வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’.. விமானத்தில் பாகன் தம்பதியை கைதட்டி வரவேற்ற பயணிகள்!

ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’.. விமானத்தில் பாகன் தம்பதியை கைதட்டி வரவேற்ற பயணிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயைப்பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை ஜனரஞ்சகமாக சித்தரிக்கும் வகையில் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். நேற்று ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருக்கு பாராட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் பொம்மன், பெள்ளி ஆகியோரும் பங்கேற்றனர். இதற்காக அவர்கள் நேற்றுமுன்தினம் கோவையில் இருந்து மும்பை சென்றனர். நேற்று மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றனர். விழா முடிந்ததும் அவர்கள் உடனடியாக நேற்று மாலையே மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்ப...
ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெறாத ஜெய்பீம் திரைப்படம்!

ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெறாத ஜெய்பீம் திரைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
94- வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும் விழா வரும் மார்ச் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு 'Belfast', 'CODA', 'Don’t Look Up', 'Drive My Car', Dune', 'King Richard', 'Licorice Pizza', 'Nightmare Alley', 'The Power of the Dog', 'West Side Story' ஆகிய 10 படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்திய படங்கள் எதுவும் இடம்பெறவில்லை. தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படமும், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமும் ஆஸ்கர் விருதுக்கு தகுதிப் படங்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இப்படங்கள் இடம்பெறவில்லை....
93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு – சிறந்த இயக்குனர் குளோயி சாவ்!

93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு – சிறந்த இயக்குனர் குளோயி சாவ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு - சிறந்த இயக்குனர் குளோயி சாவ்! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது. சிறந்த இயக்குனர் விருதை நோ மேட் லாண்ட் படத்துக்காக சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றார். சிறந்த துணை நடிகை ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா படத்துக்காக டேனியல் கல்லூயா பெற்றார். சிறந்த திரைக்கதைக்கான விருதை  பிராமிசிங் யங் வுமன் படத்துக்காக எமரால்டு பென்னல் பெற்றார். சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை தி பாதர் படத்துக்காக கிறிஸ்டோபர் புளோரியன் பெற்றார். சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை டென்மார்க்கின் அனதர் ரவுண்ட் பெற்றது. தொடர்ந்து பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டு ...
டெனெட் படத்துக்கு சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருது!

டெனெட் படத்துக்கு சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருது!

HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், திரைப்படங்கள்
டெனெட் படத்துக்கு சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருது! உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் எனும் அகாடமி விருது. இவ்விருது விழா, வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்படுகிறது. இதில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கிய 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது. இதில் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான விருது கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான டெனெட் படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த விருதை ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே மற்றும் ஸ்காட் பிஸ்சர் ஆகிய நால்வரும் பெற்றுக்கொண்டனர்....
ஆஸ்கர் 2021 – விருது வென்றவர்கள் முழு விவரம்!

ஆஸ்கர் 2021 – விருது வென்றவர்கள் முழு விவரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ஆஸ்கர் 2021 - விருது வென்றவர்கள் முழு விவரம்! உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் எனும் அகாடமி விருது. இவ்விருது விழா, வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது. உலகமே உற்று நோக்கிய 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்தது. இதில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு: சிறந்த படம் -  நோ மேட்லாண்ட் சிறந்த இயக்குனர் -  க்ளோயி சாவ் (நோ மேட்லாண்ட்) சிறந்த நடிகர் -  அந்தோணி ஹாப்கின்ஸ் (தி பாதர்) சிறந்த நடிகை -  பிரான்சஸ் மெக்டார்மண்ட் (நோ மேட்லாண்ட்) ...
OTT ரிலீசுக்கு ஆதரவாக ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் விதிகளை மாற்றிய கொரானா!

OTT ரிலீசுக்கு ஆதரவாக ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் விதிகளை மாற்றிய கொரானா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் விதிகளை மாற்றிய கொரானா! ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மதிப்பு வாய்ந்த விருதுகளில் ஆஸ்கர் விருதும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த விருது விழாவை உலகமே ஆவலோடு எதிர்நோக்கும். அதிலும் ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கும் அந்த படங்களுக்கும் உலகம் முழுக்க எப்போதும் தனி மவுசுதான். ஆஸ்கர் விருது பெரும் பட்டியலில் இடம் பெற ஒரு படம் பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்றால், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஏதாவது ஒரு திரையரங்கில் குறைந்தது 7 நாட்களாவது அந்த படம் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆஸ்கர் விருது விதி. ஆனால், கொரானா பரவல் பீதி காரணமாக உலகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டு புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. அதிலும் உலகிலேயே அமெரிக்காதான் கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்டதால் படங்கள் ஏதும் ரில...
ஆஸ்கர் விருதுகள்… இரண்டு விருதுகளை வென்ற 1917

ஆஸ்கர் விருதுகள்… இரண்டு விருதுகளை வென்ற 1917

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ஆஸ்கர் விருதுகள்... இரண்டு விருதுகளை வென்ற 1917 உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது. சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a time in Hollywood) என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிராட் பிட்டுக்கு இந்த விருது வழங்கப்பட...