வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

politics

“தற்போது சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது”-மு.க.ஸ்டாலின்

“தற்போது சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது”-மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
“தற்போது சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது”, “அநீதி அ.தி.மு.க. ஆட்சி விரைவில் வீழும். தி.மு.க. ஆட்சியை நிலைநாட்ட கழகச் சட்டத்துறை சகோதரர்கள் தங்களது பங்களிப்பை தொய்வில்லாமல், தொடர்ந்து செய்ய வேண்டும்!” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (10-01-2021) மாலை, சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெற்ற தி.மு.க. சட்டத்துறை இரண்டாவது மாநாடு, சட்ட மற்றும் அரசியல் கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரை ஆற்றியானர். தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை அமைப்புகளில் ஒன்றான சட்டத்துறை சார்பில் நடைபெறும் சட்டக் கருத்தரங்கம் மற்றும் அரசியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சட்டக் கருத்தரங்கம் - ...
பொள்ளாச்சி கொடூரம்: தமிழகத்தில் பாலியல் கொடுமை, பெண் வன்கொடுமை அதிகரித்து வருகின்றது – கனிமொழி எம்.பி

பொள்ளாச்சி கொடூரம்: தமிழகத்தில் பாலியல் கொடுமை, பெண் வன்கொடுமை அதிகரித்து வருகின்றது – கனிமொழி எம்.பி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முன்னிலையில் பேசிய கனிமொழி எம்.பி., “பொள்ளாச்சி போராட்டத்தை தடுக்க முயன்றனர். இந்த போராட்டத்தை தடுத்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என தளபதி எச்சரிக்கை விடுத்ததையடுத்து, காவல்துறை பணிந்தது. இதை தடுத்தால் வெகுண்டு எழுவோம். பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயர்களை காவல்துறையே கூறியது. இன்று வரை அந்த கும்பல் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி வருகின்றனர். ஆளுங்கட்சியினர் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என நினைக்கிறனர். அதிமுகவினருடனான ஆதாரங்கள் தொடர்ந்து வந்துகொண்டுள்ளது. எஸ்.பி.வேலுமணிக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இடையே என தொடர்பு இருக்குனு பாருங்க. அதிமுக அமை...
“ஆரசியல் சாசனத்திற்கு ஆபத்து” – திமுக சட்டக்குழு கருத்தரங்கில் ஆ.ராசா பேச்சு!

“ஆரசியல் சாசனத்திற்கு ஆபத்து” – திமுக சட்டக்குழு கருத்தரங்கில் ஆ.ராசா பேச்சு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டக்குழு சார்பில் சட்ட கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய தி.மு.க. துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ..ராசா மேடைப்பேச்சின் விவரம் பின்வருமாறு:- எத்தனை இயக்கங்கள் , எந்த அரசு இது போன்ற சட்ட கருத்தரங்கம் நடத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், சட்ட கருத்தரங்கை நடத்த இருக்கும் முழு தகுதி திராவிட இயக்கத்திற்கு உண்டு என்பதை எடுத்துரைத்தார். அரசியல் சட்டத்திற்கு என்ற ஒரு ஒழுங்குமுறையை வகுத்திருக்கிறார்கள். பல்கிவாலா அவரின் உழைப்பு மற்றும் சட்ட உரிமைகள் நிலை குறித்து தெரிவித்தார். அடிப்படை சட்ட திருத்தங்களை, முகப்பு உள்ள கூறுகளை நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றினால் தவறு என்று கூறுவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு உரிமை இருக்கிறது இது போன்ற அடிப்படைத் தன்மை மாற்றக்கூ...
பேரறிவாளன் உட்பட எழுவரை விடுவிக்க வலியுறுத்தி திரைத்துறையினர் முன்னெடுக்கும் மிஸ்டுகால் இயக்கம்

பேரறிவாளன் உட்பட எழுவரை விடுவிக்க வலியுறுத்தி திரைத்துறையினர் முன்னெடுக்கும் மிஸ்டுகால் இயக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட எழுவரை விடுவிக்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் எழுவரின் விடுதலை கேள்விக்குறியாக உள்ளது. பேரறிவாளனை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 19-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், பேரறிவாளன் உட்பட எழுவரை விடுவிக்க பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்த திரையுலகினர், தற்போது மிஸ்டு கால் இயக்கத்தை தொடங்கியுள்ளனர். இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், ராம், தியாகராஜ குமாரராஜா, ராஜு முருகன், கார்த்திக் சுப்புராஜ், நடிகர் கலையரசன், நடிகைகள் ரோகிணி, ரித்விகா உள்ளிட்டோர் மிஸ்டு கால் இயக்கத்தை தொடங்கி வைத்தனர். பொதுமக்களும் 90995-26633 ...
ஊழலுக்கு எதிரானவர் போல் நாடகமாடும் கவர்னர் கிரண்பேடி -குற்றச்சாட்டும் திருமாவளவன்

ஊழலுக்கு எதிரானவர் போல் நாடகமாடும் கவர்னர் கிரண்பேடி -குற்றச்சாட்டும் திருமாவளவன்

CINI NEWS, HOME SLIDER, politics, செய்திகள்
ஊழலுக்கு எதிரானவர் போல் நாடகமாடும் கவர்னர் கிரண்பேடி -குற்றச்சாட்டும் திருமாவளவன் கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் புதுவை அண்ணா சிலை அருகே தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் நேற்று 2-வது நாள் போராட்டத்தின்போது விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:- புதுவை கவர்னர் கிரண்பேடி மக்களுக்கு எதிராக உள்ளார். அவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும், அரசாணை பிறப்பித்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். நாட்டுக்கு கவர்னர் பதவியே தேவையில்லை என்பதுதான் இங்குள்ள அனைவரின் கருத்து. இந்தியா முழுவதும் அந்த பதவியை காலி செய்யவேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல...
கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம் – முதல்வர் பழனிசாமி உத்தரவு

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம் – முதல்வர் பழனிசாமி உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இணைய வழி கல்விக்காக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தினசரி 2ஜிபி டேட்டா கார்டு இலவசமாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் தமிழக அரசு எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 32 சதவீதத்திலிருந்து 49 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், கல்லூரி மாணாக்கர்கள் சிறந்த கணினி திறன்களை பெற்றிட மாண்புமிகு அம்மாவின் அரசு, அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணைய வழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்து கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவி...
பொள்ளாச்சியில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் கோவையில் தடுக்கப்பட்ட கனிமொழி எம்பி!

பொள்ளாச்சியில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் கோவையில் தடுக்கப்பட்ட கனிமொழி எம்பி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பொள்ளாச்சியில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் கோவையில் தடுக்கப்பட்ட கனிமொழி எம்பி! பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்து தண்டிக்க வலியுத்தி வருகிற 10-ந்தேதி கனிமொழி தலைமையில் திமுக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலத்காரம் செய்து, வீடியோ எடுத்து பணம் பறிக்கும் சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது. இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பைனான்சியர் திருநாவுக்கரசு, சிவீல் என்ஜினீயர் சபரிராஜன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த சமயத்தில் இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.ப...
தை பிறக்கப்போகிறது, வழியும் பிறக்கப்போகிறது – மு.க.ஸ்டாலின்

தை பிறக்கப்போகிறது, வழியும் பிறக்கப்போகிறது – மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி பேசியவர், தை பிறக்கப்போகிறது, வழியும் பிறக்கப்போகிறது என்று கூறினார் சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள அகரம் ஜெயின் பள்ளி பொங்கல் விழாவில் கலந்துகொண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின், வேஷ்டி, சேலைகளுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை  பொதுமக்களுக்க வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,  சமத்துவப் பொங்கலைக் கொண்டாடும் அதே உணர்வோடு மக்களுக்காகப் பணியாற்றுவோம். எனது தொகுதி மக்களுக்குத் தேவையான மக்கள் நலத் திட்ட உதவிகளை வழங்குவதிலும் நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து வருகிறேன். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், மக்கள் பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி வருகிறேன். மாற்றத்தை எதிர்பார்த்து, நான் நீங்கள் மட்டுமல்ல, மக்களும் காத்துள்ளனர். எனவே, நீங்கள் அதற்கு வழிவகை செய்ய வேண்டும். தை பிற...
மீண்டும் சீனாவில் கொரோனா பரவல் 2 நகரங்களில் ஊரடங்கு

மீண்டும் சீனாவில் கொரோனா பரவல் 2 நகரங்களில் ஊரடங்கு

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், 2 நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 17ந்தேதி சீனாவின் வுகான் மாகாணத்தில்  முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்று உலக நாடுகளில் பரவி இதுவரை 19லட்சத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்துள்ளது. இந்த தொற்று பரவலை இதுவரை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. இதற்கு தற்போதுதான் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரத் தொடங்கி உள்ளது. ஆனால், கொரோனா தொற்று பரவல் குறித்து உண்மையான தகவலை தெரிவிக்க சீனா மறுத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது சீனாவில் மீண்டும் தொற்று பரவல் தொடங்கி உள்ளது.  ஹூபே மாகாணத்தில் கடந்த வாரம் புதிதாக 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. குறிப்பாக,  ஷிஜியாஜுவாங் மற்றும் ஜிங்டாய் ஆகிய நகரங்களில் கொரோனா பாதிப்ப...
இங்கிலாந்து ராணிக்கும் அவரது கணவருக்கும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி!

இங்கிலாந்து ராணிக்கும் அவரது கணவருக்கும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
இங்கிலாந்து ராணிக்கும் அவரது கணவருக்கும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரின் கணவர் எடின்பரோ கோமகன் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் அரசிக்கு தற்போது 94 வயதாகிறது மற்றும் அவரின் கணவர் இளவரசர் பிலப்பிற்கு 99 வயதாகிறது. இவர்கள் இருவரும் தற்போது கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டனில், குறைந்தபட்சம் 1 டோஸ் கொரோனா தடுப்பு மருந்தாவது எடுத்துக்கொண்ட 1.5 மில்லியன் மக்களில் இவர்களும் அடக்கம் என்று கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ராணியின் குடும்ப மருத்துவர் இந்த தடுப்பு மருந்து டோஸ் செலுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா காரணமாக, ராணியும...