வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: ’இயக்குனர் கே.பாக்யராஜ்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணியின் பதவி காலம் முடிவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடைபெற்றது. சென்னை கே.கே.நகரில் உள்ள தாய் சத்யா பள்ளியில் நடைபெற்ற தேர்தலில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜும், ஆர்.கே.செல்வமணி தனித் தனி அணியாக போட்டியிட்டனர். இவர்கள் இருவரது அணிகள் சார்பிலும் செயலாளர், பொருளாளர், 2 துணைத்தலைவர்கள், 4 இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் பலர் போட்டியிட்டார்கள். இதில் இயக்குனர்கள் மாதேஷ், எழில் துணைத் தலைவர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  மற்ற நிர்வாகிகளை தேர்வு செய்ய, நேற்று காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்...
கலவரத்தில் எங்களை காப்பாற்றிய கன்னடர் – பட விழாவில் பாக்யராஜ் வெளியிட்ட ரகசியம்

கலவரத்தில் எங்களை காப்பாற்றிய கன்னடர் – பட விழாவில் பாக்யராஜ் வெளியிட்ட ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    எல்.சி. நீரஜா ஃபிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில் அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் 'டிம் டிப்'. இப்படத்தில் புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர்ஸ்டார்,கே .ஆர். விஜயா ,பெரேரா  நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை- ஆதிப், ஹமரா, சி.வி ,கு.கார்த்திக் . எடிட்டிங் பாஸ்கோ, நடனம் சாய் பாரதி. 'டிம் டிப் 'படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா  பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில்  நடைபெற்றது.பாடல்களை இயக்குநர் கே .பாக்யராஜ் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசும்போது, இங்கே இசையமைப்பாளர்கள் கதாநாயகன் எல்லோருடைய பெற்றோர்களையும் அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து சந்தோஷப் படுத்தினார்கள். இது எல்லோருக்குமே அமைவதில்லை. இது ஒரு நல்ல விஷயம்.எல்லாரும் பேசும்போது தயாரிப்பாளர் எவ்வள...
சினிமாவில் ஜாதி அதிகமாகி விட்டது புறநகர் பட விழாவில்   இயக்குனர் பாக்யராஜ் வருத்தம்!

சினிமாவில் ஜாதி அதிகமாகி விட்டது புறநகர் பட விழாவில் இயக்குனர் பாக்யராஜ் வருத்தம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கமல் கோவின்ராஜ்   தயாரித்து நடித்துள்ள படம் புறநகர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். E.L.இந்திரஜித் இசையமைத்துளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் கே.ராஜன் பேசியதாவது.. " இது நம்ம ஏரியா படம். நான் வண்ணாரப்பேட்டை. குத்துப்பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. இந்த ஹீரோ அர்னால்டு மாதிரி வந்திருப்ப. இவர் ஹைய்ட்டு இப்படி டான்ஸ் பண்றது கஷ்டம். அதை சூப்பரா பண்ணிருந்தார். இவரிடம் குறையே இல்லை. ஆனால் நம் தமிழ்நாடு ரசிகர்கள் மோசம். ஆயிரம் ரூபாய் கொடுத்து அடுத்தவன் படத்திற்கு ஓடுகிறார்கள். படத்தின் இயக்குநர் மின்னல் முருகன் அருமையா படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் கேமரா ப்யூட்டில்புல். இதை சின்னப்ப்படம் என்று சொல்ல முடியாது. 60 கோடிக்கு படம் எடுத்து ரசிகர்கள் தலையில் கட்டி விடுகிறார்கள். மக்கள் பணத்தை இப்ப...
கேப்டன் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட ஐசரி-பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி..!

கேப்டன் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட ஐசரி-பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் விஜயகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்தனர். மேலும் இந்த சந்திப்பின் போது, தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்கியராஜ், பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசிரி.கணேஷ், பொருளாளர் பிரசாந்த், துணை தலைவர்கள் குட்டி பத்தமினி, உதயா மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோர் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐசரி கனேஷ் பேட்டி: நடிகர் விஜயகாந்த்தை சந்தித்து எங்கள் அணிக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். இன்னும் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். ராதாரவி மட்டுமின்றி எங்கள் அணிக்கு எல்லாருடைய ஆதரவும் உள்ளது என்றார். இந்த தேர்தலில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்றும், நடிகர் சங்...
நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்… ஒரு பகீர் ரிப்போர்ட்

நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்… ஒரு பகீர் ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரைமறைவு வேலைகள்... ஒரு பகீர் ரிப்போர்ட் நடிகர் சங்கத்திற்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடப்பது தெரிந்ததே. முந்தைய பாண்டவர் அணி சார்பில் ஒரு டீமும், ஐசரி கணேஷ்-பாக்யராஜ் கூட்டணி தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி பெயரில் ஒரு டீமும் களத்தில் நிற்கிறார்கள். 29 பதவிகளுக்கு 76பேர் நிற்கிறார்கள். விஷால் தலைமையில் உள்ள பாண்டவர் அணி மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு எதையும் வைக்க முடியாததால் பாக்யராஜ் -ஐசரி கணேஷ் அணி நடிகர் சங்க கட்டட பணிகள் தாமதத்தை கையில் எடுத்துள்ளது. இதற்கிடையில் பாண்டவர் அணியில் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலை தவிர மற்ற எந்த பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கும் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. அதே நேரம் நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு ஒருகோடி ரூபாய் நிதி கொடுத்து, சுமார் 2 கோடிவரை 1.1 சதவீத வட்டியில் கடன் கொடுத்தத...
நாசரை எதிர்த்து பாக்யராஜ், விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டி – சூடு பிடிக்கும் நடிகர் சங்கம்

நாசரை எதிர்த்து பாக்யராஜ், விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டி – சூடு பிடிக்கும் நடிகர் சங்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து இயக்குனர் பாக்யராஜும், பொதுச் செயலாளர் பத்விக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது. பொது செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். தலைவர பதவிக்கு விஷால் அணியை சேர்ந்த நாசரை எதிர்த்து ஐசரி கணேஷ் அணி சார்பில் இயக்குனர் நடிகர் பாக்யராஜ் தேர்தலில் போட்டியிடுகிறார். பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் ஸ்டிராங்கான பிரபலங்களை களம் இறக்குவதால் இந்த முறை போட்டியும், வெற்றி விகிதமும் கடும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.   அதே நேரம் இன்னொரு பக்கம் போட்டி இல்லாமல் பதவிகளை பிரித்து கொள்ளவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது....
பேய் இருக்கிறதா ‘அகோரி’ பட விழாவில் பாக்யராஜ் ருசிகர தகவல்..!

பேய் இருக்கிறதா ‘அகோரி’ பட விழாவில் பாக்யராஜ் ருசிகர தகவல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ராஜ்குமார் இயக்கத்தில் ‌ஷயாஜி ஷிண்டே நடித்துள்ள ‘அகோரி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது:- ‘தமிழக மக்களை நினைத்தால் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்த கட்சிக்காரன் காசு கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு, சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். இவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணி எண்ணியே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி.பாலா மொழி மாற்றுப் படங்களுக்கான வசனகர்த்தா என்று சொன்னார்கள். ‘புலி முருகன்’ மற்றும் ‘லூசிபர்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி இருப்பதாகச் சொன்னார்கள். நான் ஒரே ஒரு டப்பிங் படத்திற்கு மட்டும்தான் வசனம் எழுதினேன். அங்கு சென்றவுடன் தான் அதில் உள்ள சவால்களும், சங்கடங்களும் புரிந்தன. அதன் பிறகுதான் ...