வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: சதீஷ்

‘சட்டம் என் கையில்’- படத்தில் கதாநாயகனாக நடிகும் சதீஷ்!

‘சட்டம் என் கையில்’- படத்தில் கதாநாயகனாக நடிகும் சதீஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சதீஷ். இவர் ‘நாய் சேகர்’ என்ற படம் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் சதீஷ் நடிப்பில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது. தற்போது ‘சட்டம் என் கையில்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக சதீஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது....
பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்!

பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா - பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்! மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யின் 33-வது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை நடிகர் சதீஷ் கிண்டல் செய்து பதிவு செய்திருந்தார். தற்போது சதீஷின் புகைப்படத்தை வைத்து பிரியா பவானி சங்கர் கிண்டல் செய்து இருக்கிறார். சன்னிலியோனுடன் சதீஷ் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு, இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு என்று கிண்டல்...
காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்!

காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்! பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். மேலும் வீரமாதேவி என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில், யுவன் இயக்கும் வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படத்தில் சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தினை வி4யு மீடியா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.வி.சக்தி மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னை, பெ...
ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்!

ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்! தமிழ்த் திரையுலகில் வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி உள்பட பல்வேறு பிரபலங்கள் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக உயர்ந்துள்ளனர். தற்போது நடிகர் சதீஷும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளார். இவர் தற்போது, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கவுள்ளார். இது அவர் இயக்கும் முதல் படமாகும். பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது. இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் சென்னையிலேயே நடைபெற உள்ளது. இப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்கவுள்ளார். பிரவீன் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, அஜீஷ் அசோக் இசையமைக்க உள்ளனர். இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்....
பூமராங் விமர்சனம்

பூமராங் விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
தீ விபத்து ஒன்றில் சிக்கி தனது முகத்தை முழுவதும் இழந்து அகோரமாக காட்சியளிக்கிறார் சிவா. சிவா இருக்கும் அதே மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு கோமாவில் இருக்கிறார் சக்தி (அதர்வா). முக மாற்று அறுவைசிகிச்சை மூலமாக அதர்வாவின் முகத்தை எடுத்து சிவாவிற்கு வைக்கின்றனர். சிகிச்சை முடிந்ததும் வீட்டிற்கு திரும்புகின்றார்  சிவா. இவரின் அழகை கண்டு இவர் மீது காதலில் விழுகிறார் மேகா ஆகாஷ். வாழ்க்கை இப்படியாக செல்ல, சிவாவை கொல்ல நினைக்கின்றனர் சிலர். அதன் பிறகுதான் தெரிகிறது, தன்னுடைய புதிய முகம் தான் இந்த கொலை முயற்சிக்கு காரணம் என்று. அந்த சக்தி யார் என்று தெரிந்து கொள்ள அவரின் கிராமத்திற்கு செல்கிறார் சிவா. ப்ளாஷ்பேக் தொடர்கிறது. சக்தி (அதர்வா), ஆர் ஜே பாலாஜி, இந்துஜா மூவரும் நண்பர்கள். நன்கு படித்துமுடித்துவிட்டு ஒரு ஐ டி கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். திடீரென்று ஒருநாள் இவர்களோடு சேர...