சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: மக்கள் நீதி மய்யம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் கமல்ஹாசன் போட்டி!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் கமல்ஹாசன் போட்டி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கே மீண்டும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இல்லையென்றால் அவரது மனைவி வரலட்சுமி, 2-வது மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் மனைவி பூர்ணிமா ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இளங்கோவன் போட்டியிட விரும்பாதபட்சத்தில் தனது ஆதரவாளர் யாருக்காவது சீட் கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து இளங்கோவனை போட்டியிட அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ...
கமல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு  ரூ.1½ கோடி நன்கொடை !

கமல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ரூ.1½ கோடி நன்கொடை !

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளின் கூட்டம் மாங்காட்டில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் நிர்வாகிகள் அனைவரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அவர் கூறும்போது, "கட்சியில் நான் செய்யாத எதையும் உங்களை செய்ய அறிவுறுத்த மாட்டேன். அந்த வகையில் எனது வருமானத்தில் இருந்து கட்சிக்காக ரூ.1½ கோடியை நன்கொடையாக வழங்குகிறேன்" என்று தெரிவித்தார். இதனை கட்சி நிர்வாகிகள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹான் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார். உங்களால் முடிந்த தொகையை கட்சிக்கு நன்கொடையாக வழங்குங்கள். அது சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை என்றார். 100 ரூபாய் சம்பாதிக்கும் நப...
மக்கள் நீதி மய்ய கூடாரம் காலி! முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா!!

மக்கள் நீதி மய்ய கூடாரம் காலி! முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா!!

HOME SLIDER, NEWS, politics
  மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சியில் துணைத் தலைவர் பதவி வகித்து வந்த மகேந்திரன் மற்றும் குமரவேல், மவுரியா, முருகானந்தம், சந்தோஷ்பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகியுள்ளனர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறவில்லை. கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தோல்வியை தழுவினார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியில் பெரிய மாற்றம் செய்ய இருப்பதாகவும், அது கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளான மகேந்திரன், பொன்ராஜ், மவுரியா உள்ளிட்ட 10 நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர் இந்நிலையில் மகேந்திரன் வெளியிட்டுள்ள ராஜினாமா கடிதத்தில், நான் கனத்த இதயத்துடனும், தெளிவா...
கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு!

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு!

HOME SLIDER, politics, செய்திகள், நடிகர்கள்
கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு! கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவியது. நேற்று காலை சென்னையில் தனது வாக்கை பதிவு செய்த கமல்ஹாசன், உடனடியாக அங்கிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை வந்தார். கோவையில் தான் போட்டியிடும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வாக்குப்பதிவு விவரம், எதாவது பிரச்சனைகள் உண்டா? என தேர்தல் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் தோல்வி பயத்தில் உள்ளவர்கள் டோக்கன் வழங்கி பணப்பட்டுவாடா செய்வதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். தொட...
கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து!

கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து! நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் காலை 11 மணிக்கு தூத்துக்குடியிலும், பிற்பகலில் நெல்லை, பாளை பகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்துவிட்டு மாலை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசனின் இன்றைய தென்மாவட்ட நிகழ்ச்சிகள் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியதாவது:- கமல்ஹாசன் நேற்று மதுரை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவனியாபுரம், பெத்தானியாபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை, கோ.புதூர் பஸ் நிலையம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார...
நடிகர் கமல்ஹாசன் வாகனத்தை  மறித்த தேர்தல் பறக்கும் படை!

நடிகர் கமல்ஹாசன் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், முன்னோட்டம்
நடிகர் கமல்ஹாசன் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை! தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாகன சோதனை நடத்தி வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பயணித்த பிரசார வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற கமல்ஹாசனின் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். சோதனைக்கு பிறகு கமல் ஹாசன் தனது பயணத்தை தொடர்ந்தார்....
மக்களுக்கு தெரிந்த முகமாக நான் இருக்கிறேன் – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

மக்களுக்கு தெரிந்த முகமாக நான் இருக்கிறேன் – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

HOME SLIDER, politics, செய்திகள், நடிகர்கள்
மக்களுக்கு தெரிந்த முகமாக நான் இருக்கிறேன் -மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 234 தொகுதியிலும் மக்களுக்கு தெரிந்த முகமாக நான் இருக்கிறேன். இதனால், பல இடங்களுக்கு செல்கிறேன். ஹெலிகாப்டருக்கான செலவு எனது தேர்தல் செலவின கணக்கில்தான் வரும். எங்களது கட்சி தேர்தல் அறிக்கை விரைவில் வரும். நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன் அளித்த அறிக்கையில் கூறி இருப்பதை தற்போது கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. இது போன்ற நல்ல விஷயம் மக்களுக்கு செல்ல முன்னோடியாக இருக்கிறோம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற எங்களின் திட்டத்தை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். "கமல்ஹாசன் அறிவித்த திட்டத்தை பலரும் தேர்தல் அறிக்கையில் பயன்படுத்தி வருகிறார்கள்" என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் கூறி இருக்க...
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்!

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டது. அந்தத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதனையடுத்து, டார்ச் லைட் சின்னத்தை விளம்பரப்படுத்தும் பணியில் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் தீவிரமாக இறங்கினர். இதனைத்தொடர்ந்து டார்ச் லைட் சின்னம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமாக மக்களிடம் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு, தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.மக்கள் கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனால் கமல் ஹாசன் கடும் அதிருப்தி அடைந்தார். டார்ச் லைட் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க உத...
கமலுக்கு ஆதரவாக பேசியதற்கு  திருமாவளவன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு..!

கமலுக்கு ஆதரவாக பேசியதற்கு திருமாவளவன் மீது 2 பிரிவின் கீழ் வழக்கு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பற்றி தேர்தல் பிரசாரத்தில் கமல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே” என்று கூறிய கமல் மீது பல புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக கமல் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் முன் ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கமலுக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்தார். “கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி. காந்தியடிகள் ஒரு இந்து தீவிரவாதி” என்று திருமாவளவன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இந்து மக்கள் முன்னண...
எனக்கு இன்னொரு முகம் இருக்கு தோற்றாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்ய வேண்டும் – கட்சியினருக்கு கமல் கட்டளை

எனக்கு இன்னொரு முகம் இருக்கு தோற்றாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்ய வேண்டும் – கட்சியினருக்கு கமல் கட்டளை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
எம்பி தேர்தல்களில் தோல்வி தழுவி இருந்தாலும் சுமார் 4 சதவீதம் ஓட்டு வாங்கி அனைவர் பார்வையில் சிக்கியவர் கமல்.     மக்கள் நீதி மய்யம் கட்சியின்  ஆலோசனை கூட்டத்தில்  கமல் பேசும்போது, நாம் நல்ல வாக்கு சதவீதம் பெற்று இருக்கிறோம். ஆனால் டெல்டா மாவட்டம், வடமாவட்டங்களில் வாக்குகளை மிகக் குறைவாகப் பெற்றுள்ளோம். அதற்கான காரணம் என்ன என்று ஆலோசிக்க வேண்டும். தேர்தல்தான் முடிந்துவிட்டதே... இனி அடுத்த தேர்தலுக்கு மக்களிடம் போனால் போதும் என்று ஒதுங்கிக்கொள்ள வேண்டாம். தினந்தோறும் மக்கள் பணி செய்யுங்கள். மக்களின் குறையைக் கேளுங்கள், ஒவ்வொரு நாளும் களத்தில் நில்லுங்கள். தொகுதிக்கு சென்று மக்கள் குறையைக் கேட்டு செய்யுங்கள். அப்படி முடியாதவர்கள் ஒதுங்கிவிடுங்கள் என்று கூறியுள்ளார். மக்கள் கூப்பிடும் நேரத்திற்கு போய் குறைகளைக் கேளுங்கள். என்னை அதிகாலை 4 மணிக்கு அழைத்தாலும் வருவ...