மதுரையை எரித்த கண்ணகி- கோவலன் நினைவாக சிலப்பதிகார பூங்கா ஜூன் 1ம் தேதி திறக்கப்படுகிறது!
மதுரையை எரித்த கண்ணகி- கோவலன் நினைவாக சிலப்பதிகார பூங்கா ஜூன் 1ம் தேதி திறக்கப்படுகிறது!
மதுரை என்றதும் உடனடியாக நினைவுக்கு வருவது மதுரையை எரித்த கண்ணகியும், கோவலனும், சிலப்பதிகாரமும் இந்த வரலாற்று சம்பவங்களை நினைவு படுத்தும் விதமாக மதுரை போலீஸ் எஸ்.பி.அலுவலகத்தில் சிலப்பதிகார பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது:-
வணிகம் செய்ய மதுரை வந்த கோவலனும், கண்ணகியும் கடச்சனேந்தலில் உள்ள ஒரு வீட்டில் தங்கினர். இங்கிருந்து தான் அதாவது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் வழியாக தான் பாண்டிய மன்னனிடம் கண்ணகி நியாயம் கேட்க சென்றார். இதனால் சிலப்பதிகார பூங்கா உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது.
மதுரையை பற்றிய குறிப்புகள் சங்க கால இலக்கியங்கள் பலவற்றில் உள்ளன. அதிலும் பண்டைய கால மதுரையை அங்குலம் அங்குலமாக பதிவு...