செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

Tag: நரேந்திர மோடி

பணவீக்கத்திற்கு தீர்வு காண வேண்டும்- பிரதமருக்கு, ராஜஸ்தான் முதலமைச்சர் கோரிக்கை!

பணவீக்கத்திற்கு தீர்வு காண வேண்டும்- பிரதமருக்கு, ராஜஸ்தான் முதலமைச்சர் கோரிக்கை!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காணொலி மூலம் பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: கொரோனா தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், ஐந்து முதல்வர்களுக்கு மட்டுமே கருத்து தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. இறுதியில், பிரதமர் திடீரென பணவீக்கம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி குறிப்பிட்டார். மேலும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது அவர் குற்றம் சாட்ட முயன்றார். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் முக்கியமாக மத்திய அரசால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டாலும், அதன் விளைவுகள் மாநிலங்களில் பிரதிபலிக்கின்றன. பணவீக்கம் பிரச்னை தொடர்பாக, அனைத்து முதல்வர்களுடனும் ஆலோச...
கொரானாவை இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா அழிக்கும் – டிரம்ப்

கொரானாவை இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா அழிக்கும் – டிரம்ப்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
    உலகம் முழுவதும் கொரானா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டிவிட்டது. அமெரிக்காவில் அதிக அளவில் கொரானா பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி இல்லாத கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், கொரானா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி எனக்கு மிகவும் நல்ல நண்பர் என்பது உங்களுக்குத் தெரியும். கொரானாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் இந்தியாவிற்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும். இந்தாண்டு இறுதிக்குள் கொரானாவுக்கு தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் என நம்புகிறேன். தடுப்பூச...
ஏப்ரல் 20க்கு பின் எவைகளில் ஊரடங்கு தளர்வு – லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு

ஏப்ரல் 20க்கு பின் எவைகளில் ஊரடங்கு தளர்வு – லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஏப்ரல் 20க்கு பின் எவைகளில் ஊரடங்கு தளர்வு - லிஸ்ட் வெளியிட்ட மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள ஊரடங்கால் மக்களின் இயல்பான வாழ்க்கை பெரிதும் நசிந்து உள்ளது. இது குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதன் பின் அரசு அறிவித்த வழிமுறைகள். ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். *பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்படும். *இறுதிச்சடங்கில் பங்கேற்க 20 பேர் வரை மட்டுமே அனுமதி. *மத நிகழ்வுகளுக்கு தடை; வழிபாட்டு தலங்கள் மூடப்படும். *வரும் 20ந் தேதிக்கு பிறகு மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி. *கட்டுமானப்பணிகள் நடைபெறவும் மத்திய அரசு அனுமதி. *வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளையும் தொடங்க அனுமதி. *ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறி...
கொரானாவை கட்டுப்படுத்த மருந்து கொடுங்கள் – பிரதமர் மோடியிடம் கேட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்

கொரானாவை கட்டுப்படுத்த மருந்து கொடுங்கள் – பிரதமர் மோடியிடம் கேட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானாவை கட்டுப்படுத்த மருந்து கொடுங்கள் - பிரதமர் மோடியிடம் கேட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகம் முழுதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய அரசும் மாநில அரசுகளும் தீவிரமான முயற்சிகளை அவ்வப்போது எடுத்து வருகின்றனர் என்பதும், ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றுதல், சமூக விலகலை பின்பற்றுதல் ஆகியவற்றைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் கொரோனா நடவடிக்கைகள் குறித்து தொலைபேசியில் பேசியுள்ளார். அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டும், நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வரும் நிலையில் இந்தியாவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசியதாக தெரிகிறது. மேலும் கொரோனாவை ஒழ...
21 நாள் தொடர் ஊரடங்கு உத்தரவிட்ட பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த கமல்.

21 நாள் தொடர் ஊரடங்கு உத்தரவிட்ட பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த கமல்.

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    21 நாள் தொடர் ஊரடங்கு உத்தரவிட்ட பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த கமல். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி வீட்டை விட்டு மக்கள் வெளியேறாமல் தனிமையில் இருப்பதுதான். ஊரடங்கு காலமான 21 நாட்களை ஆக்கப்பூர்வமக்க மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என மோடி கூறியிருக்கிறார். இதற்கு இந்திய மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது… உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம். என கமல் பதிவிட்டுள்ளார். இ கமலின் இந்த கருத்து ...
வீட்டுக்குள் முடங்கினால் குடும்பத்தை காப்பாற்றலாம்… கொரானா தீவிரம் புரியாமல் இருக்க வேண்டாம் – பிரதமர் மோடி

வீட்டுக்குள் முடங்கினால் குடும்பத்தை காப்பாற்றலாம்… கொரானா தீவிரம் புரியாமல் இருக்க வேண்டாம் – பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டுக்குள் முடங்கினால் குடும்பத்தை காப்பாற்றலாம்... கொரானா தீவிரம் புரியாமல் இருக்க வேண்டாம் - பிரதமர் மோடி உலகம் முழுவதிலும் பெரும் அச்சத்தையும் உயிர்பலிகளையும் வாங்கி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுவதற்காக பிரதமர் மோடி தினமும் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆனால் பொதுமக்கள் மத்திய அரசு வெளியிட்ட கொரோனா எச்சரிக்கை விதிமுறைகளை சரியானபடி பின்பற்றவில்லை என்ற வருத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நாட்டு மக்களுக்கு வேண்டு கோள் விடுத்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- கொரோனா வைரசின் ஆபத்தை பெரும்பாலான மக்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள். அது வருத்தம் தரு...
மக்களை தனிமை படுத்திக் கொள்ள சொல்லிவிட்டு பார்லிமெண்ட் கூட்டத்தை நடத்துவது ஏன்? – மோடிக்கு சிவசேனா கேள்வி

மக்களை தனிமை படுத்திக் கொள்ள சொல்லிவிட்டு பார்லிமெண்ட் கூட்டத்தை நடத்துவது ஏன்? – மோடிக்கு சிவசேனா கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மக்களை தனிமை படுத்திக் கொள்ள சொல்லிவிட்டு பார்லிமெண்ட் கூட்டத்தை நடத்துவது ஏன்? - மோடிக்கு சிவசேனா கேள்வி இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார். இதற்காக வருகிற 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் மக்களை தனிமைப்படுத்த கூறும் பிரதமர் மோடி பாராளுமன்றத்தை மட்டும் நடத்துவது ஏன்? என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. அந்தக் கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் இது தொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:- கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை தனிமைப்படுத்துமாறு பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அரசு பணிகளை குறைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் மற்றொரு புறம்...
சார்க் நாடுகளின் தலைவர்களோடு பிரதமர் மோடி ஆலோசனை… கொரானாவை தடுக்க இந்தியா சார்பில் ரூ.10 மில்லியன் ஒதுக்கீடு

சார்க் நாடுகளின் தலைவர்களோடு பிரதமர் மோடி ஆலோசனை… கொரானாவை தடுக்க இந்தியா சார்பில் ரூ.10 மில்லியன் ஒதுக்கீடு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் ஒதுக்கீடு - வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்துக்கு பின் பிரதமர் மோடி அறிவிப்பு உலகம் முழுதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க உலகம் முழுதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் தலைநகர் டெல்லியின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க இணைந்துள்ள உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்த நிலையில் நம்முடன் இணைந்துள்ள நண்பர், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளிக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விரைவில் நலம்...
கொரானா தொற்றுநோயை  தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு… பலியானால் 4 லட்சம் நிவாரணம்!!

கொரானா தொற்றுநோயை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு… பலியானால் 4 லட்சம் நிவாரணம்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவில் கொரோனா தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக அறிவித்தது மத்திய அரசு இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் கலபருகி பகுதியில் ஒரு முதியவர். டெல்லியை சேர்ந்த ஒரு மூதாட்டி என இதுவரை இந்தியாவில் இருவர் கொரோனா தாக்கத்துக்கு பலியாகியுள்ளனர். கேரளாவில் தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31வரை மூடப்பட்டன. தெலங்கானாவிலும் பொது மக்கள் கூடும் இடங்கள் மார்ச் 31வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மார்ச் 31வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக இன்று அறிவித்துள்ள மத்திய அரசு கொரோனா பாதிப்...
இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்!

இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்! அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அகமதாபாத் வந்த டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் சென்றார் டிரம்ப். பின்னர் தனது முதல் நிகழ்ச்சியாக அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசினார். பேச்சைத் தொடங்கும் போது. ‘நமஸ்தே’ எனக் கூறி தனது உரையைத் தொடங்கினர் டிரம்ப். தொடர்ந்து அவர் பேசியதாவது:- எனது உண்மையான நண்பர் மோடி. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த நண்பர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவுக்காக பிரதமர் மோடி இரவு பகலாக உழைக்கிறார். இணையதள சேவை மற்றும் சமையல் எரிவாயு சேவையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் மோடி.  கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியும...