வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: ரெட் அலர்ட்

கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது, மேலும் தீவிரமடைந்து அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மண்டலமாக மாறும்பட்சத்தில், வடதமிழக கடலோரப் பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ., தொலைவில் கிழக்கு-தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியால், இன்று அத...
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்! வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது, படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வரும் 11-ந்தேதி வடதமிழக கடற்கரை பகுதிகளை நெருங்கும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடதமிழகத்தில் நாளை கனமழைக்கும், நாளை மறுநாள் அதீத கனமழைக்கும்  வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் எதிரொலியால், இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக...
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுவடைய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில், புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும். மேலும், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிச.2-ந்தேதி தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டிசம்பர் 2-ந்தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
கனமழை எச்சரிக்கை ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட்..!

கனமழை எச்சரிக்கை ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கனமழை காரணமாக ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’’ தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்ரல்- 30, மே 1ம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் . வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றதழுத்த தாழ்வு மையம் இலங்கை வழியாக தமிழகத்தை கடக்கும்.   28ம் தேதி தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். 29ம் தேதி தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்யும். 30, மே-1ம் தேதி தமிழகத்தில் கடுமையான மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 115.6 முதல் 204.4 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப...
தமிழகத்துக்கு ரெட் அலர்ட் 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு

தமிழகத்துக்கு ரெட் அலர்ட் 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகம் மற்றும் கேரளாவில் வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்த ரெட் அலர்ட்டை தொடர்ந்து கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், கடலில் மீன் பிடிக்க சென்றவர்களை கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மழையில் இருந்து தமிழகத்துக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட அதிகாரிகளுடனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், தமிழகத்தின் மதுரை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரக்கோணத்தில் இருந்து இந்த மீட்புக்குழு தற்போது இந்த 4 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது....