வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: தனுஷ்

மனம் உடைந்துவிட்டேன்..மயில்சாமி மறைவுக்கு தனுஷ் இரங்கல்!

மனம் உடைந்துவிட்டேன்..மயில்சாமி மறைவுக்கு தனுஷ் இரங்கல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், நல்ல திறமை வாய்ந்தவர். மனம் உடைந்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்....
வைரலாகும் ‘விடுதலை’ பட பாடல்!

வைரலாகும் ‘விடுதலை’ பட பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' பாடல் நேற்று காலை 11 மணிக்கு வெளியாகி கவனம் பெற்றது. சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் பாடியுள்ள இந்த பாடல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து இரண்டு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் பாடியுள்ள இந்த பாடல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து இரண்டு மில்லிய...
‘வாத்தி’ டிரைலர் அப்டேட்!

‘வாத்தி’ டிரைலர் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.'வாத்தி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாத்தி' திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.    ...
தனுஷுடன் இணையும் கே.ஜி.எஃப் பட நடிகர்!

தனுஷுடன் இணையும் கே.ஜி.எஃப் பட நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'. இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் அடுத்த வருடம் பிப்ரவரி 17-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. இதனிடையே தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமானார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த பூஜையில் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்த...
இரு மொழியில் பாடி அசத்தும் தனுஷ்!

இரு மொழியில் பாடி அசத்தும் தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் முதல் பாடல் 'வா வாத்தி' வருகிற நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில், 'வாத்தி' திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த வீடியோவை ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், 'நவம்பர் 10-ஆம் தேதி வாத்தி படத்தின் முதல் பாட...
”வாத்தி ஃபஸ்ட்டு சிங்கிள்”- எதிர்பார்பை தூண்டிய படக்குழு!

”வாத்தி ஃபஸ்ட்டு சிங்கிள்”- எதிர்பார்பை தூண்டிய படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் தனுஷ் எழுதிய "வாத்தி" திரைப்படத்தின் முதல் பாடல் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'வாத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. https://twit...
பிரபல நடிகருடன் இணைந்த ராஷ்மிகா !

பிரபல நடிகருடன் இணைந்த ராஷ்மிகா !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா, தனுஷ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....
தனுஷுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நடிகை!

தனுஷுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இதில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து, ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். கேப்டன் மில்லர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். வரலாற்று பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் வீடியோ அண்மையில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் படங்களில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா அருள் ...
அமோக வசூல் குவிக்கும் “3” படத்தின் தெலுங்கு பதிப்பு !

அமோக வசூல் குவிக்கும் “3” படத்தின் தெலுங்கு பதிப்பு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான படம் '3'. இந்த படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 2012-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மூலம் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில் இடம்பெற்ற, 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு தற்போது '3' படத்தின் தெலுங்கு பதிப்பை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மறு வெளியீடு செய்துள்ளனர். அங்கு இந்த படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் ஒரு பாடலை திரையரங்கில் இருக்கும் அனைவரும் பாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும் திரையரங்குகளில் 200-க்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி தெலுங்கு திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் தற்போது ந...
வசூலில் முன்னேறும் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம்!

வசூலில் முன்னேறும் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நடிகை நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது."திருச்சிற்றம்பலம்" திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.9.52 கோடியையும் இரண்டாவது நாள் ரூ.8.79 கோடியையும் வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும், முதல் வாரம் மட்டும் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் ரூ.51.42 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இரண்டாவது வாரத்தின் முதல் நாள் ரூ.3.47 கோடியும், இரண்டாவது நாள் ரூ.4.61 கோடியுடன் வசூலில் முன்னேற்றம் காணும் இப்படம் தற்போத...