“கள்வன்” படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமாரின் அர்ப்பணிப்பு அலாதியானது” – இயக்குநர்-ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர்
*'கள்வன்' படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமாரின் அர்ப்பணிப்பு அலாதியானது” - இயக்குநர்-ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர்!*
இயக்குநர்களின் கற்பனையை வசீகரிக்கும் காட்சிகளாக மாற்றும் திறமை படைத்தவர்கள் ஒளிப்பதிவாளர்கள். ஆனால், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் இரண்டிலும் சிறந்து விளங்கும் ஒருவர் படம் இயக்கும்போது நிச்சயம் அது சிறப்பானதாக இருக்கும். அப்படித்தான் ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகும் 'கள்வன்' படம் சிறப்பாக வந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் மதிப்பிற்குரிய ஜி. டில்லி பாபு தயாரிக்கும் இந்த பரபரப்பான அட்வென்ச்சர் - ஆக்ஷன் திரைப்படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.
ஒளிப்பதிவாளர்-இயக்குநர் பி.வி. ஷங்கர் கூறும்போது, “சில...