வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

Tag: நிவாரண உதவி

கொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் அஜீத் ஒரு கோடியே 32.5 லட்சம் நன்கொடை !.

கொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் அஜீத் ஒரு கோடியே 32.5 லட்சம் நன்கொடை !.

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் அஜீத் ஒரு கோடியே 32.5 லட்சம் நன்கொடை அளித்தார். கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் தருமாறு பொதுமக்களுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திரையுலக தரப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும் 10 லட்சம் நிதி அளித்திருந்தார். இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள, முதல் அமைச்சர் நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சி அமைப்புக்கு ரூ.25 லட்சம், திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கங்களுக்கு தலா 2.5 லட்சம் என ரூ.1 கோடியே 32.5 லட்சம் ரூபாய் நிதியை நன்கொடையாக நடிகர் அஜித்குமார் வழங்க...
நடிகர் சங்கத்துக்கு உதவுங்கள் முன்னணி நடிகர்,நடிகைகளுக்கு பூச்சி முருகன் வேண்டுகோள்!

நடிகர் சங்கத்துக்கு உதவுங்கள் முன்னணி நடிகர்,நடிகைகளுக்கு பூச்சி முருகன் வேண்டுகோள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண நிதி உதவி அளிக்க வேண்டும் என முன்னணி நடிகர், நடிகைகளுக்கு நடிகர் சங்க அறக்கட்டளை முன்னாள் உறுப்பினர் பூச்சி முருகன் வேண்டுகோள் விடுத்தார்.   இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:   முன்னணி நடிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்... கரோனா வைரஸ் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் திடீர் ஊரடங்கால் சினிமாத்துறையே முடங்கி கிடக்கிறது. இந்த திடீர் முடக்கத்தால் திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் அன்றாட சம்பளத்துக்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தான். இவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஃபெஃப்சி சார்பில் திரை பிரபலங்களிடம் உதவி கேட்டு வாங்கி உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல நமது சங்க உறுப்பினர்களுக்க...
கொரானா நிவாரண பொருள் டோக்கன், ஆயிரம் ரூபாய்  ரொக்கம் நாளை வீடுதேடி வரும்..!

கொரானா நிவாரண பொருள் டோக்கன், ஆயிரம் ரூபாய் ரொக்கம் நாளை வீடுதேடி வரும்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரோனா நிவாரணத்தொகை ரூ.1000 வீடு வீடாக நாளை முதல் வினியோகம்! தமிழகம் முழுவதும் 2 கோடியே 10 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் மட்டுமே அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரணத் தொகை ரூ.1000 மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான பொருட்கள் வழங்கும் பணி கடந்த 2-ந்தேதி ரேசன் கடைகளில் தொடங்கப்பட்டது. இதனை பெற ரேசன் கடைகளில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர். இதன் காரணமாக நிவாரணத்தொகை ரூ.1000-த்தை வீடு, வீடாக சென்று வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் பொருட்களை ரேசன் கடைகளில் வினியோகம் செய்யும் நடைமுறை இன்றுடன் நிறுத்தப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரேசன...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கார்காவயல் கிராமத்தை தத்தெடுத்த நடிகர் விஷால்..!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கார்காவயல் கிராமத்தை தத்தெடுத்த நடிகர் விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட கார்காவயல் கிராமத்தை தத்தெடுத்த நடிகர் விஷால நடிகர் விஷால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது கருணை உள்ளத்தால் விரைந்துச் சென்று தன் உதவி கரத்தை நீட்டுவார். அதற்கு ஆதாரமாக அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘நாம் ஒருவர்’ என்ற நிகழ்ச்சி சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. வறுமையில் வாடும் மக்களுக்கு அவர் அளித்து வரும் உதவிகள், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக பிரச்னை மற்றும் சினிமா சார்ந்த பிரச்னைகளுக்கு தனது தனிப்பட்ட கடமைகளையும் ஒதுக்கி, முன்வந்து பிரச்னைகளுக்கான தீர்வைக் காண்பவர் விஷால். தமிழ்நாட்டின் ‘டெல்டா பகுதி’ முழுவதும் கஜா புயலால்  பேரழிவை சந்தித்திருக்கிறது. அதில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், கார்காவயல் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார்...
கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் வழங்கினார்!

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் வழங்கினார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கஜா புயலில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் - லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர வேண்டுகோள். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் தமிழக மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் “மாண்புமிகு” தமிழக முதல்வர் .எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து, எங்களின் "தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்" சார்பாக ரூபாய் 1 கோடி, கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கியுள்ளோம். மேலும் இத்தருணத்தில் நம் தமிழக மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். புயலால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கு நாம் அனைவரும் நம்மால் இயன்ற சிறிய உதவியோ, பெரிய உதவியோ செய்து இத்துயரத்தில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப அனைவரும் ஆதரவு தந்து தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நம் விவசாய நண்பர்கள் கஜா புயலின் தாக்குதலால் மிகுந்த பாத...