலா சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் யூடியூப் தளங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தமிழக காங்கிரஸின் மனித உரிமை துறையில் இணைந்திருக்கிறார் நடிகை ஷகிலா. இதற்கான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் ஷகிலா....
சென்னையில் இன்று தொடங்கிய தபால் வாக்குப்பதிவு!

சென்னையில் இன்று தொடங்கிய தபால் வாக்குப்பதிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்களுக்கு தபால் ஓட்டு அளிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. கொரோனா தொற்று காலத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதால், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு போடும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த புதிய நடைமுறை மூலம் வயதானவர்கள் தங்கள் வாக்கினை வீடுகளில் இருந்தே பதிவு செய்யலாம். வாக்குச்சாவடிக்கு வரத் தேவையில்லை. சென்னை மாவட்டத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு விருப்பம் உள்ள முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. 12 ஆயிரம் பேர் தபால் ஓட்டு போட விண்ணப்பித்து இருந்தனர். அதனை ஆய்வு செய்தததில் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 7,300 பேர் மட்டுமே தபால் ஓட்டு போடுவதற்கு இறுதி செய்யப்பட்டனர். சென்னையில் உள்ள 16 சட்டமன்...
மீன்பிடித்த 40 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை படை!

மீன்பிடித்த 40 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை படை!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
மீன்பிடித்த 40 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை படை! தமிழக கடற்கரை பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது தாக்குதல் நடத்துவதுடன் அவர்களை சிறை பிடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் இந்த பிரச்சனைக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் 40 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று காலை சுமார் 300 படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில் அவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை-இந்திய கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் கப்பலில் ரோந்து வந்தனர். திடீரென அவர்கள் தமிழக மீனவர்களை அங்கிருந்து விரட்டி...
அணுகுண்டு மேல் அமர்ந்திருப்பதும், அணுஉலை அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான்-சீமான் ஆவேசம்!

அணுகுண்டு மேல் அமர்ந்திருப்பதும், அணுஉலை அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான்-சீமான் ஆவேசம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
அணுகுண்டு மேல் அமர்ந்திருப்பதும், அணுஉலை அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான்-சீமான் ஆவேசம்! செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பஸ் நிலையம் எதிரே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்போரூர் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகன சுந்தரியை ஆதரித்து திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எல்லா திட்டங்களையும் தமிழகத்திலேயே நிறுவி வாழ்வதற்கு வாய்ப்பற்ற நிலையை உருவாக்கி விட்டார்கள். 2½ ஆண்டுகளுக்கு மேல் அணு உலைக்கு எதிராக போராடி இன்னும் முடியவில்லை. போராட்டத்தின்போது 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி என்று மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட கழிவுகளை கடலில் கொட்டுவதால் மிக பெரிய பாதிப்பை சந்திக்கிறோம். கல்பாக்கம் அணு உலை காரணமாக 14 கிராமங்களில் பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ...
தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு பாதுகாப்பானது – உச்சநீதிமன்றம் கருத்து

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு பாதுகாப்பானது – உச்சநீதிமன்றம் கருத்து

HOME SLIDER, NEWS, politics
    தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு சரியானதுதான்; அரசியல் சாசனத்தின் பாதுகாப்பைப் பெற்றுள்ளது; தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மாநிலங்கள் 50% இடஒதுக்கீட்டு வரம்பை தாண்டி செல்லலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் மராத்தி ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும் தமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் மராத்தா இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்புக்குப் பின்னர் இந்த வழக்கு விசாரிக்கபட உள்ளது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, நாகேஸ்வர ராவ், அசோக் பூஷண், அப்துல் நசீர், ரவீந்தர பட் ஆகியோர் அடங்கிய அரசியல் பெஞ்ச் மு...
மராட்டியத்தில் ஆட்சியை சீர்குலைக்க நினைத்தால்…. பா.ஜ.க.,வுக்கு- சிவசேனா எச்சரிக்கை

மராட்டியத்தில் ஆட்சியை சீர்குலைக்க நினைத்தால்…. பா.ஜ.க.,வுக்கு- சிவசேனா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மராட்டியத்தில் ஆட்சியை சீர்குலைக்க நினைத்தால்.... பா.ஜனதாவுக்கு- சிவசேனா எச்சரிக்கை மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் கமி‌ஷனர் பரம்பீர் சிங் சரியாக நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறி அவர் கமி‌ஷனர் பணியில் இருந்து மாற்றப்பட்டார். இந்தநிலையில் பரம்பீர் சிங், மாநில உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மீது ஒரு முக்கிய குற்றச்சாட்டை கூறினார். உள்துறை மாதம் மாதம் ரூ.100 கோடி கமி‌ஷன் பணம் வசூலித்து தரும்படி வற்புறுத்தியதாகவும், அதை ஏற்க மறுத்ததால் தன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். இந்த பிரச்சினை மராட்டியத்தில் பெரிய வி‌ஷயமாக வெடித்துள்ளது. உள்துறை மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதா வற்புறுத்தி வருகிறது. அவர் ராஜினாமா செய்ய மாட்டார் என்று சரத்பவார் அறிவித்து இருக்கிறார். இந்தநிலையில் சி...
இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு  ஈழத் தமிழர்களுக்கு மோடி அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம் -மு.க ஸ்டாலின்

இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு ஈழத் தமிழர்களுக்கு மோடி அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம் -மு.க ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics
இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவி ஈழத் தமிழர்களுக்கு மோடி அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. ஈழத் தமிழர்களுக்கு விரோதமான பாஜக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சார்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இந்தியா, இல...
சென்னையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களின் வாக்கு யாருக்கு?

சென்னையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களின் வாக்கு யாருக்கு?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், முன்னோட்டம்
சட்டசபை தேர்தலில் சென்னையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களின் வாக்கு யாருக்கு? தலைநகர் சென்னை வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னையாக திகழ்கிறது. தொடக்கத்தில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பிழைப்புக்காக சென்னைக்கு ஏராளமானோர் படையெடுத்தனர். தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குறிப்பாக குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து பலரும் சென்னைக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்தவர்கள், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களை பெறுவது சிம்ம சொப்பனமாக திகழ்கிறது.   ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய வட மாநிலத்தவர்களோ வாக்குரிமை, ஆதார் கார்டு, லைசென்சு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசின் அடையாள ஆவணங்களை பெற்று, தற்போது பூர்வீக சென்னைவாசிகளாகவே மாறி விட்டார்கள். சென்னை நகரின் பல இடங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் தாய்மொழி அல்லாத வட மாநிலத்தவர்க...
தொல். திருமாவளவன் மு.க.ஸ்டாலினை ஆதரித்து நாளை பிரசாரம்!

தொல். திருமாவளவன் மு.க.ஸ்டாலினை ஆதரித்து நாளை பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், முன்னோட்டம்
தொல். திருமாவளவன் மு.க.ஸ்டாலினை ஆதரித்து நாளை பிரசாரம்! விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை மேற்கொண்டார். காலையில் பிரசார பாடல் ஒலிப்பேழையை வெளியிட்ட அவர் மாலையில் திருக்கழுகுன்றம், கேளம்பாக்கம், திருப்போரூர் (பொதுக்கூட்டம்) ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். இன்று (செவ்வாய்கிழமை) மாலை பவுஞ்சூர், செய்யூர், சித்தாமூர் கூட்டுச்சாலை, சூனாம்பேடு ஆகிய இடங்களில் திருமாவளவன் பேசுகிறார். இரவு 7 மணிக்கு கடப்பாக்கம், கல்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நாளை (24-ந் தேதி) சென்னையில் 6 தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார். மாலை 3 மணிக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 4 மணிக்கு திரு.வி.க. நகர், 5 மணிக்கு எழ...