வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: பிரபுதேவா

வைரலாகும் ‘பஹீரா’ பட பாடல்!

வைரலாகும் ‘பஹீரா’ பட பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ள 'பஹீரா' படத்தின் டிரைலர் 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது டிரைலரை சமீபத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். ...
பெண் மருத்துவரை திருமணம் செய்துவிட்டாரா பிரபு தேவா?

பெண் மருத்துவரை திருமணம் செய்துவிட்டாரா பிரபு தேவா?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பெண் மருத்துவரை திருமணம் செய்துவிட்டாரா பிரபு தேவா? பிரபுதேவா நடனக் கலைஞர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அதையும் தாண்டி நடிப்பு, இயக்கம் என்று தன் திறமையை நிரூபித்து வருபவர். பாலிவுட்டில் சென்று தென்னிந்திய இயக்குனராக தன் முத்திரையைப் பதித்தவர். நயன்தாராவின் வருகைக்குப்பின் அவரது வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. அவையெல்லாம் ஓய்ந்து படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் பிரபுதேவா ஒரு பெண்ணுடன் சமீபத்தில் திருப்பதிக்கு சென்றிருக்கிறார். அந்தப் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அவருடன் இருக்கும் பெண்ணை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் பரவி வருகிறது. அவர் ஒரு பெண் மருத்துவர் என்றும், பரிசோதனை செய்யப்போனபோது, அவரிடம் நட்பு ஏற்பட்டு இந்தத் திருமணம் நடந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது....
நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் பிரபுதேவாவின் படம்!

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் பிரபுதேவாவின் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் பிரபுதேவாவின் படம்! பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள இப்படம், விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி உள்ளது. சமீபத்தில் ப...
முன்னாள் காதலர் பிரபுதேவா படம் பிளாப் ஆனதால் ஷாக் ஆன நயன்தாரா..!

முன்னாள் காதலர் பிரபுதேவா படம் பிளாப் ஆனதால் ஷாக் ஆன நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  முன்னாள் காதலர் பிரபுதேவா படம் பிளாப் ஆனதால் ஷாக் ஆன நயன்தாரா..! இந்தியில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் கடந்த வெள்ளியன்று ரிலீஸான ‘காமோஷி’ படம் படுதோல்வி அடைந்துள்ளதால் நடிகை நயன்தாரா உள்ளிட்ட ‘கொலையுதிர்காலம்’படக்குழுவினருக்கு பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. முன்னாள் காதலர் பிரபுதேவா படம் இந்தியில் பிளாப் ஆனால் நயன்தாரா ஏன் கவலை அடைய வேண்டும்... என்று யோசிக்கிறீர்களா... இந்தியில் பிரபுதேவா நடிச்ச காமோஷி படம் தான் தமிழில் நயன்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் படமாக எடுக்கப்பட்டு உள்ளது. அதே இயக்குனர் சக்ரி தான் இரு மொழிகளிலும் இயக்கி இருக்கிறார். அப்ப பதட்டம் இருக்காதா... ஏற்கனவே படத்தை ரிலீஸ் பண்ணக் கூடாதுன்னு கோர்ட் தடை விதித்தது. அந்த தடையை சில தினங்களுக்கு முன்பு தான் கோர்ட் நீக்கியது. அப்பாடா சிக்கல் தீந்துடுச்சி... படத்தை ரிலீஸ் பண்ணிடலாம்னு யோசிக்கும்போ...
தேவி 2வில் இரண்டு ஆவி… லாபமா காமி – கோடங்கி விமர்சனம்

தேவி 2வில் இரண்டு ஆவி… லாபமா காமி – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  ஹீரோயினுக்கு அழகான பேய் புடிச்சா அது தேவி ... அதேநேரம் கதாநாயகனுக்கு பேய் புடிச்சா அதுவும் ஒண்ணு இல்ல இரண்டு பேய் புடிச்சா... அட அதாங்க தேவி 2 தேவில மும்பைக்கு வேலைக்கு போற பிரபுதேவா மனைவி தமன்னா மீது அகால மரணமடைந்த நடிகையின் ஆவி புகுந்து அதன் பிறகு நடக்கும் களேபரங்கதான் காட்டப்பட்டது. தேவி 2 அதேட தொடர்ச்சியா இருந்தாலும் வித்தியாசம் காட்டனுமில்ல... அதனால ஜோசியத்த நம்பி மொரிஷியஸ் நாட்டில் வேலைக்கு போகிறார் பிரபுதேவா. கூடவே மனைவி தமன்னாவும்...   அங்கே போனதும் இனி மனைவி தமன்னாவை எந்த ஆவியும் பிடிக்காதுன்னு சந்தோஷமாகிறார். ஆனா தமன்னாவுக்கு பிரபுதேவா மேல சந்தேகம்... ஒரு கட்டத்தில் பிரபுதேவா மேல இரண்டு ஆவிகள் இருப்பதை கண்டு பிடிக்கிறார். அதை வெளியேற்ற வக்கீல் கோவை சரளாவுடன் சேர்ந்து தமன்னா செய்கிற சேட்டையில் ஆவிகள் ஓடியதா... இல்லியா எனபதுதான் தேவி 2 கதை. ...
ஏப்ரல் 12ல் ரிலீஸ் ஆகி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க உள்ள பிரபுதேவாவின் “தேவி 2”

ஏப்ரல் 12ல் ரிலீஸ் ஆகி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க உள்ள பிரபுதேவாவின் “தேவி 2”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  ஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் வெளியாகும் 'தேவி 2'! பொதுவாக 'திகில்' படங்கள் எப்போதும் குடும்ப பார்வையாளரகளின் விருப்ப படமாக  இருந்ததில்லை. அவர்கள் ஓய்வு நேரங்களில் ஜாலியாக ஏதாவது படத்தை பார்க்க வேண்டும் என்றே விரும்புபவர்கள். இயக்குனர் விஜய் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு அணுகுமுறையை தேவி படத்தில் கையாண்டிருந்தார். அதனாலேயே குடும்ப ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது. 'பேய்' படங்களிலேயே சற்று வித்தியாசமாக உருவானது தேவி. பயமுறுத்துவதை தாண்டி நம்மை விலா நோக சிரிக்க வைத்தது தேவி. இப்போதும் கூட, டிஜிட்டல் தளங்கள் மற்றும் டிவி சேனல்களில் பார்க்கும் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கிறது. இந்த படத்திற்கான ஆர்வம் இன்னும் அப்படியே இருக்கும் நிலையில், நம்மை இன்னும் உற்சாகப்படுத்த இருக்கிறது தேவி 2 படக்குழு. ஆம், வரும் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தே...