செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

politics

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மூன்று பேர் கைது!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மூன்று பேர் கைது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் இளம்பெண்களை அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு, பிறகு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில்  2ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் திடீர் திருப்பமாக பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை சி...
தாஜ்மஹாலில் காவி கொடி கட்ட முயற்சி!

தாஜ்மஹாலில் காவி கொடி கட்ட முயற்சி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தாஜ்மஹாலில் காவி கொடி கட்ட முயற்சி! நேற்று காலை தாஜ்மகாலில் சுற்றுலாவாசிகளை போல் சுமார் பத்துப் பேர் நுழைந்தனர். தாஜ்மகாலுக்கு முன்பாக பார்வையாளர்கள் படம் எடுப்பதற்காக உள்ள நீண்ட பளிங்குக்கல் இருக்கையில் அமர்ந்தவர்கள், தாம் கொண்டுவந்த காவிக் கொடிகளை வெளியே எடுத்து அசைத்துக் காட்டினர். இதில் சிலர் ‘ஹர் ஹர் மஹாதேவ்!’ எனவும், ’ஜெய் ஸ்ரீராம்!’ என்றும் கோஷமிட்டனர். பிறகு அக்காவிக் கொடிகளை தாஜ்மகாலினுள் நாட்டவும் முயற்சித்துள்ளனர். இந்தக் காட்சிகளை இரண்டு வீடியோக்களாகவும் படம் எடுத்தவர்கள் உள்ளே இருந்தபடியே அதைச் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இதையடுத்து, தாஜ்மகால் அமைந்துள்ள பகுதியான ஆக்ராவின் தாஜ்கன்ச் காவல் நிலையத்தார் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். இதில் காவிக் கொடிகளை வீசிக் காட்டியவர்களுக்குத் தலைமை வகித்தவர் ஆக்ரா மாவட்ட இந்து ஜாக்ரன் மன்ச் தலைவரான கவுரவ் தா...
105 ஆண்டுகளுக்கு பின்சென்னையில் இடைவிடாமல் வெளுத்த கனமழை!

105 ஆண்டுகளுக்கு பின்சென்னையில் இடைவிடாமல் வெளுத்த கனமழை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  105 ஆண்டுகளுக்கு பின்சென்னையில் இடைவிடாமல் வெளுத்த கனமழை! சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை காலம் நிறைவு பெற்றதாக கூறப்பட்டாலும், கிழக்கில் இருந்து தொடர்ந்து காற்று வீசி வருவதால் பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி, வருகிற 12–ந்தேதி வரை தமிழகத்தில் ஆங்காங்கே வடகிழக்கு பருவமழை தொடரும் என்றே தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று ஆய்வு மையம் தெரிவித்திருந்தது ஆய்வு மையம் தெரிவித்தது போல் தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே மழை பெய்த...
பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் முதலில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளவேண்டும் – காங்கிரஸ்

பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் முதலில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளவேண்டும் – காங்கிரஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ளவேண்டும் பீகார் காங்கிரஸ் தலைவர் அஜித் சர்மா தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸின் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ பயன்படுத்தஅவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பீகார் பாகல்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏவும், பாலிவுட் நடிகை நேஹா ஷர்மாவின் தந்தையுமான அஜித் சர்மா கூறுகையில், கொரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுவான மக்களிடையே பல்வேறு வகையான சந்தேகங்கள் இருப்பதாக கூறினார். இதைக் கருத்தில் கொண்டு, முதலில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாரதீய ஜனதா கட்சியின் பெரிய தலைவர்கள் தடுப்பூசி எடுத்து மக்களின் சந்தேகங்களை நீக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் ஜனாதிபதிகள் இதற்கு முன்னர் தடுப்பூசி எடுத்து கொண்டதை மேற்கோள்காட்டி இதை தெரிவித்தார்...
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கு!

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கிற்கு , இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான அரசாணையை வெளியிட்டது.சுமார் 40 நாட்களுக்கு மேல்  இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி  மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். அதன்படி மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. இதனிடையே அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி ...
தமிழகம் முழுவதும் இந்த 3 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை..!

தமிழகம் முழுவதும் இந்த 3 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகம் முழுவதும் இந்த 3 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை..! தமிழகம் முழுவதும் வரும் 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கும் , பார்களும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ...
தைப்பூச திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தைப்பூச திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தைப்பூச திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத்திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை பரிசீலித்து வரும...
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தேதிகள் முடிவு!

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தேதிகள் முடிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தேதிகள் முடிவு! மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் ஆய்வு செய்தார். காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்கள், பார்வையாளர்கள் கேலரி, மாடுபிடி வீரர்களுக்கு  மருத்துவ பரிசோதனை செய்யும் இடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார். இதனிடையே மதுரை ஆட்சியர் அன்பழகன் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வரும்  14ம் தேதி அவனியாபுரத்திலும், 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. போட்டியில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்களில் தலைவர்கள் படம் இருக்கக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு

பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்களில் தலைவர்கள் படம் இருக்கக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்களில் தலைவர்கள் படம் இருக்கக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரசி அட்டைதாரர்களுக்கும் ரூ.2500 தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று டிசம்பர் 19ஆம் தேதி சேலத்தில் தொடங்கிய முதல் நாள் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் முதல்வர் பரிசுத்தொகை அறிவித்ததற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது. பரிசுத் தொகைக்காக வழங்கப்படும் டோக்கன்களில் அதிமுக தலைவர்களின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதாக திமுக தொடர்ந்த வழக்கில், அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டது  ...
உருக்கமான மெசேஜ்… திரட்டிய நிதி ஒரு கோடியே 2லட்சம்… தீ விபத்தில் உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கு தலா 51 லட்சம் வழங்கிய டிஜிபி ஜாபர்சேட்!

உருக்கமான மெசேஜ்… திரட்டிய நிதி ஒரு கோடியே 2லட்சம்… தீ விபத்தில் உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கு தலா 51 லட்சம் வழங்கிய டிஜிபி ஜாபர்சேட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உருக்கமான மெசேஜ்... திரட்டிய நிதி ஒரு கோடியே 2லட்சம்... தீ விபத்தில் உயிரிழந்த வீரர்கள் இருவரது குடும்பத்தினருக்கு தலா 51 லட்சம் வழங்கிய டிஜிபி ஜாபர்சேட்! மதுரை மாவட்டம் மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் கடந்த மாதம் நள்ளிரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.காற்றின் வேகத்தில் தீ அதிகமாக பரவியதால் தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சக்திராஜா ஆகிய 2 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். மற்றும் சில வீரர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் இருவர் மரணமடைந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார் டிஜிபி ஜாபர்சேட். அத்தோடு நின்றுவிடாமல் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்ந்த அலுவலர்க...