கேரள கோழிகள் போடும் பச்சை முட்டை.. விடை தெரியா வினோதம்!
கேரள கோழிகள் போடும் பச்சை முட்டை.. விடை தெரியா வினோதம்!
கேரளாவை சேர்ந்த சில கோழிகள் போடும் முட்டையின் மஞ்சள் கருவானது வழக்கத்துக்கு மாறாக மஞ்சள் நிறத்தில் இல்லாமல் பச்சை நிறத்தில் உள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் மலபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷிஹாபுதீன்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது கோழி பண்ணையில் வளரும் ஒரு கோழியின் முட்டையை உடைத்து அதை வீடியோவாக வெளியிட அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. காரணம் அந்த முட்டையின் மஞ்சள் கரு பச்சை நிறத்தில் இருந்ததுதான்
இதுகுறித்து ஷிஹாபுதீன் கூறுகையில், ஒருநாள் கோழியின் முட்டை ஒன்றை சமைப்பதற்காக உடைத்தபோது மஞ்சள் கரு பச்சை நிறத்தில் இருந்தது. அதனால் நாங்கள் அதனை சாப்பிடவில்லை.
பின்னர் அந்த கோழியின் முட்டைகளை அடைகாக்க வைத்தபோது அதில் இருந்து வெளிவந்த கோழி குஞ்சுகளும் தற்போது வளர்...