வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: நாசர்

தென்னிந்திய நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு!

தென்னிந்திய நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பத்மஸ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகி, மூத்த நடிகைகள் ராதிகா, பாரதி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறும்போது, நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க இன்னும் ரூ.30 கோடி வேண்டும். அந்த நிதியை எப்படி திரட்டுவது என்று ஆலோசித்தோம். வங்கியில் கடன் பெற பொதுக்குழுவில் அனுமதி வாங்கி இருக்கிறோம். விரைவில் கட்டிடத்தை கட்டி முடிக்க நடவடிக்கை எடுப்போம். உ...
கபடதாரி படத்தில் சம்பள குறைப்பு செய்த நாசர்!

கபடதாரி படத்தில் சம்பள குறைப்பு செய்த நாசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கபடதாரி படத்தில் சம்பள குறைப்பு செய்த நாசர்! சிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து டப்பிங் உட்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற இருந்த நேரத்தில் கொரானா ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாக ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையும் முடங்கிப் போனது. சுமார் 2 மாதத்திற்கு பின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை செய்ய அரசு அனுமதி அளித்தது. இதன் காரணமாக நிறுத்தப்பட்ட பணிகளை கபடதாரி படக்குழு பரபரப்பாக செய்யத் தொடங்கியது. படத்தில் நாசர் டப்பிங் பேசும்போது அரசு விதித்த நிபந்தனைகளை பின்பற்றி தனது பணியை செய்து முடித்தார். அதோடு, கொரானாவால் ரிலீஸ் முடக்கம் காரணமாக தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட இழப்பை தன்னால் முடிந்த அளவுக்கு சரி செய்ய தனது சம்பளத்தில் இருந்து 15% தொகையை நாசர் விட்டுக் கொடுத்து தயாரிப்பாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஒரு...
நேர்மையாக தேர்தல் நடந்தால் ராதாரவி தோல்வி உறுதி என்பதால் சின்மயி வேட்புமனுவை நிராகரிக்க ரகசிய திட்டமா?

நேர்மையாக தேர்தல் நடந்தால் ராதாரவி தோல்வி உறுதி என்பதால் சின்மயி வேட்புமனுவை நிராகரிக்க ரகசிய திட்டமா?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  சின்மயி வேட்புமனுவை நிராகரிக்க ரகசிய திட்டம்! தமிழ் சினிமாவில் இப்போது ஹாட் டாப்பிக் டப்பிங் யூனியன் தேர்தல்தான். நில மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாடகி சின்மயி போட்டியிடுகிறார். சின்மயி அணிக்கு பலம் சேர்க்கும் விதமாக நடிகர் சங்க தலைவராக இருந்த நாசர் டப்பிங் யூனியன் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனு செய்துள்ளார். ஏற்கனவே ராதாரவி டப்பிங் யூனியனை தனது சொந்த அலுவலகம் போல பயன்படுத்தி பல வகையில் பண முறைகேடுகளில் ஈடுபடுகிறார் என உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினாலும் அப்படி குற்றம் சுமத்தியவர்களையே சங்கத்தை விட்டு வெளியேற்றியிருக்கிறார் ராதாரவி. பொதுக்குழுவிலும் சங்கத்துக்கு தொடர்பில்லாத அடியாட்களை வைத்துக் கொண்டு யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாதபடி கூட்டத்தை நடத்தி முடித்தார் என்ற க...
டப்பிங் யூனியன் தேரத்லில் ராதாரவியை எதிர்த்து நாசர் போட்டி!

டப்பிங் யூனியன் தேரத்லில் ராதாரவியை எதிர்த்து நாசர் போட்டி!

HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  டப்பிங் யூனியன் தேரத்லில் ராதாரவியை எதிர்த்து நாசர் போட்டி! சினிமா டப்பிங் யூனியன் சங்கத்தின் தலைவராக உள்ள ராதாரவி பதவி காலம் முடிவடைந்ததால் தேர்தல் அறிவிக்கபட்டது. டப்பிங் சங்கத்தில் ராதாரவி தலைமையிலான நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்த போதும், அப்படி புகார் எழுப்பும் உறுப்பினர்களை சங்கத்தை விட்டே ராதாரவி நீக்கிவிட அதை எதிர்த்து பலர் நீதிமன்றம் போனார்கள். அப்படி நீக்கப்பட்ட பாடகி சின்மயி நீதிமன்றம் சென்று ராதாரவி எடுத்த தடையை நீக்கி மீண்டும் உறுப்பினராக ஆனார். இந்த நிலையில் டப்பிங் தலைவராக ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ராமராஜ்ஜியம் அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாடகி சின்மயி போட்டியிடுகிறார். இந்த நிலையில் சின்மயி உள்ள ராமராஜ்ஜியம் அணி சார்பாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர் திடீரென மனுத்தாக்கல...
நடிகர் சங்க நில மோசடி வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி ராதாரவி,சரத் எந்நேரமும் கைதாகலாம்..!

நடிகர் சங்க நில மோசடி வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி ராதாரவி,சரத் எந்நேரமும் கைதாகலாம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நில மோசடி வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி ராதாரவி எந்நேரமும் கைதாகலாம்..! நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்று மோசடி செய்ததாக முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, செல்வராஜ், காளை ஆகியோர் மீது மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் வேங்கட மங்கலம் கிராமத்தில் இருந்த நடிகர் சங்கத்தின் இடத்தை உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல் பதவியை முறைகேடாக பயன் படுத்தி விற்பனை செய்ததாக எழுந்த புகாரை காஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் நில மோசடி வழக்கில் சிக்கிய 4 பேரில் காளை இறந்து விட்டார். ராதாரவி, சரத்குமார் ,செல்வராஜ் மீது வழக்கு நடந்து வந்தது.   இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி குற்றம்சட்டப்பட்டவர்கள் மீது சார்ஜ்ஷீட் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து நில மோசடி வழக்கு வேகம் எடுத்து முறைகேடு செய்தவர்கள...
அரசியல் தலையீடும் இல்லை – வேட்புமனு தாக்கலுக்கு பின் நாசர் பேட்டி

அரசியல் தலையீடும் இல்லை – வேட்புமனு தாக்கலுக்கு பின் நாசர் பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தினார் கமல்ஹாசன். நடிகர் சங்க தேர்தலில் எந்த அரசியல் குறுக்கீடும் இல்லை - நாசர் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் M. நாசர்,செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் பிரேம்குமார், அஜயரத்தினம்,சிபிராஜ் ஆகியோர் இன்று தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் .கார்த்தியின் வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தலைவராக போட்டியிடும் M.நாசர் வெற்றி வாய்ப்பை பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது. " இது ஜனநாயக முறைப்படி நடிகர் சங்கத்துக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல். கடந்த முறை நாங்கள் தேர்தலை வேறொரு களத்தில் வேறொரு சூழ்நிலையில் சந்தித்...
நடிகர் சங்க நில மோசடி புகார் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக ராதாரவி, சரத்குமாருக்கு சம்மன்..!

நடிகர் சங்க நில மோசடி புகார் காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக ராதாரவி, சரத்குமாருக்கு சம்மன்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தை முறை கேடாக விற்பனை செய்த புகாரில் நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் ராதாரவி, சரத்குமார் உட்பட 4 பேர் மீது மோசடி புகாரை நடிகர் சங்க தலைவர் நாசர் கொடுத்திருந்தார். அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சார்ஜ் ஷீட் போட்ட பிறகும் ராதாரவி, சரத்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசியல் அழுத்தம் காரணமாக இந்த வழக்கு தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் நடிகர் சங்க முன்னாள் நிர்வாகி சரத்குமார் மற்றும் ராதாரவி வரும் 20ஆம் தேதி காஞ்சிபுரம் குற்றவியல் போலீசாரிடம் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க நிலம் கையாடல் செய்ததாக சங்கத் தலைவர் நாசர் தொடர்ந்த வழக்கில் வரும் 20ஆம் தேதி காஞ்சீபுரம் குற்றவியல் போலீசாரிடம் முன...
நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்… விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?

நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்… விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சங்கத் தேர்தல் நடத்த நீதியரசர் நியமனம்... விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ராதிகா தலைமையில் புது அணி போட்டியா..?   தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாசர் விஷால் தலைமையில் பாண்டவர் அணி என்ற பெயரில் போட்டியிட்டார்கள். பெரும் பரபரப்புடன் பொதுத் தேர்தல் போல பெரும் எதிர்பார்ப்புடன் நடந்த தேர்தலில் நாசர் தலைவராகவும் விஷால் பொதுச்செயலாளராகவும் கார்த்தி பொருளாளராகவும் தேர்வு பெற்றார்கள். இவர்களது பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன்நிறைவடைந்த நிலையில் நடிகர் சங்க கட்டட பணிகள் நடந்து வருவதால் அதையே காரணம் காட்டி 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், 6 மாத கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி செயற்குழு கூட்டம...
நடிகர் சங்கத்துக்கு விரைவில்  தேர்தல் – நாசர் அறிவிப்பு

நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் – நாசர் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சென்னை தியாகராய நகரில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. செயற்குழு கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் நாசர், நடிகர் சங்க தேர்தல் தேதி சட்டரீதியாக அறிவிக்கப்படும் என கூறினார். நடிகர் சங்க துணை தலைவர் நடிகர் பொன்வண்ணன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த கூட்டத்தில் தேர்தல் பற்றிய ஆலோசனையே முக்கிய விசயமாக இருந்தது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மிகவிரைவில் நியமிக்கப்படுவார். தேர்தல் தேதியை அவர் அறிவிப்பார். நாளை முதல் தேர்தல் வேலைகள் நடைபெறும். இதேபோன்று நடிகர் சங்க கட்டிட வேலைகளை முடிக்க கடும் முயற்சிகள் செய்து வருகிறோம் என கூறினார்....