வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

Tag: வனிதா

பிக்பாஸ் அல்டிமேட் – அடுத்த போட்டியாளர்!

பிக்பாஸ் அல்டிமேட் – அடுத்த போட்டியாளர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் - அடுத்த போட்டியாளர்! பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவ்னியும் பிடித்தனர். பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிமுகம் செய்வதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி போட்டியாளராக சினேகன், ஜூலி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், அடுத்ததாக வனிதா செல்ல இருக்கிறார். இதற்கான புரமோ இன்று மாலை வெளியாக இருக்கிறது....
பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா… வைரலாகும் புகைப்படம்!

பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா… வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா... வைரலாகும் புகைப்படம்! பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். சில தினங்களுக்கு முன்பு வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு வனிதா மறுப்பு தெரிவித்தார். பின்னர் வனிதாவின் எதிர்காலத்தை கணித்த ஜோதிடர் ஒருவர், அவருக்கு மீண்டும் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை வனிதா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துகள் என்று கமெண்ட் ச...
உடல்நிலை சரியானதும் ‘அந்தகன்’ படப்பிடிப்பில் இணைந்த கார்த்திக்!

உடல்நிலை சரியானதும் ‘அந்தகன்’ படப்பிடிப்பில் இணைந்த கார்த்திக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
உடல்நிலை சரியானதும் ‘அந்தகன்’ படப்பிடிப்பில் இணைந்த கார்த்திக்! பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். மேலும் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்திக் அந்தகன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். உடல்நலப் பிரச்சனை காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், நலமாகி வந்ததும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்....