வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: தண்ணீர் பஞ்சம்

தண்ணீர் பஞ்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில் ஏரி,குளங்களை தூர் வார வேண்டும் – ரஜினி

தண்ணீர் பஞ்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில் ஏரி,குளங்களை தூர் வார வேண்டும் – ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தர்பார் ஷூட்டிங் முடிந்து மும்பையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- குடிநீர் பிரச்சினையில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ள ரசிகர்களை மனமார்ந்து பாராட்டுகிறேன். அவர்களை வாழ்த்துகிறேன். ரசிகர்கள் செய்வது மிகவும் நல்ல விசயம். இதுபோன்ற நல்ல வேலைகளை முதலில் இருந்து செய்து வருகிறோம். இப்போதுதான் வெளியே தெரிய தொடங்கி உள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும். இதற்காக உடனடியாக ஏரி, குளங்கள் உள்பட நீர்நிலைகளை தூர்வாரவேண்டும். மழை வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் சரிசெய்து வைத்து மழைநீரை சேமிக்கவேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் செய்யப்படவேண்டும். பாரதீய ஜனதா அரசு இப்போதுதான் பொறுப்பேற்று உள்ளது. நதிநீர் இணைப்புகளை...
தமிழகத்துக்கு உடனடியாக 40.43 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு  காவிரி ஆணையம் உத்தரவு..!

தமிழகத்துக்கு உடனடியாக 40.43 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு காவிரி நீர் பங்கீட்டில் தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு என்ற அமைப்புகளை மத்திய அரசு கடந்த ஆண்டு அமைத்தது. இந்த 2 அமைப்புகளிலும் மேற்கண்ட 4 மாநிலங்களில் இருந்தும் தலா ஒரு அதிகாரி உறுப்பினராக உள்ளார். இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி அணைகளின் நீர் இருப்பு விவரங்களையும், நீர் பங்கீட்டு அளவு விவரத்தையும் விவாதித்து வருகின்றன. அந்தவகையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில...
கடும் தண்ணீர் பஞ்சம் 28ல் தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் எதிரொலிக்குமா…

கடும் தண்ணீர் பஞ்சம் 28ல் தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் எதிரொலிக்குமா…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக சட்டப்பேரவை 28ல் கூடுகிறது. கடும் தண்ணீர் பஞ்சம், சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் என சட்டசபை கூட்டத் தொடர் கடும் அமளியாக இருக்கும் என தெரிகிறது. தமிழகத்தில் காலியாக இருந்த 22 தொகுதிகளுடன் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன. இதற்கிடையே சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தி.மு.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சட்டசபை கூடியதும் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்து கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டசபை கூட்டம் எப்போது கூட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தமிழக சட்டசபையில் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் பிப்ரவரி 14-ந்...
அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் – தண்ணீர் பிரச்சினையை  பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி.

அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் – தண்ணீர் பிரச்சினையை பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருந்தேன் - தண்ணீர் பிரச்சினையை பொது மேடையில் பேசிய எஸ்.பி.பி. யோகிபாபு நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கூர்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பேசியதாவது:- ‘தங்கம், பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது. தண்ணீர் பற்றாக்குறை தற்போது அதிக அளவில் உள்ளது. அதற்கு காரணம் நாம் தான். இப்போதாவது தண்ணீர் சேகரிப்பது தொடர்பாக நல்ல வி‌ஷயங்களை நாம் செய்ய முயற்சி செய்ய வேண்டும். தண்ணீரை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சின்ன சின்ன பயன்படுத்தும் முறைகள் உள்ளன. அவற்றை அன்றாடம் நாம் பயன் படுத்தினால் போதும். நம் தட்டில் சாப்பிடுவதை விட வாழை இலையில் சாப்பிடலாம். அதனால் தண்ணீர் மிச்சமாக வாய்ப்புள்ளது. தினமும் வெவ்வேறு ஆடைகளை பயன்...
ஜூன் 6ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குமாம்..!

ஜூன் 6ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குமாம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, கேரளாவில் மே மாதம் இறுதி வரை தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்நிலையில் லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியது. இதன் மூலம் இன்னும் 4 நாட்களில் பருவ மழை தொடங்குமாம். இவர்களின் தகவல் படி வருகிற 6-ந்தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பருவமழை தொடங்கிய சில தினங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவ மழை குறித்த காலத்தில் தொடங்குவதும் இல்லை. மழையும் குறைவான அளவில் தான் பெய்கிறது. இந்த ஆண்டாவது மழை சரியான நேரத்தில் தொடங்கி தண்ணீர் பஞ்சத்தை போக்குமா என்பதே தமிழ்நாட்டின் இப்...