புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

HOME SLIDER

விஜய் – சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ …!

விஜய் – சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ …!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் - சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ ...! சிவகார்த்திகேயன் - மித்ரன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ஹீரோ என்று பெயரிடப்பட்டுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் நடிகர் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிக்கும் இந்தப் படத்துக்கும் ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. சிவகார்த்திகேயன் பட டைட்டில் அறிவிக்கப் படுவதற்கு முன்பே விஜய் தேவரகொண்டா பட டைட்டில் ஹீரோ என்றும் ப...
கருத்து கணிப்புகளில் கூடாரம் காலியாகும் அதிமுக… நாற்காலி பிடிக்கும் திமுக..!

கருத்து கணிப்புகளில் கூடாரம் காலியாகும் அதிமுக… நாற்காலி பிடிக்கும் திமுக..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. குறிப்பாக தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி இருவரின் மறைவுக்கு பின் நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் அதிகம் கவனம் பெற்றது. திமுக ஸ்டாலின் தலைமையில் ஒரு கூட்டணியையும், அதிமுக பாஜகவுடன் ஒரு கூட்டணியும், தினகரனின் அமமுக தனியாகவும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் தனியாகவும், நாம் தமிழர் சீமான் தனியாகவும் களத்தில் நின்றன. தேர்தல் வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடை பெற உள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை நிலவுவதால் மாநில கட்சிகள் அதிக அளவில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதோடு மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக மத்தியில் இருந்த மோடி அரசுக்கு இணக்கமாக செயல்பட்டதோடு, மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்...
அஜீத்துடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!

அஜீத்துடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜீத்துடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!? அஜீத் குமரின் அடுத்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கப் போவதாகவும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் கோலிவுட்டை பரபரக்கிறது. இதற்கிடையில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் வசம் ஒப்படைக்கலாம் என்று தயாரிப்பு தரப்பு தனது விருப்பத்தை அஜீத்குமாரிடம் தெரிவித்துள்ளது. அதே நேரம் இயக்குனர் வினோத் சாய்ஸ் ஜிப்ரான். இவர் ஏற்கனவே தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வினோத்துடன் இணைந்து ஹிட் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் சாய்ஸ் ஜிப்ரான் என்பதையும் அஜீத் கவனத்திற்கு வினோத் கொண்டு போய் விட்டார். இனி முடிவு அஜீத் கையில் தான்... அஜீத் தேர்வு ஏ.ஆர்.ரஹ்மான் ஆக இருக்கும் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.  ...
அஜீத் கால்ஷீட் அடுத்து யாருக்கு…?!

அஜீத் கால்ஷீட் அடுத்து யாருக்கு…?!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமாரின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வியை விட தயாரிப்பு நிறுவனம் எது என்ற எதிர்பார்ப்பு தான் இப்போது கோலிவுட்டில் நிலவுகிறது. அஜீத் இப்போது போனிகபூர் தயாரிப்பில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார். இது ஒரு ரீமேக் படம். இந்தியில் அஜீத் நடிப்பதாக இருந்தால் 3 கதைகள் இருக்கிறது என்றும் அஜீத் சம்மதம் சொன்னால் இந்தி , தமிழில் மெகா பட்ஜெட்டில் தயாரிக்க தான் தயாராக இருப்பதாக போனி கபூர் கூறியிருக்கிறார். ஆனால் போனி கபூர் கருத்துக்கு அஜீத் எந்த பதிலும் சொல்லவில்லை. இதற்கிடையில் விஸ்வாசம் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜீத்குமாருடன் இணைந்து படம் தயாரிக்க தியாகராஜனின் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் விருப்பம் தெரிவித்து உள்ளது. ஆனால் அஜீத் இவர்களுக்கும் எந்த பதிலும் சொல்லாமல் வழக்கமான டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்து விட்டு...
என் மீது செருப்பை வீசியவருக்குதான் அவமானம் எனக்கில்லை நான் காந்தியின் ரசிகன் – ஒத்த செருப்பு விழாவில் கமல் நையாண்டி

என் மீது செருப்பை வீசியவருக்குதான் அவமானம் எனக்கில்லை நான் காந்தியின் ரசிகன் – ஒத்த செருப்பு விழாவில் கமல் நையாண்டி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் “ஒத்த செருப்பு”. இப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வேளச்சேரியில் நடந்தது. இதில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் கே.பாக்கியராஜ், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நடிகர் கமல்ஹாசன் அரசியலில் மிக வேகமாக இருப்பதாலும், சமீபத்தில் பிரசாரம் செய்த இடத்தில் அவர் மீது செருப்பு வீசப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் பார்திபனின் ஒத்த செருப்பு படவிழாவில் கண்டிப்பாக கமல்ஹாசன் செருப்பு வீச்சுக்கு பதில் சொல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை கமல்ஹாசனும் தனது கலகல பேச்சில் பூர்த்தி செய்தார். கமல் பேசியதாவது: ” எனக்கு காந்தியின் வரலாற்று புத்தகம் கொடுத்தார்கள். நான் திரும்ப திரும்ப படித்தேன். அதில், காந்தி ரயிலில் சென்று கொண்டிருந்தபோது அவரது ஒரு செருப்ப...
“ஒத்த செருப்பு” படத்தை இயக்கி நடித்து தயாரித்த பார்த்திபன் ஆஸ்கார் வெல்லட்டும் – வீடியோ மூலம் வாழ்த்திய ரஜினி

“ஒத்த செருப்பு” படத்தை இயக்கி நடித்து தயாரித்த பார்த்திபன் ஆஸ்கார் வெல்லட்டும் – வீடியோ மூலம் வாழ்த்திய ரஜினி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கும் ரஜினிகாந்த், “என் அருமை நண்பர் பார்த்திபன் ஒரு நல்ல வித்தியாசமான படைப்பாளி. நல்ல மனிதர் புதிது புதிதாக சிந்திக்கக் கூடியவர். நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். அவர் படங்களை இயக்குவதை விட்டு விட்டு நடிக்க வந்துவிட்டாரே என்று நினைத்தேன். சமீபத்தில் அவரை சந்திக்கும் போது அதைப்பற்றி அவரிடமே கேட்டேன். அப்போதுதான் அவர் ஒத்த செருப்பு படத்தைப் பற்றி என்னிடம் சொன்னார். இந்தப் படத்தில் தனி ஒருவர் படம் முழுக்க இருப்பது ஒரு வித்தியாசமான முயற்சி. பாலிவுட்டில் 1960-களில் சுனில் தத் இதேபாணியில் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஹிட் அடித்த...
தேசிய விருது பரிந்துரைக்காக அனுப்பப்பட்ட ஈழ பின்னணியில் உருவாகி `யு’ சான்றிதழை பெற்ற முதல் தமிழ்ப்படம் சினம் கொள்

தேசிய விருது பரிந்துரைக்காக அனுப்பப்பட்ட ஈழ பின்னணியில் உருவாகி `யு’ சான்றிதழை பெற்ற முதல் தமிழ்ப்படம் சினம் கொள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
தேசிய விருது பரிந்துரைக்காக அனுப்பப்பட்ட ஈழ பின்னணியில் உருவாகி `யு' சான்றிதழை பெற்ற முதல் தமிழ்ப்படம் சினம் கொள் கனடாவில் பிறந்து வளர்ந்த ரஞ்சித் ஜோசஃப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `சினம் கொள்'. இலங்கையில் போருக்குப் பிறகான தசாப்தத்தில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பேசும் படமாக இது உருவாகி இருக்கிறது. 6 வருடங்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் ஆண்டவன் கட்டளை புகழ் அரவிந்தன், அவரது வீடு இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை காண்கிறார். மேலும் அவரது குடும்பத்தினர் காணாமல் போயிருக்கிறார்கள். அதன் பின்னணில் நடப்பதை மையப்படுத்தி கதை நகர்கிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழர்கள் எதிர்கொள்ளும் சில கடினமான, யதார்த்தமான விஷயங்களையும் பேசியிருப்பதாக இயக்குனர் ரஞ்சித் ஜோசஃப் தெரிவித்தார் இந்த படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு `யு' சான்...
கேன்ஸ் பட விழாவில் காஞ்சீபுரம் பட்டு சேலை அணிந்த கங்கனா

கேன்ஸ் பட விழாவில் காஞ்சீபுரம் பட்டு சேலை அணிந்த கங்கனா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சர்வதேச அளவில் ஆஸ்கார், குளோப் திரைப்பட விருதுகளுக்கு அடுத்து கேன்ஸ் விருதுகள் உயர்வாக கருதப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான 75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் தொடங்கி உள்ளது. வருகிற 25-ந்தேதி வரை இந்த விழா நடக்கிறது. போட்டியில் சர்வதேச அளவில் 21 படங்கள் பங்கேற்கின்றன. சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கேன்ஸ் பட விழாவில் அமெரிக்க இயக்குனர் ஜின் ஜார்முச் இயக்கிய ‘த டெட் டோன்ட் டை’, டாரண்டினோவின் ‘ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட்’, முதன் முறையாக கருப்பின பெண் இயக்குனரான பிரான்சிஸ் மட்டி டியோப் இயக்கிய படம் ஆகியவற்றை திரையிடுவது முக்கியத்துவம் பெற்றுள்ளன. கேன்ஸ் விழாவில் விருது பெறும் பல படங்கள் ஆஸ்கார் விருதை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் நடிகை...
மோடி,அமீத்ஷாவை பாதுகாக்க தேர்தல் கமிஷனில் விதிமுறைகள் காலில் மிதிபடுகிறது – காங்கிரஸ் கண்டனம்

மோடி,அமீத்ஷாவை பாதுகாக்க தேர்தல் கமிஷனில் விதிமுறைகள் காலில் மிதிபடுகிறது – காங்கிரஸ் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேர்தல் கமிஷனில் எழுந்துள்ள பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், “தேர்தல் கமிஷன் விதிகள் ஒருமித்த முடிவுக்குத்தான் முன்னுரிமை தெரிவிக்கின்றன. ஆனால் ஒருமித்த முடிவு இல்லை என்கிறபோது பெரும்பான்மை முடிவை ஏற்கச்சொல்கிறது. அரசியல் சாசன அமைப்பு என்கிற வகையில், சிறுபான்மை முடிவும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் மோடியையும், அமித் ஷாவையும் பாதுகாக்க இது மிதிபடுகிறது” என்று குறிப்பிட்டார். மேலும், “பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவும் தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியதாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. ஆனால் அவை குப்பைத்தொட்டியில் போடப்பட்டு விட்டன. இந்தியாவின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை அழிக்கிற பணியை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டுள்ளார்” ...
நோயாளி கெட்டப்பில் கோமாளி ரவி..!

நோயாளி கெட்டப்பில் கோமாளி ரவி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெயம் ரவியின் கோமாளி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. ஜெயம் ரவி நடிப்பில் லக்‌ஷ்மன் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி’. இந்த படத்தில் நாயகிகளாக கஜோல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் மருத்துவமனையில் இருக்கும் ஒரு நோயாளி போல நாயகன் தோற்றம் உள்ளது. ஏற்கனவே தில்லாலங்கடி படத்தில் நோயாளியாக காமெடி செய்திருப்பார் ரவி. மேலும் இது நடிகர் ஜெயம் ரவியின் 24வது படம் என்பது குறிப்பிடத்தக்கது....