செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

Tag: ஊரடங்கு நீடிப்பா?

ஊரடங்கை நீடிப்பது கோடாரியை வைத்து கொசுவை அழிக்க நினைக்கும் முயற்சி – மருத்துவர் குழு தகவல்

ஊரடங்கை நீடிப்பது கோடாரியை வைத்து கொசுவை அழிக்க நினைக்கும் முயற்சி – மருத்துவர் குழு தகவல்

Uncategorized
  ஊரடங்கை நீடிப்பது கோடாரியை வைத்து கொசுவை அழிக்க நினைப்பது போல என்பதால் மாற்றுவழிகள் செய்ய சொன்னோம் மருத்துவர் குழு தகவல். தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் கொரானா தொற்று அதிகரித்து வருவதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் தளர்வுகள் அறிவிக்கலாமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். நோய் தாக்கம் அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு முடக்கத்தை நீட்டிக்கவேண்டுமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின்போது, கள நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர் குழு விளக்கமாக தெரிவித்தது. அடுத்து மேற்கொள்ள வேண்டி...
ஊரடங்கு நீடிப்பா… மே 3ல் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

ஊரடங்கு நீடிப்பா… மே 3ல் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 36 நாட்கள் ஆகியுள்ள போதிலும் கொரானா பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. நாளுக்கு நாள் கொரானா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மாநிலத்துக்கு மாநிலம் உயர்ந்து கொண்டே போகிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிருஷ்ணகிரியைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே 3ம் தேதியுடன் முடிகிறது. ஆனால் கொரானா தாக்கம் குறையாமல் இருக்கிறது. இதனால் ஊரடங்கு  மேலும் நீட்டிக்கப்படுமா? அல்லது சில தளர்வுகள் இருக்குமா? என்று மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 2-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முக்...
ஊரடங்கு நீடிப்பா… மாநில முதல்வர்களுடன் 27ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை!

ஊரடங்கு நீடிப்பா… மாநில முதல்வர்களுடன் 27ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கு நீடிப்பா... மாநில முதல்வர்களுடன் 27ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்! கொரானா என்ற கொடூர வைரசால் உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்படைந்து உள்ளது. தினமும் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் 25 லட்சத்தை நெருங்கி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து,  உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளும் கொரானா வைரசில் இருந்து காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு  உள்ளது. இந்த சூழலில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வைரஸ் பரவல் குறித்தும் அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி வீடியோ கான்பரன்சில் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, கொரானா தடுப்...
சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் மாநிலங்கள்… மத்திய அரசின் ஊரடங்கு திட்டம்!?

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் மாநிலங்கள்… மத்திய அரசின் ஊரடங்கு திட்டம்!?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் மாநிலங்கள்... மத்திய அரசின் ஊரடங்கு திட்டம்!? கொரானா பரவலை தடுக்க நாடு முழுதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் ஒட்டுமொத்த தொழிலும் முடங்கிப் போய் பலகோடி மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள். எப்படியும் இன்னும் சில நாட்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு கொரானா வைரஸ் பரவல் தொடர்ந்து பரவி வருவதால் பல மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீடித்து அம்மாநில அரசுகள் அறிவித்து விட்டது. அதே நேரம் தொடர் ஊரடங்கால் ஒட்டுமொத்த தொழில்களும் முடங்கிப் போனதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடுத்த வேலை உணவுக்கே வழி இல்லாமல் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்தார்கள். அதே போல பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண நிதி உதவி அளிக்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் க...
தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? நாளை மாலை தெரியும்!

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? நாளை மாலை தெரியும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கு நீடிக்கப்படுமா? காலையில் பிரதமருடன் வீடியோவில் மீட்டிங்... மாலை அமைச்சர்களுடன் ஆலோசனை... தீயாக வேலை செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களை கடந்த நிலையில், வைரஸ் கிருமி சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை இன்னும் நீட்டிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பல மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் ஏற்கனவே ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதே போல ஊரடங்கு உத்தரவு நீடிப்பு தொடர்பாக பிரதமர் மோடி விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் மாநில முதல்வர்களுடன் இரண்டாவது முறையாக நாள...
கொரானா பாதிப்பு அதிகரிப்பதால் ஊரடங்கு நீடிக்கப்படுமா – முதல்வர் எடப்பாடி பதில்

கொரானா பாதிப்பு அதிகரிப்பதால் ஊரடங்கு நீடிக்கப்படுமா – முதல்வர் எடப்பாடி பதில்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பாதிப்பு அதிகரிப்பதால் ஊரடங்கு நீடிக்கப்படுமா - முதல்வர் எடப்பாடி பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியது: மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.500 கோடி எஸ்.டி.ஆர்.எப்.புக்கு கொடுத்திருக்கிறார்கள். படிப்படியாக நிதி கொடுப்பதாக சொல்லியிருக் கிறார்கள். சீனாவில் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசிடம் போதுமான நிதி இருக்கிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். வைரசினுடைய தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்வதுதான். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த வைரஸ் எளிதாக பரவக்கூடியது, இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் வாயிலாக மக்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்...
ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு அதிகாரி விளக்கம்

ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு அதிகாரி விளக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு அதிகாரி விளக்கம் கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ், ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு உத்தரவையும் மீறி சில மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள்....