வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: Kamalhasan

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து திடீரென கமல் விலகியதற்கு சம்பள சிக்கல் காரணமா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து திடீரென கமல் விலகியதற்கு சம்பள சிக்கல் காரணமா?

CINI NEWS, HOME SLIDER, TV news, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  இந்தியில் மிகப் பெரிய ஹிட் அடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் அறிமுகப்படுத்தியது ஸ்டார் விஜய். இந்தியில் ஒருமுறை கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்கு 100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் என்ற கான்செப்ட் கண்களை விரிவடைய செய்தது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். தமிழில் பிக் பாஸ் முதல் அறிமுகம் என்பதால் மிகப் பெரிய ஹிட் அடித்தது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது கூடுதல் பலமானது. அவரின் கண்டிப்பு கலந்த மரியாதை, போட்டியாளர்களை பதில் பேச விடாமலே தப்பை புரிய வைப்பது, தமிழிலே பேசி நிகழ்ச்சியை கொண்டு போவது என வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே கிடைக்கும் கமலின் தரிசனம் பிக் பாஸ் ஷோவுக்கு மிகப் பெரிய பலம் சேர்த்தது இவரைத் தவிர வேர யாரும் இந்த நிகழ்ச்சிய...
கோவை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்!

கோவை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கோவை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்! கோவையில் ஓட்டலில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கூறியிருப்பதாவது, இரவு 11 மணியை தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில் 10.30 மணிக்கு முன்னதாகவே போலீசார் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரை தாக்கியது சாத்தான்குளம் படுகொலைகளை நினைவு படுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது, அரசு நிர்வாகத்தின் கடமை என குறிப்பிட்டுள்ளார். இதேபோல கோவை எம்.பி. நடராஜன் உள்ளிட்டோரும் சப்-இன்ஸ்பெக்டருக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அவர் கூறுகையில் பெண்கள், குழந்தைகள் மேல் நடத்தப்பட்ட தடியடி கண்டிக்க கூடியது. தற்போது சப்-இன்ஸ்பெக்டர் வேறுதுறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது கண் துடைப்பு போல் உள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய போலீ...
கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு!

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு!

HOME SLIDER, politics, செய்திகள், நடிகர்கள்
கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் திடீர் ஆய்வு! கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவியது. நேற்று காலை சென்னையில் தனது வாக்கை பதிவு செய்த கமல்ஹாசன், உடனடியாக அங்கிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை வந்தார். கோவையில் தான் போட்டியிடும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வாக்குப்பதிவு விவரம், எதாவது பிரச்சனைகள் உண்டா? என தேர்தல் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் தோல்வி பயத்தில் உள்ளவர்கள் டோக்கன் வழங்கி பணப்பட்டுவாடா செய்வதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். தொட...
ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது – கமல்ஹாசன்

ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது – கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறிய நடிகர் ரஜினிகாந்த், இன்று உடல்நிலையை கருத்தில் கொண்டு, தான் அரசியலுக்கு வரமுடியவில்லை என பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ‘ ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றம் இருந்தாலும்; அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். அவரது ஆரோக்யம் எனக்கே முக்கியம். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும்’ என்று கூறினார்....
பொள்ளாச்சி சம்பவம் நடந்து 600 நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை – கமல்

பொள்ளாச்சி சம்பவம் நடந்து 600 நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை – கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
பொள்ளாச்சி சம்பவம் நடந்து 600 நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார். மநீம தலைவர் கமல்ஹாசன் வேளாங்கண்ணியில் இன்று 3ம் நாள் பிரசாரத்தை துவக்கினார். காலை 9.30 மணிக்கு தனியார் ஓட்டலில் பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நாங்கள் பழிவாங்கும் அரசியல்வாதி அல்ல. பழிபோடும் அரசியல்வாதி அல்ல. வழிகாட்டும் அரசியல்வாதி. மக்கள் நீதி மய்யம் மக்கள் மையமாக இருக்கும். இங்கு வந்துள்ள மகளிருக்கு பாதுகாப்பாக இருப்போம். பிற அரசியல்வாதிகள் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி வருகிறார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு வர சொல்லவில்லை. இது தானாக வந்துள்ளது. இது கூட்டம் அல்ல, குடும்பம். ஓட்டு சேர்க்க உங்களிடம் நான் வரவில்லை. சேகரித்து கொடுங்கள் என கேட்டு வந்துள்ளேன். மகளிரிடம் ஏன் பேசுகிறேன் என்றால் ஆண்கள் செல்ல முடியாத இடத்திற்கெ...
வெளிப்படையாக அரசு இல்லாததால் கொரானா பரவல் அதிகரித்துள்ளது – கமல் குற்றச்சாட்டு

வெளிப்படையாக அரசு இல்லாததால் கொரானா பரவல் அதிகரித்துள்ளது – கமல் குற்றச்சாட்டு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அரசு வெளிப்படையாக இல்லாத்தால் தான் கொரானா இப்படி பரவி உள்ளது என கமல்ஹாசன் குற்றம் சாட்டி உள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனை திறனை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தினார். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எவ்வளவு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன எந்த தகவல் குறித்து கேள்வி எழுந்துள்ளன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன்‘‘வெளிப்படையின்றி செயல்பட்டதால்தான் ஊரடங்கிற்குள் ஊரடங்கு என காலம் நீள்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரி...
சென்னையில் கொரானாவை ஒழிக்க கமல்ஹாசன் தொடங்கிய நாமே தீர்வு..!

சென்னையில் கொரானாவை ஒழிக்க கமல்ஹாசன் தொடங்கிய நாமே தீர்வு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கொரானா பிடியில் இருந்து சென்னையை மீட்க நாமே தீர்வு திட்டத்தை தொடங்கினார் மக்கள் நீதி மய்யத் தலைவர கமல்ஹாசன்.   ஜூன் 5ம் தேதியான இன்று உலக சுற்றுச் சூழல் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 'நாமே தீர்வு' என்ற தன்னார்வலர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளார் கமல். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இன்று உலக சுற்றுச்‌ சூழல்‌ தினம்‌. உலகத்தைப் பசுமையாக மாற்றப் பல வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கும்‌ நாம்‌, இன்று நம்‌ சென்னையையும்‌ வேறு ஒரு பச்சைக்கு மாற்ற வேண்டியதிருக்கிறது. கரோனாவுக்கு எதிரான இன்று நடக்கும்‌ போரில்‌ என்ன செய்வார்கள்‌ என்று காத்திருந்தும்‌, ஏதாவது செய்வார்கள்‌ என்று பார்த்திருந்தும்‌ களைத்தவர்களின்‌, நாமாவது ஏதாவது செய்ய வேண்டும்‌ என்ற சிந்தனை தான்‌ நாமே தீர்வு. இந்த நோயின்‌ தீவிரத்தை மருத்துவர்கள்‌ கட்டு...
என் சகாக்களை இழந்து விட்டேன் – கமல் உருக்கம்

என் சகாக்களை இழந்து விட்டேன் – கமல் உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  என் சகாக்களை இழந்து விட்டேன் - கமல் உருக்கம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று இரவு நடந்து வந்தது. அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நிகழ்ந்தது குறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள கமலஹாசன் ” எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என...