சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: கொரானா பரவலை தடுக்க

இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு

இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
    இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி மிக கடுமையான பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பு மருந்து போட்ட பிறகு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. பிரான்ஸ் நாடும் இந்தியாவில் இருந்து வருவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது....
மீண்டும் ஊரடங்கு நீடிப்பு!? முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை!!

மீண்டும் ஊரடங்கு நீடிப்பு!? முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      மீண்டும் ஊரடங்கு நீடிப்பு! முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை!! கொரானா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் மே 3ம் தேதி முடிவுக்கு வர இருக்கிறது. ஆனால் கொரானா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த படியே செல்வதால் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் கொரானா பாதிப்பை முற்றிலும் கட்டுப்படுத்த பல மாநில அரசுகள் ஊரடங்கை நீடிக்க முடிவு செய்து உள்ளது. பிரதமர் மோடி மீண்டும் அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனைக்கு பின் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீடிக்கும் முடிவை அறிவிப்பார் என தெரிகிறது....
விற்பனைக்கு செல்லும் விவசாயிகளை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது – சேலத்தில் முதல்வர் உத்தரவு

விற்பனைக்கு செல்லும் விவசாயிகளை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது – சேலத்தில் முதல்வர் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    விற்பனைக்கு செல்லும் விவசாயிகளை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது - சேலத்தில் முதல்வர் உத்தரவு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கிரிலோஸ்குமார், மஞ்சுநாதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் கொரானா பரவிய 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் கொரானாவை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கொரானா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரானா நிவாரணத் தொகையான ரூ.1,000 குடும்ப அட்டைதாரர்களில் 98 சதவீதம் பேருக்கு...
மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும் – பிரதமர் மோடி

மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும் – பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மே 3ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும் - பிரதமர் மோடி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு டிவியில் பேசும்போது கூறியதாவது: பிற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். கொரானா பரவலை கட்டுப்படுத்துவதில் தனிமனித இடைவெளி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரத்தை விட நாட்டின் நலனே முக்கியம். பொருளாதார ரீதியாக நாம் பின்னடைவை சந்தித்தாலும் உயிரிழப்புகளை தடுத்து வருகிறோம். இன்றிலிருந்து ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு வழங்கப்படும். நாட்டில் உணவுப் பொருட்கள் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. நாடு முழுவதும் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்...
தமிழகத்தில் ஏப்.30வரை ஊரடங்கு நீடிப்பு… ரேஷன்பொருட்கள் இலவசம் – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்.30வரை ஊரடங்கு நீடிப்பு… ரேஷன்பொருட்கள் இலவசம் – முதல்வர் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் ஏப்.30வரை ஊரடங்கு நீடிப்பு... ரேஷன்பொருட்கள் இலவசம் - முதல்வர் அறிவிப்பு மாநில முதலமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல். 30-ந்தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக அனைத்து அரிசி ரேசன்கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும். கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மீண்டும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பிரதம...
ஊரடங்கை தளர்த்தினால் வைரஸ் தாக்கம் அதிபயங்கரமாக இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஊரடங்கை தளர்த்தினால் வைரஸ் தாக்கம் அதிபயங்கரமாக இருக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கை தளர்த்தினால் வைரஸ் தாக்கம் அதிபயங்கரமாக இருக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! உலகம் முழுதும் பரவி உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானா வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அத்தியாவசிய காரணங்களை தவிர மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ வாகனங்கள், அத்தியாவசியப்பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட வாகன போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில் சேவைகள், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அமலில் உள்ள 21 நாட்கள் ஊரடங்கு வரும் செவ்வாய் கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்த்தலாமா? ...
பஞ்சாப்பில் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு!

பஞ்சாப்பில் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு!

Uncategorized
    பஞ்சாப்பில் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பு! கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த ஊரடங்கு வருகிற 14-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதே நேரம் நாடு முழுதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டு உள்ளனர். எனவே அதுபற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த சூழலில் பஞ்சாப்பில் மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வர் அமரீந்தர்சிங் அறிவித்துள்ளார். பஞ்சாபில் இதுவரை 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ...
தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? நாளை மாலை தெரியும்!

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? நாளை மாலை தெரியும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கு நீடிக்கப்படுமா? காலையில் பிரதமருடன் வீடியோவில் மீட்டிங்... மாலை அமைச்சர்களுடன் ஆலோசனை... தீயாக வேலை செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களை கடந்த நிலையில், வைரஸ் கிருமி சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை இன்னும் நீட்டிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பல மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் ஏற்கனவே ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதே போல ஊரடங்கு உத்தரவு நீடிப்பு தொடர்பாக பிரதமர் மோடி விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் மாநில முதல்வர்களுடன் இரண்டாவது முறையாக நாள...
மாநில முதல் மந்திரிகளுடன் மீண்டும் 11ம் தேதி ஆலோசனை நடத்த பிரதமர் மோடி  முடிவு..!

மாநில முதல் மந்திரிகளுடன் மீண்டும் 11ம் தேதி ஆலோசனை நடத்த பிரதமர் மோடி முடிவு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிரதமர் மோடி வருகிற 11ந்தேதி அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் உரையாடி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழு தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பின் பிரதமர் மோடி கூறும்பொழுது, நாட்டில் ‘சமூக நெருக்கடி’ போன்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.  அதனால் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.  நாம் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க...
கொரானாவை கட்டுப்படுத்த மருந்து கொடுங்கள் – பிரதமர் மோடியிடம் கேட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்

கொரானாவை கட்டுப்படுத்த மருந்து கொடுங்கள் – பிரதமர் மோடியிடம் கேட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானாவை கட்டுப்படுத்த மருந்து கொடுங்கள் - பிரதமர் மோடியிடம் கேட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகம் முழுதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய அரசும் மாநில அரசுகளும் தீவிரமான முயற்சிகளை அவ்வப்போது எடுத்து வருகின்றனர் என்பதும், ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றுதல், சமூக விலகலை பின்பற்றுதல் ஆகியவற்றைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் கொரோனா நடவடிக்கைகள் குறித்து தொலைபேசியில் பேசியுள்ளார். அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டும், நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வரும் நிலையில் இந்தியாவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசியதாக தெரிகிறது. மேலும் கொரோனாவை ஒழ...