வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: கோர்ட் உத்தரவு

போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட சாத்தான்குளம் அப்பா, மகன் மரணம் குறித்து நீதிமன்றம் புது உத்தரவு!

போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட சாத்தான்குளம் அப்பா, மகன் மரணம் குறித்து நீதிமன்றம் புது உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். காவல்துறையை கண்டித்து தொடர் போராட்டம் நடைபெற்றது. இன்று தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, தென்மண்டல ஐ.ஜி., தூத்துக்குடி எஸ்.பி. ஆகியோர் காணொலி மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள்  பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் பணியிடை  நீக்கம் ச...
தமிழகத்தில் கொரானா காலத்தில் அதிகப்படியான மின் கட்டண கொள்ளைக்கு முடிவு வருமா?

தமிழகத்தில் கொரானா காலத்தில் அதிகப்படியான மின் கட்டண கொள்ளைக்கு முடிவு வருமா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்தில் கொரானா ஊரடங்கால் தொழில் முற்றிலும் முடங்கி உள்ளது. ஆனால் மின் கட்டணம் மட்டும் பல மடங்கு உயர்ந்து வசூலிக்கப்படுவதாக பலரும் புகார் தெரிவித்தனர். இந்த சூழலில் மின் கட்டணத்தை இரண்டு இரண்டு மாதங்களாகத் தனித்தனியாகக் கணக்கிட உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது. இதில் அரசு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கை ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கொரானா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்குச் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சாரக் கணக்கீடு செய்யும்போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சாரப் பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாதக...
ரஜினியின் “எந்திரன்’ பட கதை விவகாரம் – இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

ரஜினியின் “எந்திரன்’ பட கதை விவகாரம் – இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "எந்திரன்' பட கதை விவகாரம் - ஷங்கர் நேரில் ஆஜராக உத்தரவு ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் 1996 - ம் ஆண்டு உதயம் என்ற பத்திரிகையில் "ஜூகிபா'" என்ற தலைப்பில் தொடர்கதை எழுதினேன். அந்த கதையை தனது அனுமதி இல்லாமல் இயக்குநர் ஷங்கர் 'எந்திரன்' படமாக எடுத்துள்ளார். எனவே தனக்கு ரூ.1கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் ஆகியோர் நவம்பர் 1-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்....