’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் முதலாவதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சவுந்தர் பைரவி பேசியதாவது, “இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள இயக்குநர் ரவிக்குமார், நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினர் அனைவரையும் வரவேற்கிறோம்” என்றார்.
நடிகர் பாலசரவணன் பேசியதாவது, “இவ்வளவு நாள் எதற்காக காத்திருந்தோமோ அது நடக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரவிக்குமாருக்கும், சிவகார்த்திகேயன் பிரதருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”.
பாடலாசிரியர் விவேக் பேசியதாவது, “ஒருத்தருக்கு வெற்றி கஷ்டப்பட்டு கிடைக்கும்போதுதான்...