செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16
Shadow

Tag: முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி

சசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெ., நினைவிடத்தை திறக்கும் முதல்வர் எடப்பாடி!

சசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெ., நினைவிடத்தை திறக்கும் முதல்வர் எடப்பாடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெ., நினைவிடத்தை திறக்கும் முதல்வர் எடப்பாடி! சென்னை மெரினா கடற்கரை வளாகத்தில், எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம் வரும் 27ந்தேதி  திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. அன்றைய தினம் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்து வெளியே வருகிறார்.  அன்றைய நாளில் ஜெ.நினைவிடம் திறக்கப்பட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான  ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவாலயம் அமைக்கப்பட்டு வருகிறது. பீனிக்ஸ் பறவைப்போல   அமைக்கப்பட்டு வரும் நினைவாலயம் மற்றும் அருங்காட்சியகம்  அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, ஜெ.நினைவிடம்  தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வரும் 27ந்தேதி அன்று ஜெயலலிதா மெரினா நினைவிடம் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அற...
வருகிற 27-ந் தேதி விடுதலையாகும் சசிகலாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அமமுக ஏற்பாடு!

வருகிற 27-ந் தேதி விடுதலையாகும் சசிகலாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அமமுக ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அமமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, பெங்களூரு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இதையடுத்து, 3 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி, சிறப்பு சலுகையை அனுபவித்ததாக குற்றச்சாட்டு இருந்ததால், அவர் முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் இருந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவல்படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை என்றும், அபராதத் தொகை செலுத்திவிட்டால் வருகிற 27-ந் தேதி விடுதலை ஆவார் என்றும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து சசிகலா கடந்த மாதம் அ...
தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி மதுரையில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி மதுரையில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனா தடுப்பூசி மருந்துகள் நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு செலுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்காக அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சுகாதார நிலையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடும் ஒத்திகை 2 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த ஒத்திகை திருப்திகரமாக இருந்ததால் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கையாக புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை விமானம் மூலம் அனுப்பி வைத்தது. சென்னைக்கு கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ்கள் வந்தது. இதே போல் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் 20 ஆயிரம் கோவேக்சின் தடுப்பு மருந்துகளும் பாதுகாப்பாக கொண்ட...
அரசியலில் கமல்ஹாசன் ஜீரோ – முதல்வர் பழனிசாமி விமர்சனம்

அரசியலில் கமல்ஹாசன் ஜீரோ – முதல்வர் பழனிசாமி விமர்சனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
அரசியலில் கமல்ஹாசன் ஜீரோ - முதல்வர் பழனிசாமி விமர்சனம் தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. குறிப்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அவர் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும், அவர் தொடர்ந்து ஆளும் அதிமுக அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால், அதிமுக-வுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது மக்கள் நீதியம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அதிமுக அரசை விமர்சிப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித...
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் என மொத்தம் 5 மாவட்டங்கள் புதிதாக உதயமானது. புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட கலெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து, புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்....
நீட் தேர்வை தடுத்ததே திமுக தான் சட்டசபையில் ஸ்டாலின் விளக்கம்!

நீட் தேர்வை தடுத்ததே திமுக தான் சட்டசபையில் ஸ்டாலின் விளக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு இவ்வளவு பெரிய பிரச்சினையாக காரணம் தி.மு.க. அரசுதான் என்று குற்றம் சாட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அப்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது என முதலமைச்சர் பழனிசாமி ஆவேசத்துடன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சரின் குற்றச்சாட்டிற்கு தி.மு.க. தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இது குறித்து விளக்கம் அறித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வை கொண்டு வந்தது பா.ஜ.க. அரசு, அதனை ஆதரித்தது அ.தி.மு.க. அரசு. மாணவர்கள் தற்கொலைக்கு அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும்தான் காரணமே தவிர, தி.மு.க. அல்ல. 2010-ல் நீட் தேர்வு வரவில்லை. இந்திய மருத்துவ...
தமிழகத்திலும் இ-பாஸ் ரத்தா?! 29ம் தேதி முதல்வர் முக்கிய முடிவு!

தமிழகத்திலும் இ-பாஸ் ரத்தா?! 29ம் தேதி முதல்வர் முக்கிய முடிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் கொரோனா பரவல் குறையாமல் நீடிக்கிறது. எனவே மக்களுக்கான பொது போக்குவரத்தை கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் அரசு தடை செய்துள்ளது. மிகவும் அவசியம் என்றால் மட்டும் இ-பாஸ் பெற்று வேறு மாவட்டங்களுக்கு செல்ல அரசு அனுமதி அளித்தது. ஆனாலும் இ-பாஸ் பெறுவதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவசிய காரணங்களுக்கும் இ-பாஸ் மறுக்கப்படுகிறது என்றும், அதில் முறைகேடுகள் உள்ளதாகவும் புகார்கள் கூறப்பட்டன. எனவே இ-பாஸ் வழங்குவதில் தளர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், வியாபாரிகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த உத்தரவு கடந்த 17-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. ...
தமிழக மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று அவர்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறேன் – முதல்வர்

தமிழக மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று அவர்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறேன் – முதல்வர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று அவர்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறேன் - முதல்வர் பழனிச்சாமியின் சுதந்திர தின உரை   நாட்டின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர். சென்னை ராஜாஜி சாலையில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார். அதன்பின்னர் தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திர தின விழாவில் 4வது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தேசியக்கொடியேற்றி வைத்தார். சு...
படப்பிடிப்பை நிறுத்தி, திரையரங்குகள் மூடி 150 கடந்து தமிழ் திரையுலகம் வேதனையில் உள்ளது – முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்

படப்பிடிப்பை நிறுத்தி, திரையரங்குகள் மூடி 150 கடந்து தமிழ் திரையுலகம் வேதனையில் உள்ளது – முதல்வருக்கு பாரதிராஜா கடிதம்

Uncategorized
  மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம்! தமிழகத்தில் பொதுமுடக்கம் தொடங்கி இன்றோடு 150 நாட்கள் ஆகிவிட்டது. எங்கள் திரைப்படங்கள் திரையரங்கில் 150 நாட்கள் ஓடி சாதனை புரிந்தால் அப்படியொரு மகிழ்வும் கொண்டாட்டமும் கொள்வோம். ஆனால் பட வெளியீடுகள் இன்றி திரையரங்கையும் மூடி... படப்பிடிப்புகளையும் நிறுத்தி, நூற்றைம்பது நாட்கள் ஆகிறது என்ற வேதனையை தமிழ்சினிமா முதன் முறையாக இப்போது சந்தித்துள்ளது. 80-க்கும் மேற்பட்ட படங்களும், படப்பிடிப்புகளும் தேங்கி நிற்கின்றது. கொரோனா காலகட்டத்தில் நாங்கள் முழுமையாக அரசாங்கத்தோடு நின்று எங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். அரசு கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றி எங்கள் முடக்கத்தை முழுமையாக செய்துவிட்டோம். எத்தனையோ ஏழைத் தொழிலாளிகளின் வயிறு பட்டினியாகக் கிடக்கிறது. தொழில் நுட்பக் கலைஞர்களின் சிறு சேமிப்புகள் கரைந்து, திரைத்துற...