வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ரூ.57.8 கோடி மதிப்பில் ஜெ., நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

ரூ.57.8 கோடி மதிப்பில் ஜெ., நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  ரூ.57.8 கோடி மதிப்பில் சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர். இந்தநிலையில் தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். . அதனை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினர...
தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி மதுரையில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி மதுரையில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனா தடுப்பூசி மருந்துகள் நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு செலுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்காக அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சுகாதார நிலையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடும் ஒத்திகை 2 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த ஒத்திகை திருப்திகரமாக இருந்ததால் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கையாக புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை விமானம் மூலம் அனுப்பி வைத்தது. சென்னைக்கு கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ்கள் வந்தது. இதே போல் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் 20 ஆயிரம் கோவேக்சின் தடுப்பு மருந்துகளும் பாதுகாப்பாக கொண்ட...
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் என மொத்தம் 5 மாவட்டங்கள் புதிதாக உதயமானது. புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட கலெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து, புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்....
முதல்வர் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடுகள்!

முதல்வர் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடுகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா பரவலால் கோட்டையில் முதல்வர் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் கடும் கட்டுப்பாடுகள்! இந்தியாவின் 74-வது சுதந்திர திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15-ந்தேதி காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி சிறப்பிப்பார். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரபோராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக்குழந்தைகளும் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு கொரானா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர் கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில், கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன் களப்பணியாளர்களை சிறப்பிக்கும் விதமாக, அவர...
ஊரடங்கு நீடிப்பா… மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று மீண்டும் ஆலோசனை!

ஊரடங்கு நீடிப்பா… மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று மீண்டும் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரடங்கு நீடிப்பா... மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று மீண்டும் ஆலோசனை! கொரானா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.34 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு 1.72 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,741 ஆக அதிகரித்துள்ளது.   இந்நிலையில், ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என ...
ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் திட்டத்தை தொடங்கிய முதல்வர்!

ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் திட்டத்தை தொடங்கிய முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம் - முதல்வர் தொடங்கி வைத்தார் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க ரேசன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்கி வைத்தார். தமிழக அரசு, கொரானா தொற்று பரவலை தடுக்க, பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ரேஷன் கடைகள் வாயிலாக, அனைத்து கார்டுதாரர்களுக்கும், தலா, ஒரு உறுப்பினருக்கு, இரண்டு முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தை, முதல்வர் இன்று துவக்கி வைத்தார். இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கார்டுதாரர்களுக்கு வழங்க உள்ள முக கவசம் கொள்முதல் பணிகளை, வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை மேற்கொள்கிறது. அவற்றை வழங்கும் பணி மட்டுமே, ரேஷன் கடைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், முக கவசம் வினியோகம் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்கள் த...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனி “பால் ஹாரீஸ் பெல்லோ” என்று அழைக்கப்படுவார் – பாராட்டிய அமெரிக்கா

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனி “பால் ஹாரீஸ் பெல்லோ” என்று அழைக்கப்படுவார் – பாராட்டிய அமெரிக்கா

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனி "பால் ஹாரீஸ் பெல்லோ" என்று அழைக்கப்படுவார் - பாராட்டிய அமெரிக்கா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு “Paul Harris Fellow” என்ற புதிய பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது அமெரிக்காவில் உள்ள ஒரு அமைப்பு. அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் “The Rotary Foundation of Rotary International” எனும் அமைப்பு குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு “Paul Harris Fellow” என்ற பட்டத்தை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வரின் சேவையை பாராட்டி அந்த அமைப்பானது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு “Paul Harris Fellow” என்ற பட்டத்தை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. இந்த தகவலை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளா...