சனிக்கிழமை, செப்டம்பர் 30
Shadow

Tag: CONGRESS

அமோக வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் – தொண்டர்கள் உற்சாகம்!

அமோக வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் – தொண்டர்கள் உற்சாகம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. மொத்தம் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்கு வித்தியாசம் அதிகமாகிக்கொண்டே சென்றது. இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனும் பின்தங்கினர். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இறுதிச் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று இரண்டா...
ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு !

ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25ம் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். கனிமொழி எம்.பி. ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார். இவர்களைத் தவிர தி.மு.க அமைச்சர்கள் எம்.எல்.ஏக்.கள், தேர்தல் பணி குழுவினர் வீதி, வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இதே போல் காங்கிரஸ் தலைவர் அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் ஆகியோர் ஆதரவு திரட்டினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாள...
அதானி பையை நிரப்புவதை நிறுத்துங்கள்: பிரதமர் மோடி மீது ராகுல் பாய்ச்சல்!

அதானி பையை நிரப்புவதை நிறுத்துங்கள்: பிரதமர் மோடி மீது ராகுல் பாய்ச்சல்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அதானி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தாக்கி வருகிறார். பிரதமர் மோடியை விமர்சித்தும் வருகிறார். "அதானி உடனான உறவு என்ன என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும், அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தி வருகிறார். பிரதமர் மோடி, தனது நண்பர் அதானியை பாதுகாக்கிறார் எனவும் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் நேற்று அவர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசு தனது பட்ஜெட்டில் பணவீக்கம் பற்றி பேசுவதுகூட இல்லை. வேலையில்லா திண்டாட்டம் பற்றி குறிப்பிடக்கூட இல்லை. ஏனென்றால், பிரதமர் பணவீக்கத்தையும் சரி, வேலையில்லா திண்டாட்டத்தையும் சரி கண்டுகொள்வதே இல்லை. பிரதமர் மோட...
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் கமல்ஹாசன் போட்டி!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் கமல்ஹாசன் போட்டி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கே மீண்டும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இல்லையென்றால் அவரது மனைவி வரலட்சுமி, 2-வது மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் மனைவி பூர்ணிமா ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இளங்கோவன் போட்டியிட விரும்பாதபட்சத்தில் தனது ஆதரவாளர் யாருக்காவது சீட் கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து இளங்கோவனை போட்டியிட அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ...
காங்கிரஸ் தலைவர் தேர்தல்- மல்லிகார்ஜூன கார்கே வெற்றி!

காங்கிரஸ் தலைவர் தேர்தல்- மல்லிகார்ஜூன கார்கே வெற்றி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
பாராளுமன்றத்துக்கு 2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். தற்காலிக தலைவராக சோனியா பொறுப்பேற்றார். ராகுலை மீண்டும் தலைவராக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அவர் ஏற்கவில்லை. இதற்கிடையே காங்கிரசில் அதிருப்தி தலைவர்களாக உருவான ஜி-23 தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு பதிலாக புதிதாக ஒருவரை தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன் பேரில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அவர்கள் இருவரும் நாடு முழுவதும் சென்று காங்கிரசாரிடம் ஆதரவு திரட்டினார்கள். இ...
கேரளாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் திரளாக பங்கேற்ற பெண்கள்-இளைஞர்கள்!

கேரளாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் திரளாக பங்கேற்ற பெண்கள்-இளைஞர்கள்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய பாத யாத்திரை கடந்த 11-ந் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது. இன்று அதிகாலை ராகுல் காந்தி ஆலப்புழா மாவட்டம் சேர்தலாவில் இருந்து தொடங்கினார். முன்னதாக தான் தங்கியிருந்த கல்லூரி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தபின்பு, தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பின்பு ராகுல் காந்தி தொண்டர்களுடன் பாதயாத்திரை மேற்கொண்டார். இன்றைய பயணத்தில் ராகுல் காந்தியுடன் ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் கலந்து கொண்டனர். இதுபோல ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்ட பகுதிகளில் காலையிலேயே ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்தியுடன் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் முரளீதரன், பவன்கேரா ...
அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம்!

அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்தியது. கன்னியாகுமரியில் நடைபெற்ற போராட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இது தொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. கூறியிருப்பதாவது:- இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் மூழ்க செய்து, இந்திய ராணுவத்தின் தரத்தை கேள்வி குறியாக்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அழைப்பை ஏற்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இன்று குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினோம். ...
250 சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு- ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை!

250 சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு- ப.சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் புகுந்து இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு, அருகில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் இன்று காலை 7.30 மணி அளவில் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது. டெல்லியில் இருந்து வந்திருந்த 14 சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் ஆகியவற்றுக்குள் ஒரே நேரத்தில் 2 குழுக்களாக பிரிந்து சென்றனர். பின்னர் வீட்டில் இருந்த பணியாளர்களிடம் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் குறித்தும் விசாரித்தனர். சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் மீதும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு...
காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்குகிறது!

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்குகிறது!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது. ஏப்ரல் 16-ந்தேதியில் இருந்து மே மாதம் 31-ந்தேதிக்குள் வட்டார தலைவர்கள், பிரதேஸ் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் ஜூலை 20-ந்தேதிக்குள் மாவட்ட தலைவர்கள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். ஜூலை 21-ந் தேதியில் இருந்து ஆகஸ்டு 20-ந் தேதிக்குள் மாநில பொதுக்குழு, செயற்குழு, மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். மாநில தலைவர்களுக்கான தேர்தல் ஆகஸ்டு 21-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 20-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தேர்தல் அக்டோபர் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்படும். இந்த தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு நவம்பர் மாதம் அகில இந்திய தலைவருக்கான தேர்தல் நடைபெறும். உட்கட்சி தேர்தல...
ராகுல்காந்தி குறித்த அவதூறு பேச்சால் அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள் – பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை!

ராகுல்காந்தி குறித்த அவதூறு பேச்சால் அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள் – பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  ராகுல்காந்தி குறித்த அவதூறு பேச்சால் அசாம் முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள் - பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை! உத்தரகாண்டில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நேற்று முன் தினம் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஹிமந்தா, காங்கிரஸ் மீதும் ராகுல் காந்தி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?. நமது ராணுவ வீரர்கள் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பார்கள். ஆதாரம் கேட்டு கேள்வி எழுப்ப உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?’ என்றார். ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் கருத்துக்கள் அரசியலில் ப...