வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: நயன்தாரா

தி லிப் பாம் கம்பெனியின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா!

தி லிப் பாம் கம்பெனியின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தி லிப் பாம் கம்பெனி தன்னுடைய முதல் பிறந்தநாளை கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடரான நயன்தாரா மற்றும் குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. வீகன் லிப் பாம்ஸ், தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட டிண்ட்ஸ், கர்ப்பமாக உள்ள பெண்கள் மற்றும் குழந்தைப் பெற்றுள்ள பெண்களுக்கு ஏற்ற வகையிலான லிப் பாம்ஸ், குழந்தைகளுக்கான பாதுகாப்பான லிப் பாம்ஸ், மியூட்டோஜெனிக் இல்லாத லிப் பாம்கள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் இல்லாதவை, பேக்கேஜிங்கில் சிறந்தவை, மாணவர்களுக்கு ஏற்ற வகையிலான மினி வெர்ஷன்ஸ், சன் புரொடக்‌ஷன் உள்ள லிப் பாம்ஸ், ஆண்டி ஏஜிங் வகையிலானது, கேட்ஜெட் அதிகம் உபயோகிப்பவர்களுக்கான லைஃப்ஸ்டைல் லிப் பாம்ஸ் என பல உறுதிகளை 'தி லிப் பாம் கம்பெனி' ஆரம்பித்த நாளில் உறுதி கொடுத்தது. இந்த உறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் லிப் பாம் கம்பெனி தற்போது எவர் ஒருவர் பாதுகாப்பான மற்றும் தரமான லிப் பாம் வேண்டும் எனத்...
நயன்தாரா விவகாரம்: அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!

நயன்தாரா விவகாரம்: அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - ...
திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்!

திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக தொடங்கியது. பின்னர் காலை 10.25 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார். இவர்களது திருமணத்தில் ம...
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்.. நேரில் வாழ்த்திய திரைப்பிரபலங்கள்!

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்.. நேரில் வாழ்த்திய திரைப்பிரபலங்கள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி திரையுலகில் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நயன்தாரா படிப்படியாக நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றார். அதே நேரத்தில் விக்னேஷ் சிவன் உதவி இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை தொடங்கியிருந்தார். விக்னேஷ் சிவன் மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் ஹெச்.ஆர்.செக் பள்ளியில் படித்தார். மேலும் அவரது பள்ளியில் நடிகர் சிம்புவின் ஜூனியராக இருந்தார். இந்த அறிமுகம் தான் இவருக்கு முதல் படமான போடா போடியை உருவாக்க உதவியது. சிம்புவின் நட்பால் போடா போடி மூலம் இயக்குனராக அறிமுகமானார். இயக்குனராக நன்கு அறியப்பட்ட விக்னேஷ் எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது....
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சமீபத்தில் நயன்தாரா, சமந்தாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இவர்கள் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருக்கிறது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இன்று திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துள்ளார்கள...
“ரெண்டு பேரையும் தான் லவ் பண்றேன்” – கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதி பட புரோமோ!

“ரெண்டு பேரையும் தான் லவ் பண்றேன்” – கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதி பட புரோமோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்துவாக்குல ரெண்டு காதல்”. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்க, ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, ஸ்டண்ட் பணிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார். இப்படத்தின...
இணையத்தை கலக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் டிரைலர்!

இணையத்தை கலக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது, முன்னதாக இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீசர் மற்றும் இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான “டூ டூடூ டூ டூடூ” பாடல், ரெண்டு காதல், நான் பிழை போன்ற பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து, சாதனை படைத்தது. இந்நிலையில் டிரைலர், பெரும் வரவேற்பை பெற்றதுடன், இணையமெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் த...
ரசிகர்களை கவர்ந்த காத்து வாக்குல ரெண்டு காதல் டீசர்!

ரசிகர்களை கவர்ந்த காத்து வாக்குல ரெண்டு காதல் டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது....
கையில் சுத்தியலுடன் நயன்தாரா… வைரலாகும் வீடியோ!

கையில் சுத்தியலுடன் நயன்தாரா… வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கையில் சுத்தியலுடன் நயன்தாரா... வைரலாகும் வீடியோ! தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் புரமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் நயன்தாரா சுத்தியலுடன் வந்து ‘காலம் ஒரு துரோகி...’ என்று வசனம் பேசுகிறார். இந்த புரமோ வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா!

பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா! நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பாளராகி படங்களைச் சிறிய அளவில் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது. இதுவரைக்கும் ஐதராபாத், கொச்சி, சென்னை போன்ற இடங்களில் ஹோட்டல்களில் தங்கி படங்களில் நடித்து வந்தார் நயன்தாரா. இந்நிலையில், இருவரும் சென்னை போயஸ் கார்டனில் 4 பெட்ரூம் கொண்ட வீட்டில் குடியேற இருக்கிறார்கள். இதற்காகப் பல கோடி ரூபாய் கொடுத்து இந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், தனுஷ், இயக்குனர் பாலா உள்ளிட்டோர் வீடுகள் கட்டியுள்ளனர். இப்போது நயன்தாரா தனது காதலருடன் அங்கு வசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குக் குடியேறிய பிறகு தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட இருக்...