வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

Tag: 2019 தேர்தல்

ஓ.பி.எஸ். மகன் வெற்றி முறைகேடால் கிடைத்தது என குற்றம்சாட்டி வழக்கு தொடர இளங்கோவன் முடிவு

ஓ.பி.எஸ். மகன் வெற்றி முறைகேடால் கிடைத்தது என குற்றம்சாட்டி வழக்கு தொடர இளங்கோவன் முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தேனி தொகுதியில் அதிக அளவில் முறைகேடு நடந்ததற்காக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்கிறார் இளங்கோவன். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில் 38 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றிக்காக உழைத்த கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாடு முழுவதும் அதிகார பலம், பண பலத்தால் மோடி வெற்றி பெறுள்ளார். தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அதிகாரபலம், பணபலத்தால் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எனினும் தேனியில் 4½ லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஓ...
எதிர்க்கட்சிகள் காங்கிரசுடன் கை கோர்க்காமல் சிதறியதால்தான் பாஜக வெற்றி பெற்றது – திருமாவளவன்

எதிர்க்கட்சிகள் காங்கிரசுடன் கை கோர்க்காமல் சிதறியதால்தான் பாஜக வெற்றி பெற்றது – திருமாவளவன்

Uncategorized
  சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியவில்லை. ஆனால் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஓரணியில் இல்லாமல் தனியாக கூட்டணி போட்டதால் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தொடர்கிறது. தமிழகத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் நின்று நீண்ட இழுபறிக்கு பின் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது: "தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியோடு மாநில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டிதிட்டது போல் மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியோடு எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தால் பாஜக தோற்றுப் போயிருக்கும் . எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிதறி இருந்தது பாஜகவுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது" என்ற...
வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் – சத்யபிரதா சாஹூ

வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் – சத்யபிரதா சாஹூ

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்* *36ஆயிரம் காவலர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு வழங்குவர்* *1,520 துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்* *8 மணிக்கே தபால் வாக்குகளுடன் மின்னணு இயந்திர வாக்குகளையும் எண்ணும்பணி தொடங்கும்* *மின்னணு இயந்திரங்களில் எண்ணப்பட்டபின்னரே ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும்* *VOTER HELPLINE மொபைல் ஆப் மூலமும் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது* - *சத்யபிரதா சாஹூ* ...
தேர்தல் பிரசாரத்தில் சாதியை பயன்படுத்துகிறார் மோடி? – பிரியங்கா கடும் கண்டனம்

தேர்தல் பிரசாரத்தில் சாதியை பயன்படுத்துகிறார் மோடி? – பிரியங்கா கடும் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்குட்பட்ட முன்ஷிகஞ்ச் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரின் குறைகளை கேட்க விரும்பாத நிலையில் பா.ஜனதாவினர் உள்ளனர். வேலைவாய்ப்பு குறித்து இளைஞர்களுக்கு போலி வாக்குறுதி அளிக்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி தனது சாதியை பயன்படுத்தி உள்ளார். அவர் என்ன சாதி என்று இப்போதுவரை எனக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ளவும் நாங்கள் விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள், தேர்தல் பிரசாரத்தில் சாதியை பயன்படுத்தாமல், வளர்ச்சி பற்றியே பேசுகிறார்கள். தனிப்பட்ட விமர்சனம் செய்வது இல்லை. ஆனால், சாதி என்பது முக்கியமானது என்று நினைக்கும் அளவுக்கு பிரதமரை மாற்றியது எது? அந்த அளவுக்கு அவர் கீழிறங்கி விட்டார். அமேதி தொகுதியில் போட்டிய...
பா.ஜ.க.,வின் அத்துமீறல்களை மவுனமாக வேடிக்கை பார்க்கும்  தேர்தல் கமிஷன் –  ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பா.ஜ.க.,வின் அத்துமீறல்களை மவுனமாக வேடிக்கை பார்க்கும் தேர்தல் கமிஷன் – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் கூறியதாவது: தேர்தல் கமிஷன், நாட்டு மக்களை பெரிதும் ஏமாற்றி விட்டது. பா.ஜனதாவின் அத்துமீறல்கள், பிரதமர் மோடியின் உரைகள், பா.ஜனதாவால் செலவழிக்கப்படும் பெருமளவு பணம் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. எதிர்க்கட்சி வேட்பாளர்களின் சிறு செலவுகள் என்று கூறப்படுவதை எல்லாம் அவர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கிறது. அதே அணுகுமுறையை மேற்கொண்டால், பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவரும் தகுதியிழப்புக்கு ஆளாக வேண்டி இருக்கும். பா.ஜனதா தனது தோல்வியை மறைக்க ‘தேசியவாதம்’ என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இங்கு எல்லோரும் தேசவிரோதியாகவா இருந்தார்கள்? எல்லோரும் தேசபக் தர்கள்தான். எந்த தேசபக்தரையும் தேசவிரோதியாக கருத முடியாது. ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு, இந்த பிரசாரத்தை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது. ...
தமிழ் வீரன் வைகோவின் குரல் மீண்டும் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் – வைரமுத்து நெகிழ்ச்சி

தமிழ் வீரன் வைகோவின் குரல் மீண்டும் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் – வைரமுத்து நெகிழ்ச்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடாளுமன்றத்தில் விரைவில் தமிழ் வீரனின் குரல் ஓங்கி ஒலிக்கும்! வைகோவை சந்தித்தபின் வைரமுத்து பேட்டி மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, இன்று மாலை 6 மணி அளவில் அவரது அண்ணாநகர் இல்லத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சந்தித்த்து, 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தார். அது வைகோ மகன்  துரை வையாபுரியும் உடன் இருந்தார். வைகோவை  சந்தித்து விட்டு வந்து செய்தியாளர்களிடம் கவிஞர் வைரமுத்து கூறியதாவது:- “திராவிட இயக்கத்தின் சிங்க முகத்தைப் பார்க்க வந்தேன்; போர்வாளை வாழ்த்த வந்தேன். அண்மைக் காலமாக நான் மகிழ்ச்சியில் இருக்கிறேன். தாய்க் கழகத்தோடு, கலைஞர் வளர்த்த பேரியக்கத்தோடு, தளபதியோடு புரட்சிப் புயல் வைகோ அவர்கள் தோழமையாக, நட்பாக, அன்பாக, குடும்பமாக இணைந்து கொள்கைக் கூட்டணியை வளர்த்தெடுக்கிறா...
வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் – மதுரை கலெக்டர் அதிரடி மாற்றம்

வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் – மதுரை கலெக்டர் அதிரடி மாற்றம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை முடிவில் மதுரை கலெக்டர் உட்பட தொடர்புடைய அதிகாரிகளை இடமாற்றம் செய்து நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உள்ளது. இது தொடர்பாக நீதிபதிகள் நேற்றிரவு 7 மணியளவில் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன், மேற்கு மதுரை சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர், போலீஸ் உதவி கமிஷனர் (குற்றப்பிரிவு) மோகன்தாஸ் ஆகியோர் தாசில்தார் சம்பூரணம், மாநகராட்சி ஊழியர்கள் சூர்யபிரகாசம், ராஜபிரகாஷ், சிவராமன் ஆகியோரை மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதிக்க காரணமாக இருந்துள்ளனர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த அதிகாரிகளை எல்லாம் கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும். இவர்கள் ...
அன்புமணிக்காக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதா ? தர்மபுரியில் பல வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை

அன்புமணிக்காக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதா ? தர்மபுரியில் பல வார்டுகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைத்து, தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’ தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியில் உள்ள 8 வாக்குச்சாவடிகள், பூந்தமல்லி மற்றும் கடலூரில் உள்ள தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைத்திருக்கிறோம். பட்டன் வேலை செய்யாதது, கள்ள ஓட்டு பதிவு புகார், வாக்குச்சாவடியைக் கைப்பற்றியதாக எழுந்த குற்றச்சாட்டு, தேர்தல் அதிகாரிகளின் அறிக்கை ஆகியவற்றை வைத்து தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருக்கிறோம். மதுரையில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றதாக எழுந்த புகார் தொடர்பாக, வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எதற்காக வட்டாட்சியர் அங்கு சென்றார் என்பது பற்றி விசாரணை நடைபெற்று ...
வெளியானது அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல்!

வெளியானது அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 5, பா.ம.க.வுக்கு 7, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.* *இந்த கூட்டணியில், இடம் பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கிரவுன் பிளாசா ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொகுதிகள் பட்டியலை வெளியிட்டனர்.* *அதிமுக:* தென் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பூர் நீலகிரி பொள்ளாச்சி கிருஷ்ணகிரி கரூர் பெரம்பலூர் சிதம்பரம் நாகை மய...
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி  7 கட்டங்களாக நடைபெறுகிறது!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
*மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.* *ஏப்ரல் 11ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.* *இரண்டாவது கட்ட தேர்தல் - ஏப்ரல் 18ஆம் தேதி.* *மூன்றாவது கட்ட தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும்.* *வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்தப்படும் - *10 லட்சம் காவல்நிலையங்கள் தேர்தல் ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன *மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன - *பிரச்சனைக்குரிய வாக்குசாவடிகளில் சிசிடிவி பொருத்தப்படும் - *வாக்கு எந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இந்தமுறை இடம்பெறும் *சொத்து விவரங்களை வேட்பாளர்கள் முழுமையாக தாக்கல் செய்யாவிட்டால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் தலைமை தேர்தல் ஆணையர்.* *பொதுமக்கள் புகார் அளிக்கும் விதமாக இலவச மொபைல் ஆப் அறிமுகப்படுத்தும்.* *தேர்தல் தொடர்பான புகார்க...