வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: சாத்தான்குளம் அப்பா மகன் இரட்டைக்கொலை

சாத்தான்குளம் போலீஸ் சித்தரவதையில் கொல்லப்பட்ட ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது!

சாத்தான்குளம் போலீஸ் சித்தரவதையில் கொல்லப்பட்ட ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை: ஆணை வழங்கப்பட்டது சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையின்போது கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து, ஜெயராஜ் மகளுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். தூத்துக்குடி சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசு நிதி உதவி அளித்திருந்ததோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படுமென ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, ஜெயராஜின் மூத்த மகளும், பென்னிக்சின் சகோதரியுமான பெர்சிக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கான நியமன ஆணையை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட பெர்சி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சோதனையில் இருந்து மீள்...
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதாகி உள்ள சிறப்பு எஸ்.ஐ. பால்துரைக்கு கொரானா!

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதாகி உள்ள சிறப்பு எஸ்.ஐ. பால்துரைக்கு கொரானா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதாகி உள்ள சிறப்பு எஸ்.ஐ. பால்துரைக்கு கொரானா! சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கைதான 10 காவலர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், விசாரணை குழுவில் இருந்த 4 சிபிஐ அதிகாரிகளுக்கு  வைரஸ்  தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சிபிஐ அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து சாத்தான்குளம் வழக்கில் கைதான சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரைக்கும் கொரானா தொற்று உறுதியாகியுள்ளது. சிறப்பு அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறக...
சாத்தான்குளம் சம்பவத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு வைரஸ் வந்துடுச்சாம்… விசாரணை சுணக்கம்!

சாத்தான்குளம் சம்பவத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு வைரஸ் வந்துடுச்சாம்… விசாரணை சுணக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சாத்தான்குளம் சம்பவத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு வைரஸ் வந்துடுச்சாம்... விசாரணை சுணக்கம்!   சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கைதான காவலர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 22-ந்தேதி காவலர்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், விசாரணை குழுவில் இருந்த மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளத...
சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், SI ரகுகணேஷ் மீது மேலும் ஒரு கொலைக் குற்றச்சாட்டு..!

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், SI ரகுகணேஷ் மீது மேலும் ஒரு கொலைக் குற்றச்சாட்டு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அப்பாமகன் இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் உள்ள சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், SI ரகுகணேஷ் மீது மேலும் ஒரு கொலைக் குற்றச்சாட்டு..! தூத்துக்குடி மாவட்டம் ஆசீர்வாதபுரத்தை சேர்ந்தவர், வடிவு. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மே 18-ந்தேதி ஜெயக்குமார் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக எஸ்.ஐ.ரகுகணேஷ், தனது மூத்த மகன் துரையைத் தேடி சந்தேகத்தின் பேரில் விசாரிக்க வந்ததாக குறிப்பிட்டார். அப்போது துரை வீட்டில் இல்லாததால் இளைய மகன் மகேந்திரனை அழைத்துச் சென்றனர். அதன் பின்னர், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் எஸ்.ஐ.ரகுகணேஷ் ஆகியோர் மகேந்திரனை போலீசார் கடுமையாக தாக்கினர். மறுநாள், இதுகுறித்து யாரிடமும் புகார் செய்யக்கூடாது என மிரட்டி அவரை விடுவித்துள்ளனர். போலீசார் தாக்கியதில் மகேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சில ந...
சாத்தான்குளம் சம்பவத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் பெண் போலீஸ் கைதாக வாய்ப்பு!?

சாத்தான்குளம் சம்பவத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் பெண் போலீஸ் கைதாக வாய்ப்பு!?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொலை சம்பவத்தை குழப்ப சிபிசிஐடிக்கு ஒரு மாதிரியும், சிபிஐ விசாரணையில் வேறு மாதிரியும் சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் போலீஸ் கைதாகலாம்?! சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதற்கு முன்னதாக இவ்வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது பெறப்பட்ட சாட்சியங்கள், திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் சிபிசிஐடி போலீஸ் ஒப்படைத்து விட்டது. இந்த நிலையில் சிபிசிஐடி அதிகாரிகளுடன் சிபிஐ அதிகாரிகள் நேற்று 4 மணி நேரம் ஆலோசனை செய்தனர். சிபிசிஐடி விசாரணையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை சிபிஐ விசாரணையுடன் ஒப்பிட்டும் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் பெண் போலீஸ் அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதாக கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையில் சாத்தான்குளம் காவல் நிலைய பெண்  போல...
சாத்தான்குளம் படுகொலை சம்பவம் கைதான போலீசுக்கு ஜூலை 30வரை காவல் நீடிப்பு!

சாத்தான்குளம் படுகொலை சம்பவம் கைதான போலீசுக்கு ஜூலை 30வரை காவல் நீடிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளம் படுகொலை சம்பவம் கைதான போலீசுக்கு ஜூலை 30வரை காவல் நீடிப்பு! சாத்தான்குளம் தந்தை, மகன் கொடூர கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டனர். கோர்ட்டு உத்தரவையடுத்து போலீசார் 5 பேரும், சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அங்கு 5 பேருக்கும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை ஆத்திகுளம் மெயின்ரோட்டில் உள்ள சி.ப...
செய்தி ஊடகங்களை சாபம் விட்ட சிறப்பு SI பால்துரை ஜாமீன் மனுத்தாக்கல்!

செய்தி ஊடகங்களை சாபம் விட்ட சிறப்பு SI பால்துரை ஜாமீன் மனுத்தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
செய்தி ஊடகஙகளை சாபம் விட்ட சிறப்பு SI பால்துரை ஜாமீன் மனுத்தாக்கல்! சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீதர் முதலில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்பின் மனுவை வாபஸ் பெற்றார். இந்நிலையில் சிறப்ப்பு எஸ்.ஐ. பால்துரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பால்துரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்....
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையில் A1 சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், A4 இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சேர்ப்பு!

சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையில் A1 சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், A4 இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சேர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் இருவரையும் கொடூரமாக போலீசார் அடித்து கொன்ற வழக்கு இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸ் வழக்கின் அனைத்து ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்தது. விசாரணை வேட்டையில் இறங்கிய சிபிஐ சந்தேகமரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியது. மேலும், சாத்தான்குளம் சப் இன்ஸ்பெக்டர் ரகுகணேஷை ஏ1 குற்றவாளியாக அறிவித்துள்ளது. அதோடு முக்கிய சர்ச்சை இன்ஸ்பெக்டராக இருக்கும் ஸ்ரீதர் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொலை வழக்காக மாற்றியதோடு ஏ1, ஏ2 என குற்றவாளிகள் விவரத்தையும் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
சாத்தான்குளம் படுகொலை சம்பவம் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் – ஐ.நா.விருப்பம்

சாத்தான்குளம் படுகொலை சம்பவம் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் – ஐ.நா.விருப்பம்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  சாத்தான்குளம் படுகொலை சம்பவம் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் - ஐ.நா.விருப்பம் சாத்தான்குளம் தந்தை மகன் கொடூர கொலை வழக்கு தமிழகம் தாண்டி இந்தியா தாண்டி சர்வதேச  அளவில் சிறப்பு கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணை குறித்து தனிகவனம் செலுத்த வேண்டும் என ஐநா மன்றம் பிரதமர் மோடிக்கும், முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி, கவர்னர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியது. நியூயார்க்கில்  ஐநா தலைமை அலுவகலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டர்சின் செய்தி தொடர்பாளர், ஸ்டீபன் துஜாரிக்கிடம் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்த ஸ்டீபன் துஜாரிக், “சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் மரணம் தொடர்பாக முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.  இது போன்ற மரணங்கள்  தொடர்பாக கொள்கைப்படி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்...
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் மேலும் 5 போலீஸ் சஸ்பெண்ட்!

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் மேலும் 5 போலீஸ் சஸ்பெண்ட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் மேலும் 5 போலீஸ் சஸ்பெண்ட்! சாத்தான்குளம் அப்பா மகன் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்ய வசதியாக நெல்லை விருந்தினர் மாளிகையில் சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.  அறை எண் 5-இல் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடியினரால் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 2 போலீசாருடன் சேர்த்து 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு உடந்தையாக இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ந...