சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: ஜீவா

அடுத்த படத்திற்கு தயாராகும் ஜீவா!

அடுத்த படத்திற்கு தயாராகும் ஜீவா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜீவா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் 'களத்தில் சந்திப்போம்'. இப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார். இந்த கூட்டணி தற்போது புதிய படம் மூலம் இணைய இருக்கிறது. படப்பிடிப்பிற்கான பணிகள் மிக மும்முரமாக நடைப்பெற்று வருவதாகவும், 2, 3 மாதங்களில் படப்பிடிப்பு முடிவடைந்து, படம் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. MIK புரொடக்ஷன்ஸும் 7 Miles per Second நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கதாநாயகி மற்றும் பிற முக்கியப் பாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றுகிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்....
மீண்டும் இணைந்த ‘கலகலப்பு 2’ கூட்டணி!

மீண்டும் இணைந்த ‘கலகலப்பு 2’ கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் இணைந்த ‘கலகலப்பு 2’ கூட்டணி! சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு 2’. ஜீவா, மிர்ச்சி சிவா ஆகியோர் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர்கள் ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ள படத்துக்கு ‘கோல்மால்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் பொன் குமார் இயக்க உள்ளார். அவர் இயக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தில் பாயல் ராஜ்புட் மற்றும் தாராள பிரபு பட நடிகை தான்யா ஹோப் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தை ஜாகுவார் ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் ஜெயின் மற்றும் நரேஷ் ஜெயின் தயாரிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக மொரீசியஸில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்....

நாடோடி காதல் தேறுமா “ஜிப்ஸி” விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  காஷ்மீர் போரில் பெற்றவர்களை பறி கொடுத்து அனாதையாக நிற்கும் ஜிப்ஸியை திருவிழாக்களில் குதிரை வைத்து வேடிக்கை காட்டும் ஒருவர் வளர்க்கிறார். அவரும் ஒரு கட்டத்தில் இறந்து போக குதிரையோடு நாடோடியாக ஊர் ஊராக போகிறார். பாட்டுப்பாடுகிறார். அப்படி குதிரைக்கார தெருப்பாடகனாக மாறிய ஜிப்ஸி நாகூர் வருகிறார். அங்கே இஸ்லாமிய மத கட்டுப்பாடு நிறைந்த குடும்பத்து பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண்ணுக்கு விடிந்தால் திருமணம் என்ற சூழலில் அந்த பெண்ணோடு ஊரைவிட்டே ஓடி வேறொரு ஊரில் இஸ்லாமிய முறைப்படி திருமணமும் செய்து கொள்கிறார் ஜிப்ஸி. மனைவி கர்ப்பிணி ஆக இருக்கும் போது அந்த ஊரில் மதக்கலவரம் ஏற்படுகிறது. அதில் மனைவியை பிரியும் ஜிப்ஸியை போலீஸ் பிடித்து செல்கிறது. கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா இதுதான் ஜிப்ஸி கதை. புரட்சிகரமான தெருப்பாடகன் என்று ஜிப்ஸியான ஜீவாவை அடையாளம் காட்டும் இயக்க...
தமிழ் ரசிகர்களை அத்தனை சீக்கிரம் திருப்தி படுத்த முடியாதாம் ஜீவா சொல்கிறார்!

தமிழ் ரசிகர்களை அத்தனை சீக்கிரம் திருப்தி படுத்த முடியாதாம் ஜீவா சொல்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  டேக் ஓ.கே கிரியேஷன்ஸ் வழங்கும் படம் மிரட்சி. ஜித்தன் ரமேஷ் முதன் முதலாக வில்லனாக  நடித்துள்ள இப்படத்தை M.V கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். இன்று இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில், மிரட்சி படத்தின் தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது, “இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. ரமேஷ் சார் சிறப்பாக நடித்துள்ளார். நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி” என்றார் நாயகி ஹீனா ஸஹா  பேசியதாவது, “இது என் முதல் தமிழ்ப்படம். இந்தப்படத்தில் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாக உணர்கிறேன். அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் நன்றாக தமிழ் பேசிடுவேன். இந்தப்படத்தில் பயணித்த அனுபவம் மிக சிறப்பானது. படத்தின் டிரைலரை நான் இப்பதான் பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார். இசை அமைப்ப...
சீறு… ஜீவாவுக்கு ஏற்றமா…? ஏமாற்றமா? கோடங்கி விமர்சனம்

சீறு… ஜீவாவுக்கு ஏற்றமா…? ஏமாற்றமா? கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  சீறு விமர்சனம் வெற்றிக்காக பெரும் போராட்டம் நடத்தி வரும் ஜீவா... செண்டிமெண்ட் கதையை தரும் ரத்னசிவா... பிரமாண்டமான ஹிட் படங்களை தயாரிக்கும் ஐசரி கணேஷ் இந்த கூட்டணியின் படம் தான் சீறு.... தங்கை பாசம் கொண்ட அண்ணனாக ஜீவா பல படங்களில் நடித்திருந்தாலும் இது ரொம்ப புதுசு. காரணம் தங்கைகளின் பாசத்திற்காக பயங்கர ஸ்பீடாக ஆக்ரோஷமாக சீற்றம் காட்டியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளும், தங்கை செண்ட்டிமெண்ட் காட்சிகளும் ஜீவாவுக்கு ஸ்கோர் தரும். தங்கையாக வரும் நந்தினி செம ஸ்பெஷல்... கதை நாயகியாக அப்ளாஸ் அள்ளுவார். ஹீரோயின் ரியா வந்து போகிறார் பெருசா எதுவும் இல்லை. வில்லன் நவ்தீப் வக்கீலா தாதாவா அப்படின்னு புரிஞ்சிக்க முடியாத கேரக்டர். ஒரு சின்னப் பொண்ணுகிட்ட அவ்ளோ வில்லத்தனம் தேவையில்லியே பாஸ்... திரைக்கதை பலம் கொஞ்சம் குறைவு. லாஜிக் பல இடங்களில் கை தட்டி சிரிக்கிறது. இமான...
கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..!

கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கபில்தேவ் மனைவி கேரக்டரில் ரஜினி ஜோடி..! இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை முதல்முதலில் வென்ற ஆண்டு 1983. கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, உலகக்கோப்பை இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆனால் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணி 52 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றியை குறிக்கும் வகையில் பாலிவுட்டில் '83 தி ஃபிலிம்' என்ற டைட்டிலில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர்சிங், கவாஸ்கர் கேரக்டரில் தாஹிர் ராஜ், ஸ்ரீகாந்த் கேரக்டரில் தமிழ் நடிகர் ஜீவா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் கபில்தேவ் மனைவி கேரக்டரான ரூமி பாட்டியா எ...
ஜீவாவுடன் மனிதகுரங்கு செய்யும் அட்டகாச சேட்டை… குழந்தைகளை குறிவைக்கும் கொரில்லா..!

ஜீவாவுடன் மனிதகுரங்கு செய்யும் அட்டகாச சேட்டை… குழந்தைகளை குறிவைக்கும் கொரில்லா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜீவாவுடன் மனிதகுரங்கு செய்யும் அட்டகாச சேட்டை... குழந்தைகளை குறிவைக்கும் கொரில்லா..! நடிகர் ஜீவாவின் நடிப்பில் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகிவரும் கொரில்லா படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டான் சாண்டி இயக்கியுள்ள இப்படத்தில் ஜீவா ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சதீஸ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சிம்பன்ஸி குரங்கு ஒன்று இப்படத்தில் நடித்து மாஸ் காட்டியிருக்கிறது. இதனாலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.  ...
பக்கா கமர்சியலான ஒரு மசாலா படம்தான் கொரில்லா – ஜீவா

பக்கா கமர்சியலான ஒரு மசாலா படம்தான் கொரில்லா – ஜீவா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கொரில்லா பட பாடல் விழாவில் பிரபலங்கள் பேசியது:   இயக்குநர் டான் சாண்டி பேசியதாவது, "தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்ததிற்காக நன்றி. இசை அமைப்பாளர் எனக்கு மிக நெருக்கமான நண்பர். யுகபாரதி மிக முக்கியமானவர் எனக்கு. மற்றபடி கேமராமேன், எடிட்டர், அவர்களுக்கும் நன்றி. காஸ்ட்யூமர் பூர்த்தி ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார். கொரில்லா டீசரின் பார்த்துவிட்டு சிம்பஸி வைத்து என்னை ஏமாத்துறீயான்னு கேட்டாங்க. ஜீவா சாரை நான் கற்றது தமிழில் இருந்து பார்த்து வருகிறேன். அவர் இல்லை என்றால் இந்தப்படம் இல்லை. இந்தப்படத்தில் அவர் நிறைய உதவி பண்ணி இருக்கிறார். இந்தக்குரங்கு எங்களை அவ்வளவு அடித்திருக்கிறது. தாய்லாந்து சென்று மஜாச் செய்யாமல் வந்த டீம் நாங்கள். எங்களின் இந்த நேர்மையைப் பாராட்டி படத்தை வெற்றியடைய வேண்டும்" என்றார் இசை அமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது, "முன்னாடியே ரிலீஸ் ஆக...
மனிதர்களை வைத்து படம் எடுப்பதே கஷ்டம்… மிருகத்தை வைத்து அழகாக படமெடுத்திருக்கிறார்கள் – ராதாரவி

மனிதர்களை வைத்து படம் எடுப்பதே கஷ்டம்… மிருகத்தை வைத்து அழகாக படமெடுத்திருக்கிறார்கள் – ராதாரவி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். பேப்பரில் இருக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அத்தகையவர் தான். அது படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் தெரிந்தது. சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் ராஜேஷ்செல்வா பேசியாதாவது, "இந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என் படத்திலும் வொர்க் பண்ணி இருக்கிறார்கள். அதனால் இந்தப்ப்பட...
நியூஸ் சேனல், போன் இல்லாமல் இருந்தால் நிம்மதி – ஜிப்ஸி பட விழாவில் ஜீவா லகலக…

நியூஸ் சேனல், போன் இல்லாமல் இருந்தால் நிம்மதி – ஜிப்ஸி பட விழாவில் ஜீவா லகலக…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒலிம்பியா மூவிஸின் ஜிப்ஸி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.   நடிகர் ஜீவா பேசும்போது, "ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். என் வீட்டிலே நான் ஜிப்ஸி போல தான். இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி ஆனேன். ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இன்னைக்கு நம்ம போன் நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும். இந்தப்படத்திற்கு நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன். இந்தப்படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான். ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும். ...