வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: ராஷ்மிகா

பிரபல நடிகருடன் இணைந்த ராஷ்மிகா !

பிரபல நடிகருடன் இணைந்த ராஷ்மிகா !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா, தனுஷ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....
சமந்தா, காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா!

சமந்தா, காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சமந்தா, காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா! கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அங்கு அமிதாப் பச்சன், சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில், அதிக பாலோவர்களை கொண்...
ரஜினி கைவிட்ட தலைப்பை  கைப்பற்றிய கார்த்தி..!

ரஜினி கைவிட்ட தலைப்பை  கைப்பற்றிய கார்த்தி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ரஜினி கைவிட்ட தலைப்பை  கைப்பற்றிய கார்த்தி..! பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கார்த்தி நடித்து வந்த படத்துக்கு பேர் அறிவிக்கப்படாமல் இருந்தது. கார்த்தி-ராஷ்மிகா நடிக்கும் படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்காத போதும் படத்தின் தலைப்பு ’சுல்தான்’ என தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனிடையே சமீபத்தில் ராஷ்மிகா வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில் சுல்தான் படப்பிடிப்பில் இருப்பதாக பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த படக்குழு கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் சில மணிநேரங்களில் அந்த பதிவை நீக்கிய ராஷ்மிகா, படக்குழுவினரிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு 'சுல்தான்' என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே தலைப்பில் பத்தாண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு அனிமே‌ஷன் படத்தில் நட...
கார்த்திக்கு ஜோடியாகும் ராஷ்மிகா!

கார்த்திக்கு ஜோடியாகும் ராஷ்மிகா!

CINI NEWS, செய்திகள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரெமோ படத்தினை இயக்கியவர் பாக்யராஜ் கண்ணன். இவர் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் 19வது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர் கடந்த வருடம் தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். கார்த்தி தற்போது நடித்துவரும் அவரது 18வது படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....