வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: மக்கள் ஊரடங்கு

கொரானா ஊரடங்கு… நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

கொரானா ஊரடங்கு… நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பிடியிலிருந்து மக்களை காக்கவே ஊரடங்கு என்று கூறி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்! மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா வைரசை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். கொரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம் போன்றது. நான் எடுத்த முடிவால் என்மீது சிலர் கோபத்தில் இருப்பதை நான் அறிவேன். ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் கொரோனாவை கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு வழி இல்லை. விதிகளை மீறி வீடுகளை விட்டு வெளியே வரும் சிலரால...
மக்கள் ஊரடங்கு முடிவல்ல தொடக்கம்… ஆதரவளித்த மக்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

மக்கள் ஊரடங்கு முடிவல்ல தொடக்கம்… ஆதரவளித்த மக்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மக்கள் ஊரடங்கு முடிவல்ல தொடக்கம்... ஆதரவளித்த மக்களுக்கு நன்றி - பிரதமர் மோடி மக்கள் ஊரடங்குக்கு நாட்டு மக்கள் அளித்த ஒத்துழைப்பால் பிரதமர் மோடி மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார். டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி கிடந்த வீடியோக்களை தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டு சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:- கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் தான் மதிப்புமிக்க வீரர்கள். உங்களின் எச்சரிக்கையும், உஷார் நிலையும்தான் லட்சக்கணக்கான உயிர்களை பாதுகாக்கும். இந்த ஊரடங்கு இரவு 9 மணியுடன் முடியலாம். ஆனால் இதை கொண்டாட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. இதை ஒரு வெற்றியாக கருதக்கூடாது. ஒரு நீண்ட போராட்டத்தின் தொடக்கமாகவே கொள்ள வேண்டும். சமூக விலகலை உறுதி செய்வதற்கு இதுவே தகுந்த தருணம். மக்கள் ஊரடங்கால் மக்கள் தங்கள் குடும...
கொரானா முன்னெச்சரிக்கை 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் – பிரதமர் மோடி

கொரானா முன்னெச்சரிக்கை 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் – பிரதமர் மோடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா முன்னெச்சரிக்கை 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9/மணிவரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் - பிரதமர் மோடி உலகம் முழுதும் பெரும் அச்சத்தையும் பதட்டத்ததையும் ஏற்படுத்தி உள்ள கொரானா வைரஸ் அச்சுறுத்தல் இந்தியாவிலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவை மார்ச் 31வரை மூடப்பட்டு உத்தவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றிய போது கூறியது: கொரானா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அவசியம் இல்லாமல் வெளியில் செல்வதை மக்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். ஒரு வகையில் கொரானா கொடிய நோய் உலகப்போரைவிட மிக மோசமானது. கொரானாவால் பொருளாதாரம் பெருமளவு சேதமடைந்து உள்ளது. சில நாடுகள் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தன அதனால் நோய் கட்டுக்குள் வந்து விட்டது. மக்கள்...