புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

Tag: சசிகலா

சசிகலா, இளவரசி 11-ந்தேதி ஆஜராகுமாறு சம்மன்!

சசிகலா, இளவரசி 11-ந்தேதி ஆஜராகுமாறு சம்மன்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு! கடந்த 1991-96-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு அவர்கள் தண்டனை காலம் முடிந்து கடந்த ஆண்டு விடுதலையாகினர். இந்நிலையில், சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா, இளவரசி சிக்கினர். இந்த வி‌ஷயத்தை அப்போது சிறை அதிகாரியாக இருந்த ரூபா அதிரடியாக வெளிக்கொண்டு வந்ததுடன் சசிகலா மீதும் மற்ற சிறை அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றசாட்டுகளை கூறினார். பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு தனி சமைய...
இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது!

இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது! தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. என்றாலும் 66 இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க. தனது வலிமையை நிரூபித்தது. ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி,   ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில் அ.தி.மு.க. பெற்ற இந்த வெற்றியை முக்கியத்துவமாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தேர்தலில் 3 சதவீத வாக்குகளே வித்தியாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே  அ.தி.மு.க. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் என்று  தொண்டர்கள் கருதுகிறார்கள். ஆனால் அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறியிருந்த சசிகலா மூலம் மீண்டும் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அ....
முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய சுதாகரனின் மனுவை ஏற்றது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் !

முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய சுதாகரனின் மனுவை ஏற்றது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேர் கர்நாடக மாநில பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆண்டுகள் தண்டனை காலம் முடிவடைகிறது. விடுமுறை மற்றும் நன்னடத்தை காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று அவரது வக்கீல்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது தண்டனை காலம் முடிந்து ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட இருக்கிறார். இந்த தகவலை கர்நாடக சிறைத்துறை ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவித்து உள்ளது. இதனிடையே சசிகலா, இளவரசி 2 பேரும் விசாரணை கைதியாக 33 நாட்கள் சிறையிலிருந்தார்கள். அந்த 33 நாட்கள் மற்றும் சசிகலா 2 முறை பரோலில் சென்ற 17 நாட்கள் கழித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலையாக வாய்ப்ப...
சசிகலா விடுதலையில் கூடுதல் சலுகைகள், சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது – கர்நாடக  அமைச்சர்

சசிகலா விடுதலையில் கூடுதல் சலுகைகள், சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது – கர்நாடக  அமைச்சர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சசிகலா விடுதலையில் கூடுதல் சலுகைகள், சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது - கர்நாடக  அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு(2021) பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் நன்னடத்தை விதிகள்படி 129 நாட்கள் சலுகை உள்ளதால் சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை கர்நாடக சிறைத்துறை தீவிரமாக பரிசீலித்து வருவதால் சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. சலுகைகள் வழங்கப்படலாம்...
சசிகலாவின் 300 கோடி சொத்துக்கள் முடக்கம்!

சசிகலாவின் 300 கோடி சொத்துக்கள் முடக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சசிகலாவின் 300 கோடி சொத்துக்கள் முடக்கம்!   கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், வணிக வளாகம் என 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1,600 கோடி மதிப்பிலான சசிகலாவுக்கு சொந்தமான பினாமி சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம், சசிகலாவின் பினாமி நிறுவனமாக செயல்பட்டு வருவதும், இந்த நிறுவனத்தின் மூலம் சசிகலா சென்னையில் உள்ள போயஸ் கார்டன் மற்றும் தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஆலந்தூர்...
சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க வருமானவரித் துறை  நடவடிக்கை தீவிரம்!  –

சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க வருமானவரித் துறை நடவடிக்கை தீவிரம்! –

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை - வருமான வரித்துறை மும்முரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை கடந்த 2017-ம் ஆண்டு சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள் அடிப்படையில் வருமான வரித்துறை நடத்திய விசாரணையில், 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சென்னை, கோவை, காஞ்சீபுரம், புதுச்சேரி, மதுரை போன்ற பல்வேறு இடங்களில் சுமார் ரூ.1,674 கோடிக்கு சசிகலா ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்தது தெரியவந்தது. செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சொத்துகளை விற்பனை செய்தது யார்? யார்? என்பது குறித்தும் ...
கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் செய்து கொடுத்த சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் – முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா

கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் செய்து கொடுத்த சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் – முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதுகுறித்து சிறை துறை டி.ஐ.ஜி. ஆக இருந்த ரூபாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்நிலை விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. இந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அறிய சட்ட போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. 2 முறை தகவல் அறியும் சட்டத்தில் அறிக்கை குறித்து கேட்டபோதெல்லாம் பதில் தர மறுக்கப்பட்டது. பின்னர் 3-வது முறையாக மேல் முறையீட்டுக்கு சென்று அறிக்கையை பெற்றேன். அந்த அறிக்கை எனக்கு ஒருவித திருப்தியையும், உற்சாகத்தையும் கொடுத்து உள்ளது. சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் செய்து கொடுத்தது உண்மைதான் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்...
ஜெ.,ஆக வித்யாபாலன் சசி.,ஆக சாய் பல்லவி பரபரக்கும் ஏ.எல்.விஜய் படம்..!

ஜெ.,ஆக வித்யாபாலன் சசி.,ஆக சாய் பல்லவி பரபரக்கும் ஏ.எல்.விஜய் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் போட்டி வலுத்து வருகிறது. இயக்குநர் மிஷ்கினின் உதவி இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கும் ‘தி அயர்ன் லேடி’ என்ற படம் உருவாகவுள்ளது. இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க வெப் சீரிஸ் ஒன்றுக்கு உருவாகவுள்ளது. மேலும், இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் ஜெயலலிதா வாழ்க்கையை தழுவி படமாக்க திட்டமிட்டு வருகிறார். இவர்களின் பட்டியலில் தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் இணைந்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் ஜெயலலிதாவின் கேரக்டரில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் அறிமுகமானது முதல் அரசியலில் களமிறங்கி தமிழக முதல்வர் ஆன வரையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளது. இதில் ஜெயலலிதாவின் உ...