சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: உலக சுகாதார அமைப்பு

மேற்கத்திய நாடுகளை குறிவைக்கும் குரங்கு காய்ச்சல்!

மேற்கத்திய நாடுகளை குறிவைக்கும் குரங்கு காய்ச்சல்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
உலக நாடுகளில் கொரோனா தொற்று ஆதிக்கம் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிற நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக 'மங்கி பாக்ஸ்' என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்துகிறது. இதையொட்டி உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் டாரிக் ஜசரேவிக் கூறுகையில், "37 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. 71 பேருக்கு இந்த நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது" என தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் குளூஜ் கூறும்போது, "இதுவரையில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகளில் சமீப காலத்தில் குரங்கு காய்ச்சல் பரவி உள்ளது. இந்த நாடுகளைத் தவிர்த்து ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் உள்ளூர் தொற்றாக குரங்கு காய்ச்சல் பாதிப்பு...
டெல்டா வகை கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி-முகக்கவசம் அவசியம்: உலக சுகாதார அமைப்பு அறிவுரை!

டெல்டா வகை கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி-முகக்கவசம் அவசியம்: உலக சுகாதார அமைப்பு அறிவுரை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
டெல்டா வகை கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி-முகக்கவசம் அவசியம்: உலக சுகாதார அமைப்பு அறிவுரை! கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்துள்ளது. இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இருக்கிறது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசுக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் டெல்டா வகை வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸ்களும் பரவி வருகிறது. இந்த டெல்டா வகை வைரஸ் 85 நாடுகளில் பரவி உள்ளதாக தெரிவித்துள்ளனர். டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் ஆதநோம் கூறியதாவது:- டெல்டா வகை கொரோனா 85 நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை மக்களிடையே பரவிய கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா வகை உருமாறிய கொரோனாத...
பரபரப்பான சூழலில் WHO தலைமை பதவி இந்தியா வசம்… நெருக்கடியில் சீனா!

பரபரப்பான சூழலில் WHO தலைமை பதவி இந்தியா வசம்… நெருக்கடியில் சீனா!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  பரபரப்பான சூழலில் WHO தலைமை பதவி இந்தியா வசம்... நெருக்கடியில் சீனா! ஐ..நா.-வின் உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, இந்த வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவின் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், மே 22-ம்தேதி பதவியேற்க உள்ளதாகவும் அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக இந்தியாவின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். 34 பேர் கொண்ட குழுவுக்கு ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்குவார்....
எயிட்ஸ் நோயில் தப்பிக்க காண்டம் எப்படியோ அதே போல கொரானாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் அவசியம் – WHO அட்வைஸ்

எயிட்ஸ் நோயில் தப்பிக்க காண்டம் எப்படியோ அதே போல கொரானாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் அவசியம் – WHO அட்வைஸ்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  எயிட்ஸ் நோயில் தப்பிக்க காண்டம் எப்படியோ அதே போல கொரானாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் அவசியம் - WHO அட்வைஸ் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிக்க காண்டம் பயன்படுத்துவதை போல கொரானாவிலிருந்து தப்பிக்க இனி ஒரே வழி முகக்கவசம்தான் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகி. ஜெனீவாவில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறுகையில், "கொரானா  வைரஸ் மனித சமூகங்களில் உள்ள மற்றொரு வைரஸாக மாறக்கூடும். இந்த வைரஸ் ஒருபோதும் இங்கிருந்து போகாது என்று அதிர்ச்சியூட்டுகிறார். அதோடு, உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ் பரவாமல் தப்பிக்க எப்படி காண்டம் பயன்படுகிறதோ அதே போல கொரானாவிலிருந்து தப்பிக்க மாஸ்க் கட்டாயம் என்று கூறி ஷாக் கொடுக்கிறார். எயிட்ஸ் எப்படி பரவுது... கொரானா எப்படி பரவுது... ஒரு நியாயம் வேணாமா கொமாரு...?...
ஊரடங்கு உத்தரவு மூலமாக மட்டுமே கொரானா அழியாது தடுப்பு மருந்து கண்டறிய வேண்டும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஊரடங்கு உத்தரவு மூலமாக மட்டுமே கொரானா அழியாது தடுப்பு மருந்து கண்டறிய வேண்டும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கு உத்தரவு மூலமாக மட்டுமே கொரானாவை ஒழித்து விட முடியாது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! உலகம் முழுவதும் மனித குலத்திற்கு பெரும் சவாலாக விளங்கி பல லட்சம் மக்களை பாதிப்பில் ஆழ்த்தி, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் மனிதர்கள் மூலமாக வேகமாக பரவி வருவதால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தனித்திருப்பதாலும், சமூக விலகலை பின்பற்றுவதாலும் மட்டுமே வைரசை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், கொரோனாவை ஒழிக்க ஊரங்கு மட்டுமே பலன் தராது உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அந்தானம் கேப்ரியசஸ் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை குறை...